Just In
- 4 min ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாகவே வேண்டுமே...
- 51 min ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 58 min ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 1 hr ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- News
பரபரப்பு.. சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு.. சிறையிலிருந்து மருத்துவமனைக்கு ஷிப்ட்?
- Lifestyle
உங்க ராசிப்படி நீங்க எந்த வகையான நண்பர் தெரியுமா? நீங்க தேவாவா இல்ல சூர்யாவா? தெரிஞ்சிக்கோங்க...!
- Sports
ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Movies
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இனி காருக்கு சாவி தேவையில்லை... ஆப்பிள் நிறுவனத்தின் புரட்சிகர நுட்பம்!
சாவி இல்லாமல் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கான புதிய தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள், இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முதல் சொகுசு கார் நிறுவனம் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கார்களுக்கான தொழில்நுட்பத்தில் நித்தமும் ஒரு புதுமையான விஷயம் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது கனெக்டெட் கார் எனப்படும் ஸ்மார்ட்ஃபோனையும், காரில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தையும் இணைய வசதி மூலமாக நேரடியாக இணைக்கும் வசதி புதிய கார்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த தொழில்நுட்பத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளில் கார் நிறுவனங்களுக்கு இடையே போட்டா போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், மொபைல்போன் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் கார்களுக்கான டிஜிட்டல் சாவி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட டிஜிட்டல் சாவி செயலி வழங்கப்பட உள்ளது. காரின் டேஷ்போர்டு அருகே உள்ள டிரேயில் ஐபோனை வைத்து புஷ் பட்டனை அழுத்தினால் கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கும், அதேபோன்று அணைப்பதற்கும் இயலும். காரை பூட்டித் திறப்பதற்கும் இனி சாவியை தேவையில்லை.

முதல்கட்டமாக பிஎம்டபிள்யூ சொகுசு கார்களில் இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிஎம்டபிள்யூ கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் டிஜிட்டல் சாவி செயலியை குறிப்பிட்ட வழிகாட்டு முறைகளுடன் இணைத்துக் கொண்டால் போதுமானது. இனி கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கு தனி சாவி தேவைப்படாது.

ஆப்பிள் வாலட் மூலமாக இந்த அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட டிஜிட்டல் சாவி செயலியை பிஎம்டபிள்யூ கார் உரிமையாளர்கள் பெறும் வசதி அளிக்கப்பட உள்ளது. இந்த டிஜிட்டல் செயலி மூலமாக எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கும், அணைப்பதற்கும் மட்டுமில்லாமல், காரின் வரம்பை நிர்ணயிப்பது, ரேடியோவில் ஒலி அளவை கட்டுப்படுத்துவது மற்றும் எஞ்சின் செயல்திறனை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்த முடியும்.

இந்த டிஜிட்டல் சாவி மூலமாக காரின் வசதிகளை பெறுவதற்கு 5 மொபைல்போன்களை இணைத்துக் கொள்ளலாம். ஒருவேளை ஐபோனில் சார்ஜ் இல்லாமல் செயல் இழந்தால் கூட 5 மணிநேரம் வரை இதன் மூலமாக கிடைக்கும் வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். மேலும், ஆப்பிள் வாட்ச்சிலும் இந்த டிஜிட்டல் சாவி செயலியை பயன்படுத்த இயலும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

வரும் ஜூலை 1ந் தேதி முதல் உலகின் 45 நாடுகளில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் பிஎம்டபிள்யூ கார் மாடல்களில் இந்த டிஜிட்டல் சாவி தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட உள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 1 சீரிஸ், 2 சீரிஸ், 3 சீரிஸ், 4 சீரிஸ், 5 சீரிஸ், 6 சீரிஸ், 8 சீரிஸ் வரிசை கார்களிலும், எக்ஸ்-5, எக்ஸ்-6, எக்ஸ்-7, எக்ஸ்5எம் மற்றும் இசட்4 ஆகிய கார்களிலும் இந்த வசதி வழங்கப்பட உள்ளது.

அதேபோன்று, பிஎம்டபிள்யூ டிஜிட்டல் சாவியை ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் எக்ஸ்எஸ், ஆப்பிள் 5 சீரிஸ் வாட்ச் மற்றும் புதிதாக அறிமுகமாகும் ஆப்பிள் சாதனங்கள் மூலமாக இணைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படும். அதாவது, ஐஓஎஸ்-14 செயலியில் இயங்கும் ஆப்பிள் சாதனங்களில் இந்த வசதி கொடுக்கப்படுகிறது. இது நிச்சயம் கனெக்டெட் கார் தொழில்நுட்பத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விஷயமாக பார்க்கப்படுகிறது.