டெஸ்லாவிற்கு போட்டியாக புதிய எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவுள்ள இங்கிலாந்து பணக்காரர்...

இங்கிலாந்தை சேர்ந்த ஜேம்ஸ் டைசன் என்ற தொழிலதிபர் ஒருவர் டெஸ்லா மாடலிற்கு போட்டியாக சுமார் ரூ.7,125 கோடி முதலீட்டில் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த ட்ரைவிங் என்ற செய்தி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டெஸ்லாவிற்கு போட்டியாக புதிய எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவுள்ள இங்கிலாந்து பணக்காரர்....

ஜேம்ஸ் டைசன் இவ்வாறான எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவுள்ள விஷயம் 6,7 மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது இந்த கார்கள் ரூ.7,125 கோடியில் தயாரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி மொத்த ஆட்டோமொபைல் துறையையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

டெஸ்லாவிற்கு போட்டியாக புதிய எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவுள்ள இங்கிலாந்து பணக்காரர்....

தான் தயாரிக்கவுள்ள இந்த எலக்ட்ரிக் கார் மாடலுக்கு என்526 என பெயர் வைத்துள்ளதாக ஜேம்ஸ் டைசன் சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு சமீபத்தில் அளித்த, உலகின் மிக பணக்கார மனிதர்களின் என்ற பேட்டியில் கூறியுள்ளார்.

டெஸ்லாவிற்கு போட்டியாக புதிய எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவுள்ள இங்கிலாந்து பணக்காரர்....

மேலும் இதே நேர்காணலில் தனது எலக்ட்ரிக் கார் டெஸ்லாவின் அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் சாவல் விடும் வகையில் இருக்கும். இந்த எலக்ட்ரிக் கார் திட்டத்திற்கான திட்டம் தற்போது தன்னிடம் தயாராகவுள்ளது. இந்த திட்டத்திற்கு 500 மில்லியன் பவுண்ட்டை (ரூ.7,125 கோடி) ஒதுக்கியுள்ளேன் எனவும் ஜேம்ஸ் டைசன் தெரிவித்துள்ளார்.

டெஸ்லாவிற்கு போட்டியாக புதிய எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவுள்ள இங்கிலாந்து பணக்காரர்....

ஏழு-இருக்கைகள் கொண்ட எஸ்யூவி ரகத்தில் உருவாகவுள்ள இந்த எலக்ட்ரிக் கார் சிங்கிள் சார்ஜில் சுமார் 600 மைல்கள் (965 கிமீ) இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஜேம்ஸ் டைசன் தனது எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக கருதும் டெஸ்லா மாடல்களில் மாடல் எஸ் 375 மைல்களையும், மாடல் எக்ஸ் 314 மைல்களையும் தான் ரேஞ்ச்-ஆக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்லாவிற்கு போட்டியாக புதிய எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவுள்ள இங்கிலாந்து பணக்காரர்....

முழுக்க அலுமினியத்தால் தயாரிக்கப்படவுள்ள இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் எடை கிட்டத்தட்ட 2.6 டன்-ஆக இருக்கும் எனவும் இதனால் இந்த கார் அதிகப்பட்சமாக 201 kmph என்ற வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும் எனவும் ஜேம்ஸ் டைசன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

டெஸ்லாவிற்கு போட்டியாக புதிய எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவுள்ள இங்கிலாந்து பணக்காரர்....

200 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்களை இயக்க ஆற்றலுக்காக பெறவுள்ள இந்த எலக்ட்ரிக் கார், அதிகப்பட்சமாக 535 பிஎச்பி பவரிலும், 480 என்எம் டார்க் திறனிலும் இயங்கும் என தெரிகிறது. மேலும் இந்த எலக்ட்ரிக் மோட்டார்கள் அமைப்பின் மூலமாக 0-விலிருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் இந்த கார் எட்டிவிடும் என கூறப்படுகிறது.

டெஸ்லாவிற்கு போட்டியாக புதிய எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவுள்ள இங்கிலாந்து பணக்காரர்....

இத்தகைய அம்சங்கள் எல்லாம் தற்சமயம் சந்தையில் உள்ள பெரும்பாலான கார்கள் கொண்டிருப்பதால் ரூ.7,125 கோடி என்ற அதிகப்படியான தொகை இதன் டிசைன் மற்றும் தொழிற்நுட்ப வசதிகளில் தான் செலவழிக்கப்படவுள்ளது என்பது தெள்ள தெளிவாக தெரிய வருகிறது. இதை தான், இதுவரை சந்தையில் எந்த காரிலும் பார்த்திராத வகையில் இந்த கார் டிசைனை பெற்றிருக்கும் என ஜேம்ஸ் டைசன் கூறியுள்ளார்.

டெஸ்லாவிற்கு போட்டியாக புதிய எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவுள்ள இங்கிலாந்து பணக்காரர்....

இந்த வகையில் ஸ்போர்ட்டியான எஸ்யூவி தோற்றத்தில் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த எலக்ட்ரிக் கார், 5 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 2 மீட்டர் அகலம் கொண்டதாகவும், 1.7 மீட்டரில் உயரத்தை கொண்டதாகவும் வடிவமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெஸ்லாவிற்கு போட்டியாக புதிய எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவுள்ள இங்கிலாந்து பணக்காரர்....

குறிப்பாக இதன் பின்புற விண்ட்ஸ்க்ரீன் ஃபெராரி மாடல்களை காட்டிலும் மிகவும் முரட்டுத்தனமானதாவும், தற்போது சந்தையில் உள்ள அனைத்து மாடல்களில் உள்ளதை காட்டிலும் பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லாவிற்கு போட்டியாக புதிய எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவுள்ள இங்கிலாந்து பணக்காரர்....

இந்த திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் கார்களின் விற்பனையில் இலாபத்தை காண வேண்டும் என்றால் ஒவ்வொரு எலக்ட்ரிக் எஸ்யூவி காரையும் குறைந்தது 150,000 பவுண்ட்களில் (ரூ.1.37 கோடி) விற்க வேண்டிய கட்டாயத்திற்கு டைசன் ஆளாகவுள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.1.5 லட்சம் ஆகும்.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
UK's richest man spent $940 mn of his own cash to build this EV to rival Tesla
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X