இந்திய நிறுவனத்தை வழக்கால் வென்ற ஜெர்மன் நிறுவனம்... என்ன வழக்கு தெரிஞ்சா நிச்சயம் ஷாக் ஆய்ருவீங்க!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று வழக்கால் வென்றிருக்கின்றது. இது எம்மாதிரியான வழக்கு என தெரிந்தால் நிச்சயம் நீங்கள் ஷாக் ஆயிருவீங்க. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய நிறுவனத்தை வழக்கால் வென்ற ஜெர்மன் நிறுவனம்... என்ன வழக்கு தெரிஞ்சா நிச்சயம் ஷாக் ஆய்ருவீங்க!

வர்த்தக துறையில் மக்களை ஏமாற்ற பலவிதமான யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மக்களை ஏமாற்றுவதற்காக அவர்கள் அறிந்த பிரபல பிராண்டுகளின் பெயரை ஒத்திசைந்து ஒலிக்கின்ற வகையில் பெயர் மற்றும் லேசான மாற்றங்களைக் கொண்ட லோகோக்கள் (சின்னங்கள்) பயன்படுத்தப்படுகின்றது. இதுமட்டுமின்றி வேறுசில டெக்னிக்குகளையும் மோசடிதாரர்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்திய நிறுவனத்தை வழக்கால் வென்ற ஜெர்மன் நிறுவனம்... என்ன வழக்கு தெரிஞ்சா நிச்சயம் ஷாக் ஆய்ருவீங்க!

இம்மாதிரியான ஒர் பிரச்னையைதான் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த உலக புகழ்பெற்ற நிறுவனமான பிஎம்டபிள்யூ இந்தியாவில் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகின்றது.

சொகுசு வாகன உற்பத்தியில் கலக்கி வரும் இந்நிறுவனத்திற்கு போட்டியளிக்கும் விதமாக இந்தியாவைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் ஓம் பாலாஜி ஆட்டோமொபைல் அதன் தயாரிப்புகளுக்கு டிஎம்டபிள்யூ என்ற பெயரை வைத்தது.

இந்திய நிறுவனத்தை வழக்கால் வென்ற ஜெர்மன் நிறுவனம்... என்ன வழக்கு தெரிஞ்சா நிச்சயம் ஷாக் ஆய்ருவீங்க!

இந்த பெயர், தங்களுடைய பிஎம்டபிள்யூ என்ற பெயரில் இருந்து மிக குறைந்தளவு வித்தியாசத்தைப் பெற்றிருப்பதாக கூறி டிஎம்டபில்யூ நிறுவனத்தின்மீது மோசடி வழக்கு ஒன்றை டெல்லி உயர்நீதி மன்றத்தில் தொடங்கியது.

இந்திய நிறுவனத்தை வழக்கால் வென்ற ஜெர்மன் நிறுவனம்... என்ன வழக்கு தெரிஞ்சா நிச்சயம் ஷாக் ஆய்ருவீங்க!

குறிப்பாக, இந்த பெயர் வித்தியாசத்தின் காரணமாக தங்கள் நிறுவனத்தின் மீது அதிக நம்பிக்கையுடைய ஒரு சில வாடிக்கையாளர்கள், இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தயாரிப்புகள் என நினைத்து வாங்க நேரிடலாம் என்ற காரணத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்திய நிறுவனத்தை வழக்கால் வென்ற ஜெர்மன் நிறுவனம்... என்ன வழக்கு தெரிஞ்சா நிச்சயம் ஷாக் ஆய்ருவீங்க!

கடந்த 2017ம் ஆண்டில் தொடரப்பட்ட இந்த வழக்கில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போதுதான் தீர்ப்பைப் பெற்றிருக்கின்றது. இதில் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கே சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் வர்த்தகத்திற்கான அங்கீகாரத்தை 2013ம் ஆண்டுதான் பெற்றிருக்கின்றது. ஆனால், பிஎம்டபிள்யூ நிறுவனமோ பல தசாப்தங்களாக விற்பனையில் இருந்து வருகின்றது. மேலும், இது 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் வர்த்தகத்தைச் செய்து வருகின்றது.

இந்திய நிறுவனத்தை வழக்கால் வென்ற ஜெர்மன் நிறுவனம்... என்ன வழக்கு தெரிஞ்சா நிச்சயம் ஷாக் ஆய்ருவீங்க!

