செமயா இருக்கு... டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செமயா இருக்கு... டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனமும், சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனமும் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை, டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது.

செமயா இருக்கு... டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த கூட்டணியின் முதல் மாடலாக டொயோட்டா க்ளான்சா விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் கார்தான், டொயோட்டா பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு க்ளான்சா என்ற பெயரில் சந்தைக்கு வந்தது. டொயோட்டா க்ளான்சா காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

செமயா இருக்கு... டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த வரிசையில் டொயோட்டா-சுஸுகி கூட்டணியின் இரண்டாவது தயாரிப்பான டொயோட்டா அர்பன் க்ரூஸர் (Toyota Urban Cruiser) இந்திய சந்தையில் இன்று (செப்டம்பர் 23) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார்தான் டொயோட்டா பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு, அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது.

செமயா இருக்கு... டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

மிகவும் சவால் நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், சமீபத்தில் விற்பனைக்கு வந்த கியா சொனெட் மற்றும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களுடன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் போட்டியிடும்.

செமயா இருக்கு... டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின்தான், டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான கே-சீரிஸ், 4-சிலிண்டர், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும்.

செமயா இருக்கு... டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 105 எச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் இந்த இன்ஜின் வழங்கப்படுகிறது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் அனைத்து வேரியண்ட்களும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வை பெற்றுள்ளன.

செமயா இருக்கு... டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

அத்துடன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள், ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடனும் வந்துள்ளன. இந்த காரின் கேபினும் கிட்டத்தட்ட விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை போன்றேதான் இருக்கிறது. புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆட்டோமேட்டிக் ஏசி, 7 இன்ச் ஸ்மார்ட் பிளேகேஸ்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே சப்போர்ட், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை அர்பன் க்ரூஸர் பெற்றுள்ளது.

செமயா இருக்கு... டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

மேலும் எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், மல்டி-ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் ஆகியவையும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் இடம்பெற்றுள்ளன. டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கு ஏற்கனவே முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் உடனடியாக டெலிவரி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செமயா இருக்கு... டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

மிட், ஹை மற்றும் பிரீமியம் என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது. இதன் ஆரம்ப விலை 8.40 லட்ச ரூபாய் எனவும், டாப் வேரியண்ட்டின் விலை 11.30 லட்ச ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் வேரியண்ட் வாரியான விலை விபரத்தை கீழே காணலாம்.

செமயா இருக்கு... டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
  • மிட்-கிரேட் மேனுவல் - 8.40 லட்ச ரூபாய்
  • மிட்-கிரேட் ஆட்டோமேட்டிக் - 9.80 லட்ச ரூபாய்
  • ஹை-கிரேடு மேனுவல் - 9.15 லட்ச ரூபாய்
  • ஹை-கிரேடு ஆட்டோமேட்டிக் - 10.65 லட்ச ரூபாய்
  • பிரீமியம்-கிரேடு மேனுவல் - 9.80 லட்ச ரூபாய்
  • பிரீமியம்-கிரேடு ஆட்டோமேட்டிக் - 11.30 லட்ச ரூபாய்

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் விலைகள் அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Urban Cruiser Compact SUV Launched In India: Price, Specs And Other Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X