அர்பன் க்ரூஸரின் டெலிவிரி பணியை துவங்கியது டொயோட்டா! முன்பதிவு செய்தவர்களை கையிலேயே பிடிக்கமுடியாதே

கடந்த மாத அறிமுகத்தை தொடர்ந்து டொயோட்டா அர்பன் க்ரூஸரின் டெலிவிரி பணிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன.

அர்பன் க்ரூஸரின் டெலிவிரி பணியை துவங்கியது டொயோட்டா! முன்பதிவு செய்தவர்களை கையிலேயே பிடிக்கமுடியாதே

மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், கியா சொனெட் போன்ற பிரபலமான காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் உள்ள பிரிவில் அர்பன் க்ரூஸர் என்ற புதிய தயாரிப்பின் மூலம் டொயோட்டா நிறுவனம் நுழைந்துள்ளது.

அர்பன் க்ரூஸரின் டெலிவிரி பணியை துவங்கியது டொயோட்டா! முன்பதிவு செய்தவர்களை கையிலேயே பிடிக்கமுடியாதே

இதனை தொடர்ந்து தற்போது இந்த காரின் டெலிவிரி பணிகள் இந்தியாவில் உள்ள டொயோட்டாவின் அனைத்து டீலர்ஷிப் மையங்களிலும் துவங்கப்பட்டுள்ளன. இந்த வகையில் முதல் ஆளாக அர்பன் க்ரூஸர் காரை ராஜிந்தர் தாகூர் என்பவர் டெலிவிரி எடுத்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோ இதோ...

ஃபார்ச்சூனரில் இருந்து முன்பக்க க்ரில் டிசைனை பெற்றுள்ள இந்த சப் காம்பெக்ட் க்ராஸ்ஓவர் கார், மாருதி பிரெஸ்ஸாவில் இருந்து ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் பம்பர்களை ஏற்றுள்ளது. ஆனால் பம்பர்கள் இரட்டை-நிறத்துடன் சற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அர்பன் க்ரூஸரின் டெலிவிரி பணியை துவங்கியது டொயோட்டா! முன்பதிவு செய்தவர்களை கையிலேயே பிடிக்கமுடியாதே

வெளிப்புறத்தில் ஃபாக்ஸ் புல் பார், சறுக்கு தட்டு, புதிய மூடுபனி விளக்குகள் மற்றும் பளபளப்பான கருப்பு நிறத்துடன் பின்பக்கம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடி உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. அலாய் சக்கரங்கள் டைமண்ட் கட் டிசைனில் 16 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளன. மற்றப்படி பக்கவாட்டு மற்றும் பின்புற பகுதிகள் விட்டாரா பிரெஸ்ஸாவை தான் ஒத்து காணப்படுகின்றன.

அர்பன் க்ரூஸரின் டெலிவிரி பணியை துவங்கியது டொயோட்டா! முன்பதிவு செய்தவர்களை கையிலேயே பிடிக்கமுடியாதே

ஆனால் உட்புறம் சிறிய அளவிலான மாற்றங்களை ஏற்றுள்ளது. சில கண்ட்ரோல்களுடன் லெதரால் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரம், க்ளைமேட் கண்ட்ரோல், சாவியில்லா நுழைவு, தானாக பிரகாசத்தை குறைத்து கொள்ளும் ஐஆர்விஎம்கள் மற்றும் பல தகவல்களை வழங்கக்கூடிய திரை உள்ளிட்டவை அர்பன் க்ரூஸரின் கேபினில் வழங்கப்படும் சிறப்பம்சங்களாகும்.

அர்பன் க்ரூஸரின் டெலிவிரி பணியை துவங்கியது டொயோட்டா! முன்பதிவு செய்தவர்களை கையிலேயே பிடிக்கமுடியாதே

இவற்றுடன் பிராண்டின் நவீன இணைப்பு தொழிற்நுட்பத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே என இரண்டையும் ஏற்கக்கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் 7 இன்ச்சில் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களாக இரட்டை காற்றுப்பைகள், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின்பக்கத்தை பார்க்க கேமிரா உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன.

1.5 லிட்டர் கே சீரிஸ் என்ஜின் அமைப்பை டொயோட்டா அர்பன் க்ரூஸர், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவில் இருந்து சுஸுகி மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் பெற்றுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 104 பிஎச்பி மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

அர்பன் க்ரூஸரின் டெலிவிரி பணியை துவங்கியது டொயோட்டா! முன்பதிவு செய்தவர்களை கையிலேயே பிடிக்கமுடியாதே

இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வு கொடுக்கப்படுகிறது. இதில் மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் 17.03 kmpl மைலேஜ்ஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் 18.76 kmpl மைலேஜ்ஜையும் அர்பன் க்ரூஸர் கார் வழங்குகிறது.

அர்பன் க்ரூஸரின் டெலிவிரி பணியை துவங்கியது டொயோட்டா! முன்பதிவு செய்தவர்களை கையிலேயே பிடிக்கமுடியாதே

மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் விலைகள் ரூ.8.4 லட்சத்தில் இருந்து ரூ.9.8 லட்சம் வரையிலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ரூ.9.8 லட்சத்தில் இருந்து ரூ.11.3 லட்சம் வரையிலும் உள்ளன. மாருதி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு 2 வருட/ 40,000 கிமீ உத்தரவாதத்தை வழங்குகிறது. அதுவே டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸ்ருக்கு 3 வருட/ 1 லட்ச கிமீ என்ற உத்தரவாத வரம்பை வழங்கியுள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Urban Cruiser Deliveries Start – First Batch Owners Take Delivery
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X