சொக்க வைக்கும் அழகு... கவர்ச்சியாக உருமாறிய டொயோட்டா குவாலிஸ் கார்... பாக்க பாக்க ஆசையா இருக்கு...

டொயோட்டா குவாலிஸ் கார், சொக்க வைக்கும் அழகுடன் புதிய அவதாரம் எடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சொக்க வைக்கும் அழகு... கவர்ச்சியாக உருமாறிய டொயோட்டா குவாலிஸ் கார்... பாக்க பாக்க ஆசையா இருக்கு...

இந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக டொயோட்டா குவாலிஸ் இருந்து வருகிறது. எம்பிவி ரக காரான டொயோட்டா குவாலிஸ், இந்திய சந்தையில் கடந்த 2000-மாவது ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு களமிறக்கப்பட்ட உடனேயே இந்திய சந்தையில் டொயோட்டா குவாலிஸ் மிகவும் வேகமாக பிரபலம் அடைய தொடங்கியது.

சொக்க வைக்கும் அழகு... கவர்ச்சியாக உருமாறிய டொயோட்டா குவாலிஸ் கார்... பாக்க பாக்க ஆசையா இருக்கு...

சாலைகளில் சர்வ சாதாரணமாக பார்க்க கூடிய கார்களில் ஒன்றாகவும் டொயாட்டா குவாலிஸ் மாறியது. ஆனால் அறிமுகம் செய்யப்பட்ட நான்கே ஆண்டுகளில், அதாவது கடந்த 2004ம் ஆண்டு, குவாலிஸ் காரை டொயோட்டா நிறுவனம் விற்பனையில் இருந்து விலக்கி கொண்டது. அதற்கு பதிலாக டொயோட்டா இன்னோவா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

சொக்க வைக்கும் அழகு... கவர்ச்சியாக உருமாறிய டொயோட்டா குவாலிஸ் கார்... பாக்க பாக்க ஆசையா இருக்கு...

டொயோட்டா இன்னோவாவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தனிக்கதை. முன்னதாக டொயோட்டா குவாலிஸ் கார், மஹிந்திரா பொலிரோ, டாடா சுமோ ஆகிய கார்களுடன் போட்டியிட்டு வந்தது. விற்பனையில் இருந்து விலக்கப்பட்டு சுமார் 16 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையிலும், டொயோட்டா குவாலிஸ் காரை இன்னமும் பலர் வைத்துள்ளனர்.

சொக்க வைக்கும் அழகு... கவர்ச்சியாக உருமாறிய டொயோட்டா குவாலிஸ் கார்... பாக்க பாக்க ஆசையா இருக்கு...

டொயோட்டா குவாலிஸ் காரின் டிசைன், விசாலமான இடவசதி மற்றும் நம்பத்தன்மை வாய்ந்த இன்ஜின் ஆகியவையே இதற்கு காரணம். பழைய டொயோட்டா குவாலிஸ் கார்களை விட்டு பிரிய மனமில்லாமல், அதனை ஒரு சிலர் புதிது போல் மாடிஃபிகேஷன் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது ஒரு டொயோட்டா குவாலிஸ் புதிய அவதாரம் எடுத்துள்ளது.

சொக்க வைக்கும் அழகு... கவர்ச்சியாக உருமாறிய டொயோட்டா குவாலிஸ் கார்... பாக்க பாக்க ஆசையா இருக்கு...

துருப்பிடித்து கிடந்த பழைய டொயோட்டா குவாலிஸ் எம்பிவி கார் ஒன்றை கவர்ச்சிகரமாக மாடிஃபிகேஷன் செய்துள்ளனர். இது குறித்த காணொளி ஜேஜோன் டூல்ஸ் என்ற யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. துருப்பிடித்து கிடந்த பழைய டொயோட்டா குவாலிஸ் காருக்கு எப்படி புதிய தோற்றம் வழங்கப்பட்டது? என்பதை இந்த காணொளி நமக்கு காட்டுகிறது.

