பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள 5 புதிய கார்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், இந்தியாவில் கார் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்தை மக்கள் தவிர்ப்பதாலும், பண்டிகை காலம் நெருங்கி வருவதாலும், வரும் மாதங்களில் கார் விற்பனை வெகுவாக உயரும் என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

எனவே புதிய கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய கார் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் கார்களுக்குதான் வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே 10 லட்ச ரூபாய்க்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் சிறந்த கார்கள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய கார்கள் நடப்பு 2020ம் ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் 10 லட்ச ரூபாய்க்குள் புதிய காரை வாங்க முடிவு செய்திருந்தால், இந்த கார்களை பரிசீலிக்கலாம். வாருங்கள், இனி செய்திக்குள் செல்வோம்.

பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

கியா சொனெட் (Kia Sonet)

வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சொனெட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு கியா நிறுவனம் தயாராகி வருகிறது. செல்டோஸ் மற்றும் கார்னிவல் கார்களை தொடர்ந்து, கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள மூன்றாவது கார் இதுவாகும்.

பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் கியா சொனெட் போட்டியிடவுள்ளது. பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கியா சொனெட் விற்பனைக்கு வரவுள்ளது.

பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

கியா சொனெட் காரின் டிசைன் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. அத்துடன் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் முதல் முறை என குறிப்பிடப்படும்படியான பல்வேறு வசதிகளையும் கியா சொனெட் பெற்றுள்ளது. 7 முதல் 11 லட்ச ரூபாய் என்ற விலைக்குள் கியா சொனெட் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

ரெனால்ட் கிகர் - எச்பிசி (Renault Kiger - HBC)

ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து வெளிவரவுள்ள புத்தம் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் இது. தற்போது எச்பிசி என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வரும் இந்த புதிய கார் கிகர் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கியா சொனெட்டை போன்று, இதுவும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்தான்.

பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கியா சொனெட் காரின் போட்டியாளர்களுடன்தான் ரெனால்ட் கிகர் காரும் போட்டியிடவுள்ளது. 99 பிஎச்பி பவர் மற்றும் 160 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் ரெனால்ட் கிகர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

6.50 முதல் 9 லட்ச ரூபாய் வரையிலான விலையில் புதிய ரெனால்ட் கிகர் கார் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்களை விட குறைவான விலையில் வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், ரெனால்ட் கிகர் கார் மீதான ஆவல் இந்திய வாடிக்கையாளர்களின் மத்தியில் மேலோங்கியுள்ளது.

பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

நிஸான் மேக்னைட் (Nissan Magnite)

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் அதிக போட்டி நிறைந்தது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், அனைத்து கார் நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் போட்டி போட்டு கொண்டு புதிய கார்களை களமிறக்கி வருகின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள 2 கார்களும் அதற்கான உதாரணமாகும்.

பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

இந்த வரிசையில்தான் நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரும் வருகிறது. எனவே வரும் மாதங்களில் இந்த செக்மெண்ட்டில் போட்டி அனல் பறக்க போவது உறுதி. சிஎம்எஃப்-ஏ+ பிளாட்பார்மில், நிஸான் மேக்னைட் கார் உருவாக்கப்பட்டுள்ளது. ரெனால்ட் ட்ரைபர் மற்றும் ரெனால்ட் கிகர் உள்ளிட்ட கார்களும் இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளன.

பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

ரெனால்ட் கிகர் காரில் வழங்கப்படவுள்ள அதே 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுதான் நிஸான் மேக்னைட் காரிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 முதல் 10 லட்ச ரூபாய்க்குள்ளான விலையில் நிஸான் மேக்னைட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

டொயோட்டா அர்பன் க்ரூஸர் (Toyota Urban Cruiser)

டொயோட்டா-சுஸுகி ஆகிய இரண்டு நிறுவனங்களும் கூட்டணி அமைத்திருப்பது தெரிந்த விஷயம்தான். இந்த கூட்டணியில் இருந்து இந்திய சந்தையில் வெளிவந்த முதல் தயாரிப்பு க்ளான்சா. அதாவது மாருதி சுஸுகி பலேனோ கார், டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு க்ளான்சா என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

இந்த வரிசையில் தற்போது மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. 8 முதல் 11 லட்ச ரூபாய் வரையிலான விலையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

மஹிந்திரா தார் (Mahindra Thar)

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மற்றொரு எஸ்யூவி கார் இது. பழைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடும்போது முற்றிலும் புதிய மாடலாக மஹிந்திரா தார் எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட புதிய மஹிந்திரா தாரை பார்த்து பலரும் சொக்கி போயுள்ளனர்.

பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ள புத்தம் புதிய 2020 மஹிந்திரா தார் எஸ்யூவி வரும் அக்டோபர் 2ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. 8 முதல் 12 லட்ச ரூபாய் வரையிலான விலையில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கார்களின் வருகையின் மூலமாக வரும் மாதங்களில் சந்தை களைகட்ட போவது உறுதி.

Most Read Articles

English summary
Upcoming Cars Under Rs 10 Lakh - Kia Sonet, Mahindra Thar, Toyota Urban Cruiser And More. Read in Tamil
Story first published: Tuesday, September 15, 2020, 5:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X