கான்வாய்ல போனது குத்தமா! போலீஸாரை கொத்தாக இடைநீக்கம் செய்த காவல்துறை! இதுக்கு வேறொரு காரணம் இருக்கு!

உபி காவல்துறை போலீஸார்கள் 11 பேரை குண்டுக்கட்டாக பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதற்கான காரணம் தெரிஞ்சா நிச்சயம் மிரண்டு போய்ருவீங்க. வாருங்கள் இதுகுறித்த தகவலை விரிவாக பார்க்கலாம்.

கான்வாய்ல போனது ஒரு குத்தமா... போலீஸார்களை கொத்தாக பணியிடை நீக்கம் செய்த காவல்துறை! இதுக்கு வேறொரு காரணம் இருக்கு!

இளைஞர்கள் மத்தியில் இணைய மோகம் அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக, இணையத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக விநோதமான செயல்களைச் செய்து அதுகுறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது சில நேரங்களில் அவர்களை ஓவர் நைட்டில் ஒபாமாவாக மாற்றிவிடுகின்றது.

கான்வாய்ல போனது ஒரு குத்தமா... போலீஸார்களை கொத்தாக பணியிடை நீக்கம் செய்த காவல்துறை! இதுக்கு வேறொரு காரணம் இருக்கு!

ஆனால், பெரும்பாலான நேரங்களில் அது ஒர்க் ஆவதில்லை. மாறாக இளைஞர்களை சிக்கலில் சிக்க வைத்து விடுகின்றது. இந்த இணைய மோகமானது சாதாரண இளைஞர்களிடத்தில் மட்டுமின்றி முக்கிய பொறுப்பில் இருக்கும் சில அதிகாரிகளிடத்தில் காணப்படுகின்றது. இதனால், அவர்களும் சில நேரங்களில் விளக்கைச் சுற்றித் திரியும் விட்டில் பூச்சிகளாக மாறிவிடுகின்றனர்.

கான்வாய்ல போனது ஒரு குத்தமா... போலீஸார்களை கொத்தாக பணியிடை நீக்கம் செய்த காவல்துறை! இதுக்கு வேறொரு காரணம் இருக்கு!

ஆம், வீணான மோகத்தின் காரணமாக பதவி, பெயர், புகழ் உள்ளிட்டவற்றை அவர்கள் இழக்க நேரிடுகின்றது. இம்மாதிரியான ஓர் சம்பவம்தான் தற்போது உபி மாநிலத்தில் அரங்கேறியிருக்கின்றது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஊரடங்கு நீடித்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால், மக்கள் வழக்கம்போல் நடமாட தடைவிதிக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

கான்வாய்ல போனது ஒரு குத்தமா... போலீஸார்களை கொத்தாக பணியிடை நீக்கம் செய்த காவல்துறை! இதுக்கு வேறொரு காரணம் இருக்கு!

இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில், எஸ்எச்ஓ என்றழைக்கப்படும் பதவியில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஒருவரின் பணியிடம் மாற்றம் காரணமாக, அவருடன் பணியாற்றிய சக போலீஸார்கள் பிரியாவிடை கொடுக்கும் விதமாக விழா கொண்டாடிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கான்வாய்ல போனது ஒரு குத்தமா... போலீஸார்களை கொத்தாக பணியிடை நீக்கம் செய்த காவல்துறை! இதுக்கு வேறொரு காரணம் இருக்கு!

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் வாகன கான்வாயை ஏற்படுத்தி அவருக்கு மரியாதைச் செலுத்தியுள்ளனர். போலீஸாரின் இந்த செயல்குறித்த வீடியோ முகப்புத்தக்கம் மற்றும் யுடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக வைரலாக வருகின்றது.

கான்வாய்ல போனது ஒரு குத்தமா... போலீஸார்களை கொத்தாக பணியிடை நீக்கம் செய்த காவல்துறை! இதுக்கு வேறொரு காரணம் இருக்கு!

பூட்டுதல் காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்ற வேலையில் போலீஸாரின் இந்த கொண்டாட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவலர்களே இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட்டிருப்பது உபி மாநில மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கான்வாய்ல போனது ஒரு குத்தமா... போலீஸார்களை கொத்தாக பணியிடை நீக்கம் செய்த காவல்துறை! இதுக்கு வேறொரு காரணம் இருக்கு!

எனவே, பலர் இணையம் வாயிலாக தங்களது கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் உபி காவல்துறை அந்த விதிமீறிய காவலர்கள் 11 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக பணியிடை நீக்கம் செய்து ஆணையிட்டுள்ளது.

கான்வாய்ல போனது ஒரு குத்தமா... போலீஸார்களை கொத்தாக பணியிடை நீக்கம் செய்த காவல்துறை! இதுக்கு வேறொரு காரணம் இருக்கு!

அதில், தற்போது பணியிட மாற்றம் பெற்ற காவல் ஆய்வாளர் மனோஜ் குமாரும் அடங்குவர். இவருக்குதான் பிரியாவிடை விழாவை சக காவலர்கள் வழங்கினர்.

இந்த விழா கொண்டாட்டத்தில் பல விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, லாக்டவுண் உத்தரவை மீறியது, மாஸ்க் அணியாமல் இருந்தது என பல விதிமீறல் சம்பவங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

கான்வாய்ல போனது ஒரு குத்தமா... போலீஸார்களை கொத்தாக பணியிடை நீக்கம் செய்த காவல்துறை! இதுக்கு வேறொரு காரணம் இருக்கு!

