விலையுயர்ந்த கார்களை ஜேசிபி கொண்டு நொறுக்கிய போலீஸ்... இது யாரோட காருனு தெரியுமா?

ஜேசிபி எந்திரம் கொண்டு போலீஸார் இரு விலையுயர்ந்த கார்களை அழிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

விலையுயர்ந்த கார்களை ஜேசிபி கொண்டு நொறுக்கிய போலீஸ்... இது யாரோட காருனு தெரியுமா?

நாட்டையே உலுக்கும் வகையில் அமைந்தது உத்தரப்பிரதேச போலீசார்களை ரவுடிகள் கும்பல் சரமாரியாகச் சுட்டுக் கொன்ற சம்பவம். இந்த சம்பவத்தை அடுத்து அம்மாநில போலீஸார் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபேவை தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, தற்போது அவரின் கூட்டளிகளைக் களையெடுக்கும் பணியை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

விலையுயர்ந்த கார்களை ஜேசிபி கொண்டு நொறுக்கிய போலீஸ்... இது யாரோட காருனு தெரியுமா?

இதனடிப்படையில், விகாஸ் துபே-விற்கு சொந்தமான இடங்களில் அதிரடி வேட்டையை உத்தரப்பிரதேச காவல்துறை நடத்தி வருகின்றது.

இதன் ஒரு பங்காக கான்பூர் மாவட்டம், பிக்ரூ கிராமத்தில் இருந்த விகாஷ் துபேவிற்கு சொந்தமான வீட்டை இடித்துத்தள்ள அம்மாநில காவல்துறை திட்டமிட்டது.

விலையுயர்ந்த கார்களை ஜேசிபி கொண்டு நொறுக்கிய போலீஸ்... இது யாரோட காருனு தெரியுமா?

இதற்காக, துபே பயன்படுத்திய அதே பொக்லைன் எந்திரத்தையே காவல்துறையும் பயன்படுத்தியுள்ளது. இந்த பொக்லைன் எந்திரத்தை வைத்துதான் போலீஸார்களின் வழியை இடைமறித்து துபே தாக்குதல் நிகழ்த்தியதாக கூறப்படுகின்றது.

விலையுயர்ந்த கார்களை ஜேசிபி கொண்டு நொறுக்கிய போலீஸ்... இது யாரோட காருனு தெரியுமா?

எனவேதான் வேறொரு கிராமத்தில் இருந்த அந்த பொக்லைன் எந்திரத்தை மீண்டும் வரவழைத்து துபே வீட்டை காவல்துறை இடித்துத் தள்ளியது. அப்போது, ரவுடி விகாஷ் துபேவிற்கு சொந்தமான இரு கார்கள் அந்த வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதனையும் அதே பொக்லைன் எந்திரத்தை வைத்தே போலீஸார் அழித்தனர்.

விலையுயர்ந்த கார்களை ஜேசிபி கொண்டு நொறுக்கிய போலீஸ்... இது யாரோட காருனு தெரியுமா?

அதில், ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோவும், மற்றொன்று டொயோட்டா ஃபார்ச்சூனர் காரும் ஆகும். இரண்டும் விலையுர்ந்த எஸ்யூவி ரக கார்கள் ஆகும். இவற்றைதான் கான்பூரை விட்டு தப்பிச் செல்வதற்கு முன்னர் வரை ரவுடி துபே பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. ஆனால், அது அவருக்கு சொந்தமானதுதானா என்பது தெரியவில்லை.

விலையுயர்ந்த கார்களை ஜேசிபி கொண்டு நொறுக்கிய போலீஸ்... இது யாரோட காருனு தெரியுமா?

இருப்பினும், சர்ச்சைக்குரிய இடத்தில் இரு கார்களும் இருந்ததால் போலீஸார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். இந்த நடவடிக்கையில் மஹிந்திரா ஸ்கார்பியோ அடையாளம் தெரியாத வகையில் முழுவதுமாக அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. இதேபோன்று டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் கூரைப் பகுதி முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த கார்களை ஜேசிபி கொண்டு நொறுக்கிய போலீஸ்... இது யாரோட காருனு தெரியுமா?

