களவுபோன காரை சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கலாம்! டீலர்களுக்கு பலே ஐடியா கொடுத்த திருச்சி போலீஸ்!

அதிகரித்து வரும் வாகன கொள்ளைக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக திருச்சி போலீஸார் குறிப்பிட்ட அறிவுரையை கார் விற்பனையாளர்களுக்கு வழங்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

காணமல் போன காரை சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கலாம்... டீலர்களுக்கு பலோ ஐடியா கொடுத்த திருச்சி போலீஸ்!

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனால் மக்கள் வெளியில் நடமாடுவது கடுமையாக குறைந்திருக்கின்றது. மக்களின் நடமாட்டம் மட்டுமின்றி கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்டவையும் கணிசமாக குறைந்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நாள்தோறும் வெளிவரும் செய்திகளில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் இடம்பெற தவறுவதில்லை.

காணமல் போன காரை சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கலாம்... டீலர்களுக்கு பலோ ஐடியா கொடுத்த திருச்சி போலீஸ்!

குறிப்பாக, வாகன திருட்டு சம்பவங்கள் வழக்கம்போல் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அவ்வாறு, களவு செய்யப்படும் வாகனங்களைக் கண்டுபிடிப்பதில் போலீஸாருக்கு பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. முக்கியமாக வாகன திருட்டு சம்பவம் அரங்கேறும் பகுதியில் சிசிடிவி கேமிரா இல்லாமல் இருப்பது மற்றும் இருந்தும் வேலை செய்யாமல் இருப்பது அவர்களுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றது.

காணமல் போன காரை சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கலாம்... டீலர்களுக்கு பலோ ஐடியா கொடுத்த திருச்சி போலீஸ்!

அதிலும், சமீப காலமாக வாகன கொள்ளையர்கள் கையாளும் புதுவிதமான யுக்திகள், திருடப்பட்ட வாகனத்தைக் கண்டறிவதில் பல்வேறு சிக்கலை ஏற்படுத்துகின்றது. இவற்றிற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையிலேயே திருச்சி நகர போலீஸார், வாகன விற்பனையாளர்களுக்கு குறிப்பிட்ட ஆலோசனையை வழங்கியிருக்கின்றனர்.

காணமல் போன காரை சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கலாம்... டீலர்களுக்கு பலோ ஐடியா கொடுத்த திருச்சி போலீஸ்!

அதாவது, புதிதாக விற்பனைச் செய்யப்படும் கார்களில் ஜிபிஎஸ் எனப்படும் லைவ் டிராக்கிங் கருவியைப் பொருத்துமாறு கூறியிருக்கின்றனர். இதுகுறித்து திருச்சி மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப் பிரிவு டிசிபி வேதரத்தினம், தலைமையில் கடந்த சனிக்கிழமை அன்று கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், திருச்சியை மையமாகக் கொண்டு இயங்கும் 16க்கும் மேற்பட்ட கார் விற்பனையாளர்கள் கலந்துக் கொண்டனர்.

காணமல் போன காரை சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கலாம்... டீலர்களுக்கு பலோ ஐடியா கொடுத்த திருச்சி போலீஸ்!

அப்போதே வாகன விற்பனையாளர்களிடம் இந்த கோரிக்கையை காவல்துறையை முன் வைத்தது. இந்த கருவி வாகனம் காணமல் போன அல்லது திருடப்பட்ட சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்க உதவும். எனவே புதிதாக காரை வாங்கும் வாடிக்கையாளர்களைக் கட்டாயம் ஜிபிஎஸ் பொருத்த வற்புறுத்துமாறு விற்பனையாளர்களிடத்தில் போலீஸார்கள் கேட்டுக் கொண்டனர்.

காணமல் போன காரை சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கலாம்... டீலர்களுக்கு பலோ ஐடியா கொடுத்த திருச்சி போலீஸ்!

'குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்' என்பதன் சுருக்கமே 'ஜிபிஎஸ்'. இதனை தமிழில் 'புவியிடங்காட்டி' என்றழைக்கின்றனர். இந்த தொழில்நுட்பத்தைப் பொருத்திய வாகனத்தின் இருப்பிடத்தை இணையத்தின் வாயிலாக நேரடியாக கண்டறிய முடியும். இதுமட்டுமின்றி, புதிய பாதையில் செல்வோருக்கு இலக்கை நோக்கி சரியான பாதையில் செல்லவும் வழிகாட்ட உதவும்.

காணமல் போன காரை சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கலாம்... டீலர்களுக்கு பலோ ஐடியா கொடுத்த திருச்சி போலீஸ்!

எனவேதான், புதிதாக விற்பனைக்கு வரும் வாகனங்களில் இந்த தொழில்நுட்பம் கட்டாயம் இடம்பெற்றுவிடுகின்றது. இருப்பினும், விலைக் குறைவான கார்களில் இந்த வசதி இடம்பெற தவறிவிடுகின்றது. அம்மாதிரியான கார்களிலும் இந்த வசதி இடம்பெறச் செய்யும் விதமாகவே திருச்சி நகர போலீஸார் தனித்துவமான முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர்.

காணமல் போன காரை சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கலாம்... டீலர்களுக்கு பலோ ஐடியா கொடுத்த திருச்சி போலீஸ்!

கொரோனா காலத்திலும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அறிவுரை வழங்கப்பட்டிருக்கின்றது. அதேசமயம், ஜிபிஎஸ் கருவியைப் பொருத்துவதன் மூலம் போலீசாரின் உதவியில்லாமலே வாகனத்தை டிராக்கிங் அல்லது கண்டறிய முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

காணமல் போன காரை சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கலாம்... டீலர்களுக்கு பலோ ஐடியா கொடுத்த திருச்சி போலீஸ்!

அவ்வாறு, திருடப்பட்ட வாகனத்தைப் போலீஸாரின் உதவியில்லாமலே மீட்டவர்கள் இங்கு பலர் இருக்கின்றனர். சென்னையில்கூட இதுபோன்றதொரு சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு அரங்கேறியிருந்தது. வாகனத்தின் இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து தகவலையும் செல்போன் செயலி வாயிலாகவே அக்கருவி வழங்குவதால் இவையனைத்தும் மிக சுலபமான ஒன்றாக இருக்கின்றது.

காணமல் போன காரை சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கலாம்... டீலர்களுக்கு பலோ ஐடியா கொடுத்த திருச்சி போலீஸ்!

அதுமட்டுமின்றி, இந்த கருவியின் விலையும் ரூ. 5 ஆயிரத்திற்கும் குறைவானதாகவே உள்ளது. அதேசமயம், நாம் வாங்கும் புதிய வாகனத்தின் விலையோ பல லட்சங்களாக உள்ளன. எனவே, குறைந்த செலவை பாரமாக நினைத்து வீண் பலபரீட்சை மேற்கொள்ள வேண்டாம் என்கின்றனர் போலீஸார். இதையேதான் நாங்களும், ஆட்டோத்துறை வல்லுநர்களும் கூறுகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Trichy Police Advice Dealers To Fix GPS Device In New Selling Cars. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X