டொயோட்டா ஹெரியர்... ஏற்கனவே முரட்டுத்தனமான இருக்கும் இதுல அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் வேறயா...!

இந்த வருட துவக்கத்தில் ஜப்பானிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹெரியர் எஸ்யூவி மாடலுக்கான ஆக்ஸஸரீகளை டொயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவற்றை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

டொயோட்டா ஹெரியர்... ஏற்கனவே முரட்டுத்தனமான இருக்கும் இதுல அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் வேறயா...!

டொயோட்டாவின் டிஆர்டி பிரிவின் ஜிஆர் பாகங்களின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த ஆக்ஸஸரீகள் ஹெரியர் மாடலின் ஸ்போர்டியான பண்பையும் தோற்றத்தையும் அதிகரிக்கவல்லன. இதற்காக சில செயல்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

டொயோட்டா ஹெரியர்... ஏற்கனவே முரட்டுத்தனமான இருக்கும் இதுல அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் வேறயா...!

நமது நாட்டு சந்தைக்கு டாடா ஹெரியர் மாடல் தான் பரீட்சயமானது. ஆனால் டொயோட்டாவின் ஹெரியர் மாடலானது அதனை விடவும் பழமையானதாகும். 90களில் இருந்தே ஜப்பானில் விற்பனையில் உள்ள டொயோட்டா ஹெரியர் முதன்முதலாக அறிமுகமானபோது லெக்ஸஸ் நிறுவனத்தின் ஆர்எக்ஸ் லக்சரி எஸ்யூவியை தோற்றத்தில் அடிப்படையாக கொண்டிருந்தது.

டொயோட்டா ஹெரியர்... ஏற்கனவே முரட்டுத்தனமான இருக்கும் இதுல அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் வேறயா...!

தற்போது விற்பனையில் இருப்பது இதன் நான்கு தலைமுறை காராகும். இதில் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-எலக்ட்ரிக் ஹைப்ரீட் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இதன் அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகளில் கருப்பு நிறத்தில் முன்புற ஸ்பாய்லர், பக்கவாட்டு ஸ்கிர்ட்ஸ் மற்றும் பின்புற டிஃப்யூஸர் உள்ளிட்டவை அடங்கும்.

டொயோட்டா ஹெரியர்... ஏற்கனவே முரட்டுத்தனமான இருக்கும் இதுல அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் வேறயா...!

இதில் பின்பக்க டிஃப்யூஸர் உடன் குவாட்-பைப்டு வளையாத இரும்பு எக்ஸாஸ்ட்டும் கொடுக்கப்படுகிறது. இவற்றுடன் முன்புற பம்பரில் உள்ள ஏர் வெண்ட்ஸிற்கு கார்னிஷ், கருப்பு நிறத்தில் 20-இன்ச் அலாய் சக்கரங்கள்-டயர்கள், கருப்பு மற்றும் சிவப்பு ஸ்ட்ரிப் உடன் பெல்ட்லைன் மற்றும் டெயில்லேம்ப்களுக்கு மேலே ஸ்பாய்லர் பாகங்கள் உள்ளிட்டவையும் கூடுதல் ஆக்ஸஸரீகளில் அடங்குகின்றன.

டொயோட்டா ஹெரியர்... ஏற்கனவே முரட்டுத்தனமான இருக்கும் இதுல அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் வேறயா...!

இவை மட்டுமின்றி ஜன்னல்களுக்கு சூரிய படலம், பூட்டிற்கு தரைப்பாய், சன்ஷேட் உள்பட பொதுவான ஆக்ஸஸரீகளையும் டொயோட்டாவின் டிஆர்டி பிரிவு இதில் சேர்த்துள்ளது. மற்றப்படி என்ஜின் செயல்திறனை மேம்படுத்துவதை இந்த பிரிவு கருத்தில் கொள்ளவில்லை.

டொயோட்டா ஹெரியர்... ஏற்கனவே முரட்டுத்தனமான இருக்கும் இதுல அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் வேறயா...!

இருப்பினும் ஹெரியர் காரின் பயண தரத்தையும் வேகத்தையும் அதிகரிக்கும் வகையில் செயல்திறன் கொண்ட டேம்பர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான ஆக்ஸஸரீகளை பெறும் டொயோட்டா ஹெரியர் மாடல் இந்திய சந்தைக்கு தற்போதைக்கு வருவதுபோல் தெரியவில்லை.

டொயோட்டா ஹெரியர்... ஏற்கனவே முரட்டுத்தனமான இருக்கும் இதுல அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் வேறயா...!

இந்நிறுவனம் இந்திய சந்தைக்காக தற்சமயம் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா அடிப்படையிலான காம்பெக்ட் எஸ்யூவி காரை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் அறிமுகமாகவுள்ள இந்த எஸ்யூவி கார் அர்பன் க்ரூஸர் என்ற முத்திரையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota GR Harrier revealed with sporty bits from TRD
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X