ஷோரூமை விட்டு வெளியேகூட முழுசா வரல... அதுக்குள்ள புத்தம் புது காரை போலீஸ் தூக்கிட்டாங்க... ஏன் தெரியுமா?

வாங்கி 30 நிமிஷம் மட்டுமே ஆனநிலையில் புத்தம் புதிய காரை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். அதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

ஷோரூமை விட்டு வெளியேகூட முழுசா வரல... அதுக்குள்ள புத்தம் புது காரை போலீஸ் தூக்கிட்டாங்க... ஏன் தெரியுமா?

கடந்த காலங்களில், புதிய வாகனம் வாங்கப்பட்ட சில மணி நேரங்களுக்கு உள்ளாகவே விபத்தில் சிக்கி பெரும் சேதத்தைச் சந்தித்தது பற்றி கேள்விப்பட்டிருப்போம். இந்த நிலையில் மிக விநோமாக புத்தம் புதிய காரொன்று போலீஸார் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. இது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், ஆதிர்ச்சியையும் ஒரு சேர வழங்கியுள்ளது. குறிப்பாக, வாங்கப்பட்ட 30 செகண்டுக்குள் காரை போலீஸார் பறிமுதல் செய்திருப்பது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷோரூமை விட்டு வெளியேகூட முழுசா வரல... அதுக்குள்ள புத்தம் புது காரை போலீஸ் தூக்கிட்டாங்க... ஏன் தெரியுமா?

இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷைர் (Northamptonshire) காவல்துறையினரே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றனர். இவர்கள் ரெனால்ட் நிறுவனத்தின் புதுமுக கார்களில் ஒன்றான மெகேன் எனும் சில்வர் நிற காரை தற்போது உரிமையாளரிடத்தில் இருந்து பறிமுதல் செய்திருக்கின்றனர். இக்கார் வாங்கி வெறும் 30 வினாடிகள் மட்டுமே ஆகின்றது என்பது தெரிந்தும், காரை பறிமுதல் செய்திருக்கின்றனர்.

ஷோரூமை விட்டு வெளியேகூட முழுசா வரல... அதுக்குள்ள புத்தம் புது காரை போலீஸ் தூக்கிட்டாங்க... ஏன் தெரியுமா?

இங்கிலாந்து நாட்டைப் பொருத்தவரை வாகன ஓட்டிகள் கட்டாயம் வாகனபோக்குவரத்து விதிகள் அனைத்தையும் கடைபிடித்தே ஆக வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் வாகனம் பறிமுதல் அல்லது மிகப்பெரிய அபராதத் தொகை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அந்தவகையில், புதிய ரெனால்ட் மெகேன் காரை வாங்கிய நபர், அக்காருக்கு காப்பீட்டு திட்டத்தைப் பெறவில்லை என கூறப்படுகின்றது.

ஷோரூமை விட்டு வெளியேகூட முழுசா வரல... அதுக்குள்ள புத்தம் புது காரை போலீஸ் தூக்கிட்டாங்க... ஏன் தெரியுமா?

இதன் காரணத்தினாலயே போலீஸார் புதிய கார் என்றும் பாராமல் பறிமுதல் செய்திருக்கின்றனர். இங்கிலாந்து நாட்டில் எந்தவொரு வாகனமும் காப்பீடு இல்லாமல் பயணிக்கக் கூடாது. இது அந்நாட்டின் முக்கியமான போக்குவரத்து விதிகளுள் ஒன்று. இதற்கு அதிகபட்ச அபராதம் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையிலேயே, புதிய காரின்மீது நார்தம்ப்டன்ஷைர் போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

ஷோரூமை விட்டு வெளியேகூட முழுசா வரல... அதுக்குள்ள புத்தம் புது காரை போலீஸ் தூக்கிட்டாங்க... ஏன் தெரியுமா?

புதிய காரின் ஓட்டுனர் பலமுறை உரிய காரணம் கூறியும், எந்தவொரு பாகுபாடுமின்றி புதிய காரை பறிமுதல் செய்யும் டிரக்கைக் கொண்டு இழுத்துச் சென்றனர். இதுகுறித்த புகைப்படம் மற்றும் தகவலை நார்தம்ப்டன் போலீஸார்கள், அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலை தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.

ஷோரூமை விட்டு வெளியேகூட முழுசா வரல... அதுக்குள்ள புத்தம் புது காரை போலீஸ் தூக்கிட்டாங்க... ஏன் தெரியுமா?

ரெனால்ட் மெகேன் கார், இந்தியா போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அது விற்பனைக்குக் கிடைக்கும் நாடுகளில் பன்முக தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. குறிப்பாக, 3 அல்லது 5 கதவுகள் தேர்வு மற்றும் ஹேட்ச் பேக் அல்லது செடான் போன்ற பல்வேறு தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
UK Police Seized Brand New Car After 30 Seconds Of Purchase. Read In Tamil.
Story first published: Monday, November 30, 2020, 13:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X