புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் டிஆர்டி ஸ்போர்டிவோ வெர்சன், இந்தோனிஷியாவில் வெளியீடு

அப்டேட் செய்யப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனரின் ஸ்போர்டியர் லெஜண்டர் வேரியண்ட்டான டிஆர்டி ஸ்போர்டிவோ இந்தோனிஷியாவில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் டிஆர்டி ஸ்போர்டிவோ வெர்சன், இந்தோனிஷியாவில் வெளியீடு

அப்டேட் செய்யப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் அதன் உலகளாவிய அறிமுகத்தை ஏற்கனவே தாய்லாந்து நாட்டு சந்தையின் மூலம் கண்டுவிட்டது. இந்தியாவில் ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் அடுத்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் டிஆர்டி ஸ்போர்டிவோ வெர்சன், இந்தோனிஷியாவில் வெளியீடு

இந்த நிலையில்தான் தற்போது இந்தோனிஷியாவில் இதன் டிஆர்டி ஸ்போர்டிவோ வெர்சன் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் விற்பனையாகும் தற்போதைய ஃபார்ச்சூனரில் அப்டேட்டான முன்பக்க பம்பர், திருத்தியமைக்கப்பட்ட பின்பக்க பம்பர் மற்றும் புதிய அலாய் சக்கரங்களுடன் சிறிய அளவிலான காஸ்மெட்டிக் மாற்றங்களை டொயோட்டா நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் டிஆர்டி ஸ்போர்டிவோ வெர்சன், இந்தோனிஷியாவில் வெளியீடு

ஸ்டாண்டர்ட் ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டில் சில்வர் நிறத்தில் வழங்கப்பட்டுள்ள திருத்தியமைக்கப்பட்ட க்ரில், நேர்த்தியான ஹெட்லேம்ப்கள், ஸ்போர்ட்டியரான பம்பர்கள் மற்றும் இரட்டை நிறத்தில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை டிஆர்டி ஸ்போர்டிவோ வேரியண்ட்டில் மாற்றாக கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் டிஆர்டி ஸ்போர்டிவோ வெர்சன், இந்தோனிஷியாவில் வெளியீடு

அதேநேரம் டிஆர்டி ஸ்போர்டிவோ எடிசனின் க்ரில் மற்றும் டிஆர்டி ஸ்போர்டிவோ வேரியண்ட்டிற்கான டிகால்களில் சிவப்பு நிறத்தை பார்க்க முடிகிறது. மேலும் மாற்றியமைக்கப்பட்ட டிசைனில் டெயில்லேம்ப்கள் மற்றும் ஸ்போர்டியர் பம்பர் உடன் காரின் பின்பக்க தோற்றமும் வேறுப்பட்டதாக உள்ளது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் டிஆர்டி ஸ்போர்டிவோ வெர்சன், இந்தோனிஷியாவில் வெளியீடு

ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புறத்தில் கூடுதல் வசதிகளாக கருப்பு நிற கேபினில் சுற்றிலும் விளக்குகள், 9.0 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மேற்கூரையில் பொருத்தப்பட்ட பின்புற பயணிகளுக்கான பொழுதுபோக்கு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் டிஆர்டி ஸ்போர்டிவோ வெர்சன், இந்தோனிஷியாவில் வெளியீடு

தற்போதைய ஃபேஸ்லிஃப்ட் அல்லாத ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்டிவோவில் 360 டிகிரி கேமிரா முக்கிய சிறப்பம்சமாக வழங்கப்படுகிறது. இது அப்படியே அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றப்படி ஃபார்ச்சூனரில் சன்ரூஃப் இந்த முறையும் வழங்கப்பட வாய்ப்பில்லை.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் டிஆர்டி ஸ்போர்டிவோ வெர்சன், இந்தோனிஷியாவில் வெளியீடு

அப்டேட் செய்யப்பட்டு இந்தியாவில் அறிமுகமாகும் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனரில் வழக்கமான 2.8 லிட்டர் டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் தான் தொடரப்படும் என தெரிகிறது. இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு தற்சமயம் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் டிஆர்டி ஸ்போர்டிவோ வெர்சன், இந்தோனிஷியாவில் வெளியீடு

டீசல் என்ஜினிற்கு மட்டும் கூடுதலாக கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் 4X4 ட்ரைவ்ட்ரெயின் தேர்வு கொடுக்கப்படுகிறது. பொதுவாக ஃபார்ச்சூனரின் டிஆர்டி வெர்சனில் காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டும்தான் கொண்டுவரப்படுகிறது, புதிய என்ஜின் தேர்வுகள் எதுவும் வழங்கப்படுவது இல்லை.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் டிஆர்டி ஸ்போர்டிவோ வெர்சன், இந்தோனிஷியாவில் வெளியீடு

அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகவுள்ள புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டின் விலை தற்போதைய மாடலின் விலையை காட்டிலும் சற்று ப்ரீமியமாக நிர்ணயிக்கப்படும். தற்சமயம் ஃபார்ச்சூனரின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலை ரூ.28.66 லட்சத்தில் இருந்து ரூ.36.88 லட்சம் வரையில் உள்ளது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Facelifted Toyota Fortuner TRD Sportivo Revealed
Story first published: Friday, October 16, 2020, 15:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X