பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அதன் ப்ரீயஸ் ஹைப்ரீட் காம்பெக்ட் காரை இந்தியாவில் திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...

2017ல் டொயோட்டா நிறுவனம் நான்காம் தலைமுறை எக்ஸ்டபிள்யூ50 ப்ரீயஸ் மாடலை ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.38.96 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...

ஆனால் அதன்பின் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படுவதற்கு முன்னரே டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து எந்தவொரு அறிவிப்புமின்றி இந்த ஃபேஸ்லிஃப்ட் ப்ரீயஸ் கார் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது திரும்ப அழைக்கப்பட்டுள்ள ப்ரீயஸ் ஹைப்ரீட் கார் 2013 மார்ச் 31ல் இருந்து 2015 நவம்பர் 9ஆம் தேதிக்குள்ளாக தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...

இதன்படி பார்க்கும்போது வெறும் 4 ப்ரீயஸ் கார்கள் மட்டும் தான் திரும்ப அழைக்கப்படுகின்றன. மேலும் இந்த நடவடிக்கையில் உட்படுபவை மூன்றாம் தலைமுறை எக்ஸ்டபிள்யூ30 ஆகும். இந்த நான்கு எக்ஸ்டபிள்யூ30 ப்ரீயஸ் கார்களும் சிபியூ முறையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...

எக்ஸ்டபிள்யூ 30 ப்ரீயஸ் ஹைப்ரீட் மாடல் உலகளவில் 2009ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திரும்ப அழைப்பிற்கு காரணமாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மூன்றாம் தலைமுறை டொயோட்டா ப்ரீயஸ் காரின் ஹைப்ரீட் சிஸ்டத்தில் பிழை ஏற்பட்டால் ‘தோல்வியுற்ற ட்ரைவிங் மோடில்' நுழைய முடியாமல் போய்விடுகிறது.

பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...

இதன் காரணமாக கார் ஆற்றலை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பவர் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் ப்ரேக்கிங் சிஸ்டங்கள் ஆக்டிவ்-ஆக இருந்தாலும், இத்தகைய நிகழ்வு அதிவேகத்தின்போது ஏற்படுகிறது. இது மிக பெரிய அளவிலான விபத்திற்கும் வழி வகுக்கும்.

பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...

இந்தியாவில் தனி பயன்பாட்டிற்கு மாறாக ப்ரீயஸ் கார்கள் அதிகளவில் ஹோட்டல் & ட்ராவல் வணிகத்திற்காக தான் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வகையில் மூன்றாம் தலைமுறை ப்ரீயஸ் ஹைப்ரீட் காரை வாங்கிய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பவர் மேனேஜ்மெண்ட் இசியூ ரீப்ரோகிராமிற்காக அறிவிப்பு அனுப்பப்பட்டுவிட்டன.

பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...

அவர்கள் இந்த பழுதினை டொயோட்டாவின் முக்கியமான டீலர்ஷிப்களில் இலவசமாக சரி பார்த்துக்கொள்ளலாம். இதற்கு மிக குறைவான நேரம் ஆகும் என்றாலும் கொரோனாவினால் இந்தியாவில் சிவப்பு பகுதிகளில் உள்ள டீலர்ஷிப்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆரஞ்ச் மற்றும் பச்சை பகுதிகளில் உள்ள டீலர்ஷிப்களை தான் இந்த வாடிக்கையாளர்கள் அணுக முடியும்.

பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...

கடைசியாக 2017ல் அறிமுகமான டொயோட்டா ப்ரீயஸ் மாடலில் 1.8 லிட்டர் விவிடி-ஐ 4-சிலிண்டர் என்ஜின், 71 பிஎச்பி மற்றும் 163 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படுகிறது. இதில் எரிபொருள் என்ஜின் 5,200 ஆர்பிஎம்-ல் 97 பிஎச்பி பவரையும் 3,600 ஆர்பிஎம்-ல் 142 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...

இந்த ஹைப்ரீட் என்ஜின் அமைப்பு மூலமாக கிட்டத்தட்ட 120 பிஎச்பி பவரை கார் பெற முடியும். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள சிவிடி கியர்பாக்ஸ் ஆற்றலை முன் சக்கரங்களுக்கு வழங்குகிறது. தற்சமயம் டொயோட்டா நிறுவனத்தில் இருந்து இந்திய சந்தையில் ஹைப்ரீட் காராக காம்ரி மாடல் மட்டும் தான் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Prius hybrid recalled in India over safety concerns – 4 units affected
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X