கார்னிவலுக்கு போட்டியாக டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி... முன்பதிவுகள் துவக்கம்...

டொயோட்டா நிறுவனம் தனது முதல் இந்திய லக்சரி எம்பிவி மாடலான வெல்ஃபயர்-ஐ விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த எம்பிவி காருக்கான முன்பதிவுகள் டீலர்ஷிப்களில் அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டுள்ளது.

கார்னிவலுக்கு போட்டியாக டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி... முன்பதிவுகள் துவக்கம்...

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது இந்திய மாடலாக கார்னிவல் எம்பிவி சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் வெல்ஃபயர் எம்பிவிக்கான முன்பதிவை டொயோட்டா நிறுவனம் துவங்கியிருப்பது, இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே விற்பனை போட்டி இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

கார்னிவலுக்கு போட்டியாக டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி... முன்பதிவுகள் துவக்கம்...

இன்னும் சில நாட்களில் இந்திய அறிமுகத்தை காணவுள்ள இந்த எம்பிவி மாடலின் டெலிவிரிகள் மார்ச் 20ஆம் தேதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. டொயோட்டா டீலர்ஷிப்களில் வெல்ஃபயர் மாடலுக்கான முன்பதிவுகள் ரூ.5 லட்சத்தில் இருந்து ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

கார்னிவலுக்கு போட்டியாக டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி... முன்பதிவுகள் துவக்கம்...

பிஎஸ்6 தரத்தில் மட்டுமே அறிமுகமாகவுள்ள இந்த எம்பிவி மாடலில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 180 பிஎச்பி பவரையும் 235 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜினுடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

கார்னிவலுக்கு போட்டியாக டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி... முன்பதிவுகள் துவக்கம்...

மேலும் இந்த என்ஜின் ஹைப்ரீட் வேரியண்ட்டில் செல்ஃப்-சார்ஜிங்கின் ஒரு பகுதியாகவும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவையற்ற தயாரிப்பு செலவை குறைப்பதற்காக டொயோட்டா நிறுவனம் இந்த எம்பிவி காரை ஒரே ஒரு எக்ஸ்லாங் க்ரேடில் மட்டும் விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்னிவலுக்கு போட்டியாக டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி... முன்பதிவுகள் துவக்கம்...

ஆனால் அதிக நிறத்தேர்வுகளில் இந்த காரை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த புதிய எம்பிவி காருக்கு கருப்பு, க்ராபைட் எம்இ, க்ரிஸ்டல் ஷைனில் முத்தின் வெள்ளை மற்றும் பர்னிங் ப்ளாக் என்ற 4 நிறத்தேர்வுகளை டொயோட்டா நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் உட்புறத்திற்கும் கருப்பு & பழுப்பின் நிறம் என்ற இரு நிறத்தேர்வுகள் உள்ளது.

கார்னிவலுக்கு போட்டியாக டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி... முன்பதிவுகள் துவக்கம்...

கூடுதல் தேர்வுகள் வாடிக்கையாளர்களின் விருப்பப்படியும் கிடைக்கும். இந்த காரில் சிறப்பம்சங்களாக இரட்டை-சன்ரூஃப், பின்புற இருக்கையில் அமர்பவர்களுக்கு ஜேபிஎல் நிறுவனத்தின் 17-ஸ்பீக்கர்களுடன் இணைக்கப்பட்ட பொழுதுபோக்கு திரை, 360 டிகிரி கேமிரா, அகலமான மற்றும் சாய்வான இருக்கைகள் மற்றும் ஸ்லைடிங் செய்யும் விதத்திலான பின்புற கதவுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

கார்னிவலுக்கு போட்டியாக டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி... முன்பதிவுகள் துவக்கம்...

டொயோட்டா நிறுவனம், இந்திய அரசாங்கத்தின் புதிய தளர்வான ஒத்திசைவு சட்டத்தின்படி, ஒரிஜினல் தொழிற்நுட்பங்களால் தயாரிக்கப்படும் வெல்ஃபயர் எம்பிவியின் 2,500 யூனிட்களுக்கு வரையறுக்கப்பட்ட வரி பொறுப்புகள் மற்றும் ஆய்வை பெறவுள்ளது.

கார்னிவலுக்கு போட்டியாக டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி... முன்பதிவுகள் துவக்கம்...

டொயோட்டா நிறுவனத்திற்கு வழங்கப்படும் இந்த சலுகைக்கு காரணம், தாய்லாந்தில் உள்ள இந்நிறுவனத்தின் சர்வதேச தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் இந்த எம்பிவி மாடலின் பாகங்கள் சிபியூ முறையில் இந்தியாவில் இறக்குமதியாகி அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது.

கார்னிவலுக்கு போட்டியாக டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி... முன்பதிவுகள் துவக்கம்...

இதனால் இந்த வெல்ஃபயர் எம்பிபி மாடல், இந்தியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் டொயோட்டா கார்களில் ஒன்றாக திகழும் அளவிற்கு அதிகப்படியான விலையை பெறவுள்ளது. அதாவது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் வி-கிளாஸ் எம்பிவி மாடலுக்கு போட்டியாக ரூ.70- 80 லட்சத்தில் இந்த காரின் விலையை எதிர்பார்க்கலாம்.

Source: Rushlane

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
India-spec Toyota Vellfire variant details leaked
Story first published: Wednesday, January 29, 2020, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X