இந்த கார்கள் நிறுத்தப்பட்டிருந்த வீட்டை துபே கடந்த 2013ம் ஆண்டு கட்டியிருப்பதாக போலீஸார் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அது 12 அடி நீளம் மற்றும் அகலம் கொண்ட வீடாகும்.

விலையுயர்ந்த கார்களை ஜேசிபி கொண்டு நொறுக்கிய போலீஸ்... இது யாரோட காருனு தெரியுமா?

இந்த வீட்டையேப் பயன்படுத்திய பல நாச காரியங்களில் துபே ஈடுபட்டுவந்தது தெரியவந்துள்ளது. அவர் மீது தற்போது வரை 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில்தான், பிக்ரூ கிராமத்தில் அவர் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 15க்கும் மேற்பட்ட போலீஸார்கள் குழுவாக சென்றனர்.

விலையுயர்ந்த கார்களை ஜேசிபி கொண்டு நொறுக்கிய போலீஸ்... இது யாரோட காருனு தெரியுமா?

இதுகுறித்த தகவலை துபேவின் காதுகளுக்கு போலீஸ் கருப்பு ஆடு ஒன்று தெரிவித்தது. எனவே, முன்னரே காவலர்களின் திட்டத்தை அறிந்த துபே, அவர்களை வழியிலேயே மடக்கி தாக்க திட்டமிட்டது. அதனை வெற்றிக்கரமாக செய்தும் முடித்துவிட்டது. இந்த தாக்குதலில் காவலர்கள் அனைவரும் படுகாயம் அடைந்தனர். மேலும், 8 போலீஸார் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

கடந்த வியாழன் அன்று நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. துபேவின் தாக்குதலில் ஒரு டிஎஸ்பி (தேவேந்திர மிஸ்ரா), மூன்று எஸ்ஐ-க்கள் மற்றும் நான்கு கான்ஸ்டபிள்கள் கொல்லப்பட்டனர்.

விலையுயர்ந்த கார்களை ஜேசிபி கொண்டு நொறுக்கிய போலீஸ்... இது யாரோட காருனு தெரியுமா?

தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் காவல்துறையின் கை ஓங்கி நிற்கும் நிலையில் வட மாநிலத்தில் அரங்கேறிய இந்த சம்பவம் நாட்டு மக்கள் அனைவரின் பார்வையையும் திருப்பியுள்ளது.

விலையுயர்ந்த கார்களை ஜேசிபி கொண்டு நொறுக்கிய போலீஸ்... இது யாரோட காருனு தெரியுமா?

இதைத்தொடர்ந்து, ரவுடி துபேவை பிடிக்க உபி காவல்துறை 25 தனிப்படைகளை அமைத்துள்ளது. இந்த நிலையில்தான் துபே பதுங்கியிருந்த வீடு மற்றும் அவரது வாகனங்களைப் போலீஸார் வேட்டையாடி வருகின்றனர். அவ்வாறு, கார்களை அழிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

விலையுயர்ந்த கார்களை ஜேசிபி கொண்டு நொறுக்கிய போலீஸ்... இது யாரோட காருனு தெரியுமா?

போலீஸாரின் இந்த செயலுக்கு ஒரு ஆதரவையும், "விகாஸ் துபேவைப் பிடிக்க இது எவ்வாறு உதவுகிறது?" என்ற வினாவையும் எழுப்பியுள்ளது.

இருப்பினும், போலீஸாரின் அதிரடி தொடர்ந்து வருகின்றது. எனவே, விரைவில் ரவுடி துபே உபி காவல்துறையில் கையில் பிடிபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
UP Police demolishing Mahindra Scorpio & Toyota Fortuner of gangster Vikas Dubey. Read In Tamil.
Story first published: Monday, July 6, 2020, 17:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X