அதுமட்டுமின்றி, இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாக கருதப்படும் மாடிஃபை செய்யப்பட்ட ஜீப்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அம்மாதிரியான ஜீப்பில்தான் காவல் ஆய்வாளர் மனோஜ் குமார் கெத்தாக அமர்ந்து வலம் வந்தார். இதற்கான ஆப்பினையும் உபி காவல்துறையிடம் இருந்து அவர் பெற்றிருக்கின்றார்.

கான்வாய்ல போனது ஒரு குத்தமா... போலீஸார்களை கொத்தாக பணியிடை நீக்கம் செய்த காவல்துறை! இதுக்கு வேறொரு காரணம் இருக்கு!

அந்த ஜீப் மட்டுமின்றி, பைக்குகள் சிலவற்றிலும் தடைச் செய்யப்பட்ட ஆஃப்டர் மார்க்கெட் அணிகலன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், எந்தவொரு போலீஸாரும் அதில் ஹெல்மெட் அணியவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அத்துடன், வாகனங்களில் இருந்த சைரன்களையும் அதிக ஒலியுடன் ஒலித்தவாறு கான்வாயை அந்த போலீஸார் கூட்டம் எடுத்துச் சென்றது.

கான்வாய்ல போனது ஒரு குத்தமா... போலீஸார்களை கொத்தாக பணியிடை நீக்கம் செய்த காவல்துறை! இதுக்கு வேறொரு காரணம் இருக்கு!

இந்த சைரன் ஒலியால் அதிர்ந்துபோன அப்பகுதி மக்கள் என்ன நடக்கின்றது என்பதைகூட உணர முடியாமல் போலீஸாரின் கான்வாயை வியந்து வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (புதன்கிழமை) நடைபெற்றதாக கூறப்படுகின்றது. ஆனால், வீடியோ தற்போதே வைரலாகத் தொடங்கியிருக்கின்றது. எனவேதான் அம்மாவட்ட ஏஎஸ்பி அவனிஷ் குமார் மிஷ்ரா, பணியிடை நீக்கம் நடவடிக்கையை விதிமீறிய போலீஸார்கள் மீது எடுத்துள்ளார்.

கான்வாய்ல போனது ஒரு குத்தமா... போலீஸார்களை கொத்தாக பணியிடை நீக்கம் செய்த காவல்துறை! இதுக்கு வேறொரு காரணம் இருக்கு!

காவல் ஆய்வாளர் மனோஜ்குமாரின் பணியிட மாற்றத்திற்கு மற்றுமொரு காரணமும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அம்மாவட்ட பாஜக கட்சி பிரமுகரின் புகாரின் காரணமாக பாஸ்காரி காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த மனோஜ் குமாரை, ஜெய்த்பூர் காவல்நிலையத்துக்கு மாற்றி உத்தரவிடப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்துதான் அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்வை பாஸ்காரி காவல்நிலைய காவலர்களால் மேற்கொண்டனர்.

ஆனால், தற்போது பணியிடம் மாற்றம் மற்றும் பணி ஆகிய இரண்டும் ஆய்வாளர் மனோஜ் குமாரின் கையை விட்டு நழுவியுள்ளது. இந்த நடவடிக்கையில் பாஜக கட்சி பிரமுகரின் அழுத்தமும் இருக்கலாம் அம்மாநில ஊடக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆய்வாளர் மனோஜ் குமார்-இன் பணியில் திருப்தி இல்லாத காரணத்தால் தொடர் புகாரை அந்த அரசியல் பிரமுகர் வழங்கி வந்ததாகக் கூறப்படுகின்றது.

கான்வாய்ல போனது ஒரு குத்தமா... போலீஸார்களை கொத்தாக பணியிடை நீக்கம் செய்த காவல்துறை! இதுக்கு வேறொரு காரணம் இருக்கு!

இந்நிலையில்தான் உபி காவல்துறை அதிரடி நடவடிக்கையை மனோஜ் குமார் மீது மட்டுமல்லாமல் அந்த கான்வாயில் இடம்பெற்ற 11 காவலர்கள்மீதும் எடுத்துள்ளது.

ஆய்வாளர் மனோஜ் குமார் சிறந்த காவல் பணியாளராக இருந்தாலும் நாடே இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இதுபோன்ற விழா நிகழ்விற்கு ஒப்புகொண்டது சற்றே கண்டிக்கத்தக்க செயல் ஆகும்.

கான்வாய்ல போனது ஒரு குத்தமா... போலீஸார்களை கொத்தாக பணியிடை நீக்கம் செய்த காவல்துறை! இதுக்கு வேறொரு காரணம் இருக்கு!

தேசியளவில் ஊரடங்கு நீடித்து வருவதால் சாமானிய மக்கள் வெளியில் தலையை காட்டவே தயங்குகிறார். இதற்கு கொரோனா பரவல் ஒரு காரணம் என்றாலும், போலீஸாரின் கண் மூடித்தனமான தடியடி மற்றும் அபராதங்கள் உள்ளிட்டவையே மக்களின் அச்சத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில் காவலர்களின் கான்வாய் வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
UP Police Suspends 11 Officers For Carrying Out Convoy During Lockdown Seen In Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X