ஆஸ்திரேலியாவில் 2021 டொயோட்டா ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன் கார் அறிமுகமானது!! இந்தியாவை வந்தடையுமா?

2021ஆம் ஆண்டிற்காக அப்டேட் செய்யப்பட்ட டொயோட்டா சி-எச்ஆர் ஜிஆர் ஸ்போர்ட் கார் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த டொயோட்டா காரை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவில் 2021 டொயோட்டா ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன் கார் அறிமுகமானது!! இந்தியாவை வந்தடையுமா?

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ள டொயோட்டாவின் ஜிஆர் ஸ்போர்ட் வெர்சனான சி-எச்ஆர் க்ராஸ்ஓவரின் விலை அங்கு 37,665 ஆஸ்திரேலியன் டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.20.69 லட்சமாகும்.

ஆஸ்திரேலியாவில் 2021 டொயோட்டா ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன் கார் அறிமுகமானது!! இந்தியாவை வந்தடையுமா?

இந்திய சந்தைக்கும் வரலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த கார் இந்திய சாலையில் சில முறை சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதே சி-எச்ஆர் என்ற பெயரில் இங்கு அறிமுகமாகுமா என்பது தெரியவில்லை.

ஆஸ்திரேலியாவில் 2021 டொயோட்டா ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன் கார் அறிமுகமானது!! இந்தியாவை வந்தடையுமா?

ஆஸ்திரேலியாவில் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதை காட்டிலும் இந்தியாவில் இந்த ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன் காரின் விலை சற்று ப்ரீமியம் ஆக ரூ.24- 28 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. வழக்கமான டொயோட்டா சி-எச்ஆர் மாடல் உடன் ஒப்பிடுகையில், 2021 சி-எச்ஆர் ஜிஆர் ஸ்போர்ட் வெளிப்பக்கம் & உட்பக்கம் மற்றும் மெக்கானிக்கல் பாகங்களில் மேம்பாடுகளை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 2021 டொயோட்டா ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன் கார் அறிமுகமானது!! இந்தியாவை வந்தடையுமா?

இந்த 2021 மாடலில் ரீ-டிசைனில் மூடுபனி விளக்குகள், ஸ்போர்டியரான க்ரில்லின் தாழ்வான பகுதி, ஏரோ லிப் உடன் புதிய முன்பக்க பம்பர், செங்குத்தான பார் அப், 19 இன்ச் அலாய் சக்கரங்கள், 225/45 டயர்கள், எல்இடி லைட்டிங், ஜிஆர் லோகோ உடன் வெள்ளை ப்ரேக் காலிபர்கள் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் 2021 டொயோட்டா ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன் கார் அறிமுகமானது!! இந்தியாவை வந்தடையுமா?

உட்புறத்தில் கருப்பு நிறத்தில் லெதர் இருக்கைகள், ஜிஆர் அழுத்து பொத்தான், ஸ்போர்டியான முன்பக்க இருக்கைகள், சில்வர் ட்ரிம், 8 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், இரட்டை-நிலை ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல, மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள், எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக், 4.2-இன்ச்சில் ஒட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரை உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவில் 2021 டொயோட்டா ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன் கார் அறிமுகமானது!! இந்தியாவை வந்தடையுமா?

பயணிகளின் பாதுகாப்பிற்கு ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, ரிவர்ஸ் வரும்போது குறுக்கே வாகனம் வருவதை எச்சரிக்கும் வசதி, முன்பக்கமாக வாகனம் மோதுவதை தடுக்கும் வசதி போன்றவற்றை ஏற்றுள்ள இந்த சி-எச்ஆர் காரில் 1.8 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் 2021 டொயோட்டா ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன் கார் அறிமுகமானது!! இந்தியாவை வந்தடையுமா?

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 128 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. காரின் சஸ்பென்ஷன் அமைப்பை டொயோட்டா நிறுவனம் 15மிமீ தாழ்வாக பொருத்தியுள்ளது. அதேபோல் ஸ்டேரிங் சக்கரத்தின் செயல்பாட்டையும் டொயோட்டா மேம்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2021 Toyota C-HR GR Sport Launched In Australia; India Next
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X