Just In
- 10 min ago
அப்படிபோடு... மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது!
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 2 hrs ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 2 hrs ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
Don't Miss!
- News
"ரொம்ப கஷ்டப்பட்டோம்.." கொரோனா தடுப்பூசி பணியை துவங்கியபோது.. நாக்கு தழுதழுத்து, கண்கள் பனித்த மோடி!
- Movies
அடடா.. வனிதா வீட்டுல திரும்பவும் விசேஷமாம்.. போட்டோவுடன் ஹேப்பி போஸ்ட்!
- Lifestyle
உங்க மனைவிகிட்ட இந்த வித்தியாசங்கள் தெரிஞ்சா அவங்க உங்கள சந்தேகப்பட தொடங்கிட்டாங்கனு அர்த்தமாம்...!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கியா சொனெட் உடன் நேருக்குநேர் மல்லுக்கட்ட ரெடியாகும் டொயோட்டா... புதிய சப்-4 மீ எஸ்யூவி வெளிவருகிறது
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த எஸ்யூவி காரை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்டை இந்த செய்தியில் பார்ப்போம்.

டொயோட்டா-சுஸுகி நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகவுள்ள இரண்டாவது தயாரிப்பான இந்த அர்பன் க்ரூஸரின் அறிமுகத்திற்கு முன்னதாக டொயோட்டா நிறுவனம் ‘ரெஸ்பக்ட்' என்ற பெயரில் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. இது முழுக்க முழுக்க அர்பன் க்ரூஸர் மாடலை மக்களிடையே கொண்டு செல்வதற்கான நடவடிக்கையாக இருக்கும்.

டொயோட்டா நிறுவனத்தின் லைன்-அப்பில் இளம் எஸ்யூவி மாடலாக விளங்கவுள்ள அர்பன் க்ரூஸருக்கான முன்பதிவுகள் இந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து துவங்கப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் வருகிற பண்டிக்கை காலத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்த மாத துவக்கத்தில் டொயோட்டா நிறுவனம் இந்த புதிய மாடலின் முதல் டீசர் படத்தை வெளியிட்டு இருந்தது. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தில் தான் காரின் தோற்றத்தை சிறிதாவது காண முடிகிறது. அர்பன் க்ரூஸர் என்ற பெயர், டொயோட்டாவின் பிரபலமான லேண்ட் க்ரூஸர் என்ற சப்-ப்ராண்ட்டில் இருந்து பெறப்பட்டுள்ளது.

தோற்ற அளவில் மாருதி சுஸுகியின் விட்டாரா பிரெஸ்ஸாவில் இருந்து சிறிது வேறுப்பட்டிருக்கும் என கூறப்படும் புதிய அர்பன் க்ரூஸர் மாடலில் தயாரிப்பு நிறுவனம் பல வசதிகளை புதியதாக கொண்டுவந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளிவந்துள்ள டீசர் படத்தில் முன்புறத்தில் இரட்டை-ஸ்லாட் க்ரில் அமைப்பை கொண்டுள்ள இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் வெட்டுகள் மற்றும் க்ரீஸ்களுடன் முன் பம்பர், காருடன் ஒட்டி வழங்கப்பட்டுள்ள காரை முன்புறமாக இழுப்பதற்கான பார் மற்றும் ஃபாக்ஸ் ஸ்கிட் ப்ளேட் உள்ளிட்டவற்றை பார்க்க முடிகிறது.

மேலும் விட்டாரா பிரெஸ்ஸாவில் இருந்து வேறுபடுவதற்காக காரை சுற்றிலும் க்ரோம்கள் வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் புதிய உள்ளமைவு மற்றும் வித்தியாசமான நிறத்தில் டேஸ்போர்டை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும் டொயோட்டாவின் இந்த எஸ்யூவி காரின் கேபின் தோற்ற அளவில் பெருமளவு விட்டாரா பிரெஸ்ஸாவை தான் ஒத்திருக்கும் என கூறப்படுகிறது.

இந்த வகையில் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை இந்த புதிய டொயோட்டா காரில் எதிர்பார்க்கலாம். மற்றப்படி என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளை அர்பன் க்ரூஸர் மாடல் மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸாவில் இருந்து தான் ஏற்கவுள்ளது.

ஸ்மார்ட் ஹைப்ரீட் சிஸ்டத்துடன் பிரெஸ்ஸாவில் வழங்கப்படும் 1.5 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 104 பிஎச்பி மற்றும் 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் & 4-ஸ்பீடு டார்க்-கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் என்ற ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
தயாரிப்பு நிறுவனத்தின் கூற்றுப்படி, மாடர்ன் கார்களுக்கு உண்டான ஸ்டைலிங் பாகங்களை அர்பன் க்ரூஸர் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் பெறவுள்ளது. இந்தியாவில் விற்பனையில் இதற்கு டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஹூண்டாய் வென்யூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விரைவில் அறிமுகமாகவுள்ள கியா சொனெட் உள்ளிட்ட காம்பெக்ட் எஸ்யூவி மாடல்கள் போட்டியாக விளங்கும்.