டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுகம் அதிகாரப்பூர்வமாக உறுதியானது

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுகம் அதிகாரப்பூர்வமாக உறுதியானது!

மாருதி சுஸுகி கார்களை ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்யும் முயற்சியில் டொயோட்டா ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் க்ளான்ஸா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, இரண்டாவது மாடலாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுகம் அதிகாரப்பூர்வமாக உறுதியானது!

டொயோட்டா பிராண்டில் அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகம் குறித்த எதிர்பார்ப்பு வாடிக்கையாளர் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில், வரும் பண்டிகை காலத்தில் அர்பன் க்ரூஸர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுகம் அதிகாரப்பூர்வமாக உறுதியானது!

அதாவது, அடுத்த மாதம் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மாத இறுதியில் முன்பதிவு துவங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுகம் அதிகாரப்பூர்வமாக உறுதியானது!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியிலிருந்து ஒரு சில மாற்றங்களுடன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி வர இருக்கிறது. அதாவது, டொயோட்டா லோகோ சின்னம் பதிக்கப்பட்டு, சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும். மற்றபடி, டிசைனில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுகம் அதிகாரப்பூர்வமாக உறுதியானது!

கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அடிப்படையில்தான் இந்த புதிய மாடல் வர இருக்கிறது. எனவே, விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இடம்பெற்றிருந்த அனைத்து சிறப்பம்சங்கள் அப்படியே இந்த மாடலிலும் எதிர்பார்க்கலாம்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுகம் அதிகாரப்பூர்வமாக உறுதியானது!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகிய வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுகம் அதிகாரப்பூர்வமாக உறுதியானது!

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுகம் அதிகாரப்பூர்வமாக உறுதியானது!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கொடுக்கப்பட்ட அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியிலும் இடம்பெறுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுகம் அதிகாரப்பூர்வமாக உறுதியானது!

புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் வழங்கப்படும் விலை குறைவான வேரியண்ட் தேர்வுகள் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியிலும் இடம்பெறாது. எனவே, விட்டாரா பிரெஸ்ஸாவைவிட டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் விலை சற்று கூடுதலாக இருக்கும் வாய்ப்புள்ளது.

Most Read Articles
 

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Kirloskar Motors India (TKM) has released the first official teaser of their upcoming Urban Cruiser SUV. The all-new Toyota Urban Cruiser will be the brand's first sub-4-metre compact-SUV offering and is expected to go on sale in the Indian market soon.
Story first published: Wednesday, August 5, 2020, 10:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X