ஊரடங்கில் தளர்வு... தயாரிப்பு பணிகளை மீண்டும் துவங்கியது டொயோட்டா...!

டொயோட்டா கிர்லோஸ்லர் மோட்டார் நிறுவனம் அரசாங்கத்தின் வழிக்காட்டுதலின்படி தனது தொழிற்சாலை பணிகளை மீண்டும் துவங்கியுள்ளது. இதன்படி இந்நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஊரடங்கில் தளர்வு... தயாரிப்பு பணிகளை மீண்டும் துவங்கியது டொயோட்டா...!

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் மிக பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வளர்ந்த நாடுகள் உள்பட அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் சரிவை சந்தித்து வருகின்றன.

ஊரடங்கில் தளர்வு... தயாரிப்பு பணிகளை மீண்டும் துவங்கியது டொயோட்டா...!

எனவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுடன் பொருளாதார சீர் செய்யும் பணியிலும் அரசாங்கம் ஈடுப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் அமலில் இருந்து ஊரடங்கு கடந்த மே 3ஆம் தேதியுடன் முடிவடைவிருந்த நிலையில் மேலும் கூடுதலாக இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் தளர்வு... தயாரிப்பு பணிகளை மீண்டும் துவங்கியது டொயோட்டா...!

இருப்பினும் மே3ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கில் சிறிய தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி சில பகுதிகளில் தொழிற்சாலைகள் மற்றும் சிறு, குறு வணிகங்கள் மீண்டும் பணியை துவங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் தற்போது முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா அரசாங்கத்தின் பாதுகாப்பு வழிமுறைகளோடு மீண்டும் தொழிற்சாலை பணிகளை ஆரம்பித்துள்ளது.

ஊரடங்கில் தளர்வு... தயாரிப்பு பணிகளை மீண்டும் துவங்கியது டொயோட்டா...!

கட்டமுறையில் மீண்டும் பணியை துவங்கியுள்ள டொயோட்டாவின் மொத்த தயாரிப்பு மற்றும் விற்பனையை ஒரே நேரத்தில் துவங்குவது என்பது முடியாத காரியமாகும். ஏனெனில் பாகங்களை விற்பனை செய்பவர்களும், டீலர்களும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ளனர்.

மேலும் வைரஸின் பரவல் தீவிரமாக சில மாவட்டங்களில் ஊரடங்கு இன்னமும் கடுமையாகவே உள்ளன. இதனால் இந்நிறுவனம் மட்டுமின்றி தொழிற்சாலை பணிகளை துவங்கவுள்ள அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வழக்கமான பணிகள் அனைத்தும் மொத்தமாக துவங்க சில வாரங்கள் ஆகும்.

ஊரடங்கில் தளர்வு... தயாரிப்பு பணிகளை மீண்டும் துவங்கியது டொயோட்டா...!

இருப்பினும் டொயோட்டா நிறுவனம் தற்போதைக்கு பயிற்சி பணியாளர்களுடன் தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ளது. இவர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடனும் பாதுகாப்பு கவசங்களுடன் பணியில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஊரடங்கில் தளர்வு... தயாரிப்பு பணிகளை மீண்டும் துவங்கியது டொயோட்டா...!

ஏனெனில் தற்போதைய சூழலில் ஒவ்வொரு மனிதரின் பாதுகாப்பு விஷயத்திற்கும் முன்னுரிமை தர வேண்டியது கட்டாயமாகும். இதன் காரணமாக தனது தொழிற்சாலையில் உள்ள சுத்திகரிப்பு பொருட்களின் இருப்பை இனி வரும் ஒவ்வொரு நாளிலும் இந்நிறுவனம் கவனிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota resuming operations at its plant
Story first published: Tuesday, May 5, 2020, 23:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X