தொடர்ந்து, 14க்கும் அதிகமான நாடுகளில் உற்பத்தியாலையை வைத்து அது இயக்கி வருகின்றது. இதன்மூலம் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 94,163 மில்லியன் அமெரிக்க டாலர்களை அது வருமானமாக ஈட்டியிருக்கின்றது. ஆனால், இதற்கு இந்தியாவில் குந்தகம் விளைவிக்கும் விதமாக டிஎம்டபிள்யூ இருப்பதாக அந்நிறுவனம் வேதனை தெரிவித்திருக்கின்றது. இதையடுத்தே டிஎம்டபிள்யூ மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்திய நிறுவனத்தை வழக்கால் வென்ற ஜெர்மன் நிறுவனம்... என்ன வழக்கு தெரிஞ்சா நிச்சயம் ஷாக் ஆய்ருவீங்க!

இந்த வழக்குகுறித்து டிஎம்டபிள்யூ சார்பில், எங்கள் நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், இது தொடங்கி நான்கு வருடங்கள் கழித்த பின்னரே பிஎம்டபிள்யூ நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. இது மிகக் காலம் தாழ்ந்த புகார் ஆகும். ஆகையால், இந்த மனுவை தள்ளுபடியும் செய்யுங்கள் என கூறப்பட்டது.

இந்திய நிறுவனத்தை வழக்கால் வென்ற ஜெர்மன் நிறுவனம்... என்ன வழக்கு தெரிஞ்சா நிச்சயம் ஷாக் ஆய்ருவீங்க!

ஆனால் நீதிமன்றம், "காலம் தாழ்த்தி பிஎம்டபிள்யூ மனு வழங்கியிருந்தாலும், இந்த பெயர் சிலரை தவறாக வழி நடத்தும் வகையில் இருக்கின்றது" என கருத்து தெரிவித்தது.

இந்திய நிறுவனத்தை வழக்கால் வென்ற ஜெர்மன் நிறுவனம்... என்ன வழக்கு தெரிஞ்சா நிச்சயம் ஷாக் ஆய்ருவீங்க!

மேலும், பிஎம்டபிள்யூவின் வருமானத்தை டிஎம்டபிள்யூ கணிசமாக பாதிப்பதாகவும் தெரிவித்தது. தொடர்ந்து, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில் இருப்பதாகவும் கூறியது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் சின்னம் மற்றும் பெயரை ஒத்திசைக்குமாறு எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் டிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு உத்தரவு வழங்கியது.

இந்திய நிறுவனத்தை வழக்கால் வென்ற ஜெர்மன் நிறுவனம்... என்ன வழக்கு தெரிஞ்சா நிச்சயம் ஷாக் ஆய்ருவீங்க!

இதுபோன்ற,பிரச்னையை பிஎம்டபிள்யூ நிறுவனம் சந்திப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக சீனாவைச் சேர்ந்த ஓர் நிறுவனம் இதேமாதிரியான ஓர் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது. அது, அந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு பிஎம்டபிள்யூஎன் என்ற பெயரை வைத்திருந்தது. இது, பிஎம்டபிள்யூ நிறுவனத்துடைய கார்களின் விற்பனையை சீனாவில் கடுமையாக பாதித்தது.

இந்திய நிறுவனத்தை வழக்கால் வென்ற ஜெர்மன் நிறுவனம்... என்ன வழக்கு தெரிஞ்சா நிச்சயம் ஷாக் ஆய்ருவீங்க!

ஆகையால், அந்நிறுவனத்தின்மீதும் பிஎம்டபிள்யூ கடந்த 2016ம் ஆண்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கிலும் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கே சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, அந்த மோசடி நிறுவனத்தை பிஎம்டபிள்யூவிற்கு இழப்பீடாக சீன மதிப்பில் 3 மில்லியன் யுவான்களை வழங்க உத்தரவிட்டது.

இந்திய நிறுவனத்தை வழக்கால் வென்ற ஜெர்மன் நிறுவனம்... என்ன வழக்கு தெரிஞ்சா நிச்சயம் ஷாக் ஆய்ருவீங்க!

இதுமாதிரியான சிக்கலை வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ மட்டுமின்றி பல பிரபல நிறுவனங்கள் சந்தித்திருக்கின்றன. உதாரணமாக, நோக்கியாவிற்கு போட்டியாக நோக்லா எனும் செல்போனை கொரிய நிறுவனம் அறிமுகம் செய்தது.

இதுபோன்ற பல தயாரிப்புகள் சந்தையில் டூப்ளிகேட் வெர்ஷனாக விற்பனையில் இருக்கின்றன. அவையனைத்தும் மக்களை ஏமாற்றும் நோக்கிலேயே இருக்கின்றன. ஆகையால், ஒரு பொருளை வாங்குவதற்கு பல ஆய்வு செய்வது மிக அவசியமாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Trademark Violation Case BMW Wins India Based Firm DMW. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X