"கடுமையான வறுமை" -கை கொடுக்கும் ஊபர்... எதிர்பார்க்காத உதவியால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி!

வறுமை மற்றும் சோகம் ஒரு சேர வதைத்துக் கொண்டிருக்கின்ற வேலையில் யாரும் எதிர்பார்க்காத ஓர் உதவியை ஊபர் நிறுவனம் செய்ய முன் வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகின்ற 14ம் தேதி வரை அமலில் இருக்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தடை உத்தரவு காலம் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏரளமாக உள்ளது.

அண்மைக் காலங்களாக கொரோனா வைரஸ் தொற்று மிக அதிக தீவிரமடைந்து வருகின்றது. ஆகையால், இதனைக் கட்டுக்குள் வைக்க சமூக நல ஆர்வலர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தடை உத்தரவை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

MOST READ: சிங்கிள்-சார்ஜில் 600கிமீ... 2021ல் வருகிறது ரெனால்ட்டி புதிய எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

இதையே சில மாநில அரசுகள் விரும்புகின்றன. பிரதமர் மோடியும் மாநில அரசுகளின் இந்த கருத்தை ஏற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அது, ஏப்ரல் மாதம் மட்டுமின்றி ஜூன் வரையிலும் நீட்டிக்கப்படலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் இணையத்தில் வதந்தியாக பரவிய வண்ணம் இருக்கின்றது.

இந்த அறிவிப்பு வெளிவருமேயானால் அடித்தட்டு மக்களின் நிலை மிக மோசமான நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன.

READ MORE: கார்களை ஹோம் டெலிவிரி தரும் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம்!

ஏற்கனவே கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக தினக் கூலித் தொழிலாளர்கள் மிகக் கடுமையான பின்விளைவுகளைச் சந்தித்து வருகின்றனர். அதிலும், வாடகை வாகன ஓட்டுநர்களின் நிலை மிகக் கவலைக்கிடமாக உள்ளது. வாகனத்தை ஓட்ட முடியாத சூழல் நிலவுவதால் குடும்பத்தை நடத்துவதில் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஒரு சில மாநில அரசுகள் ஓட்டுநர்களின் இந்த நிலையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு கணிசமான நிதியுதவியை வழங்கி வருகின்றன. தமிழகமும் கணிசமான நிதியுதவியை அறிவித்துள்ளது.

இதில் டெல்லி அரசு உச்சபட்சமாக வேலையில்லாமல் தவித்து நிற்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கால் டாக்ஸி டிரைவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்க இருப்பதாக அறிவித்திருந்தது.

MOST READ: அறிமுகமான 3 மாதங்களிலேயே விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்ட கியா கார்னிவல்...

இந்நிலையில், இந்திய கால் டாக்சி சேவையில் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் ஊபர், தனது பங்காக வருமானமின்றி தவித்து வரும் அதன் பார்ட்னர்களுக்கு நிதியுதவியை வழங்க முன் வந்துள்ளது. இதற்காக அந்நிறுவனம் ரூ. 25 கோடியை ஒதுக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊபர் ஓர் அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் கால் டாக்சி சேவை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் ஓட்டுநர்களை டை-அப் செய்து சேவையை வழங்கி வருகின்றது.

MOST READ: அனாதையாக கிடக்கும் 35 ஆயிரம் கோடி... உள்ளே இருப்பது என்னனு தெரியுமா? லாரி டிரைவர்கள் திக்... திக்...

தற்போது கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக உலகமே செயலற்று முடங்கிக் கிடக்கின்றன. இதனால், தனது பார்ட்னர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த ஊபர் தன் பங்காக உதவி செய்யும் விதமாக ரூ. 25 கோடியை ஒதுக்கியிருக்கின்றது.

இதுதவிர, கூடுதலாக ரூ. 25 கோடி திரட்டும் முயற்சியிலும் அது ஈடுபட்டு வருகின்றது. இந்த தொகைகள் அனைத்தும் ஊபருடன் இணைந்து பார்ட்னர்களாக செயல்பட்டு வரும் டிரைவர்களின் அக்கவுண்டுகளில் மானியமாக செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது நிலவும் இக்கட்டான நிலைக்கு இந்த மானியத் தொகை சற்றே ஆறுதலாக இருக்கும் என தெரிகின்றது.

ஊபர் நிறுவனம் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கொரோனாவிற்கு எதிரான போரில் கூடுதல் பங்களிக்கும் விதமாக ஊபர் மருந்து, ஊபர் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட சேவையையும் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

இதற்காக ஊபர் நிறுவனம், அதன் பார்ட்னர்களுடன் பேச்சுவார்த்தை செய்து, ஆலோசித்து வருகின்றது. ஆகையால், விரைவில் ஊபர் நிறுவனம் சில ஆன்-லைன் நிறுவனங்களுடன் இணைந்து அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Uber Gives Rs.25 Crore For Driver Partners In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X