சொக்க வைக்கும் அழகு... கவர்ச்சியாக உருமாறிய டொயோட்டா குவாலிஸ் கார்... பாக்க பாக்க ஆசையா இருக்கு...

கராஜிற்கு வந்தபோது கார் எப்படிப்பட்ட நிலையில் இருந்தது? என்பதை காட்டுவதுடன் இந்த காணொளி தொடங்குகிறது. குவாலிஸ் காரின் பெரும்பாலான பாகங்கள் துருப்பிடித்து கிடந்ததை நம்மால் அந்த காணொளியில் பார்க்க முடிகிறது. அத்துடன் இது பழைய கார் என்பதால், பெயிண்டும் மங்கி போய் இருந்தது. ஆனால் துரு பிரச்னையை கச்சிதமாக சரி செய்துள்ளனர்.

சொக்க வைக்கும் அழகு... கவர்ச்சியாக உருமாறிய டொயோட்டா குவாலிஸ் கார்... பாக்க பாக்க ஆசையா இருக்கு...

டொயோட்டா குவாலிஸ் காரின் தரை மற்றும் உட்புறத்தில் ஒரு சில பாகங்களும் துருப்பிடித்து காணப்பட்டது. அவற்றையும் சரி செய்துள்ளனர். மாடிஃபிகேஷன் பணிகளின் ஒரு பகுதியாக காரின் உட்புறத்தில் இருந்த இருக்கைகள் அனைத்தும் கழற்றப்பட்டுள்ளது. இதனையும் நம்மால் காணொளியில் பார்க்க முடிகிறது. டொயோட்டா குவாலிஸ் காரின் டேஷ்போர்டு மிகவும் பழையதாக இருந்தது.

சொக்க வைக்கும் அழகு... கவர்ச்சியாக உருமாறிய டொயோட்டா குவாலிஸ் கார்... பாக்க பாக்க ஆசையா இருக்கு...

இதனால் அதற்கு புதிய தோற்றம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, கார்பன் ஃபைபர் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஸ்டியரிங் வீல் மற்றும் ஸ்டீரியோ உள்ளிட்ட ஒரு சில பாகங்கள் அப்படியே விடப்பட்டுள்ளன. இந்த மாடிஃபிகேஷன் பணிகளின் முடிவில், டொயோட்டா குவாலிஸ் கார் ஷோரூமில் இருந்து டெலிவரி பெறப்படும் புத்தம் புதிய காரை போல் மாறி விட்டது.

சொக்க வைக்கும் அழகு... கவர்ச்சியாக உருமாறிய டொயோட்டா குவாலிஸ் கார்... பாக்க பாக்க ஆசையா இருக்கு...

நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைபோல், இந்த காரின் பெயிண்ட் மங்கி விட்டது. இதன் காரணமாக கன் மெட்டல் க்ரே பெயிண்ட் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 16 இன்ச் அலாய் சக்கரங்களும் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன. மேலும் புத்துணர்ச்சியான தோற்றம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சொக்க வைக்கும் அழகு... கவர்ச்சியாக உருமாறிய டொயோட்டா குவாலிஸ் கார்... பாக்க பாக்க ஆசையா இருக்கு...

ஆனால் இன்ஜினில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. டொயோட்டா குவாலிஸ் காரின் அதே 2.4 லிட்டர் டீசல் இன்ஜின்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 75 பிஎச்பி பவரையும், 151 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

நம்மிடம் இப்படி ஒரு குவாலிஸ் கார் இருந்தால் பரவாயில்லையே என்ற ஆசையை தூண்டும் வகையில், இந்த மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பல டொயோட்டா குவாலிஸ் கார்கள் இப்படி மாடிஃபிகேஷன் செய்யப்படும் என நாம் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Toyota Qualis MPV Is Beautifully Restored To The Original. Read in Tamil
Story first published: Monday, August 10, 2020, 15:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X