முற்றிலும் அருமை... ஸ்கோடாவின் புதிய செடான் காரை பற்றி ரெண்டே வார்த்தையில் கூறிய இயக்குனர்...

ஹூண்டாய் வெர்னா மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தைக்கு வரவுள்ள ஸ்கோடா ஏஎன்பி செடான் காரின் டிசைன், தயாரிப்பு பணிக்கு உட்படுத்த தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்கோடாவின் இந்த புதிய செடான் காரின் டிசைன் அமைப்பை பற்றி ஆட்டோஎக்ஸ் செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

முற்றிலும் அருமை... ஸ்கோடாவின் புதிய செடான் காரை பற்றி ரெண்டே வார்த்தையில் கூறிய இயக்குனர்...

ஏஎன்பி என்பது ஸ்கோடாவின் எதிர்கால செடான் காருக்கு தற்போதைக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் ஆகும். ஏனெனில் இது ராபிட் மாடலின் இரண்டாம் தலைமுறை காராகவும் இருக்கலாம். ஆனால் இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைக்கு எந்த தகவலும் இல்லை.

இது புதிய தலைமுறை ராபிட் மாடலாக அறிமுகமானாலும், தற்போதைய ராபிட் காரையும் எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படும் மலிவான செடான் மாடலாக ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முற்றிலும் அருமை... ஸ்கோடாவின் புதிய செடான் காரை பற்றி ரெண்டே வார்த்தையில் கூறிய இயக்குனர்...

இவ்வாறு ஹோண்டா நிறுவனம் முந்தைய தலைமுறை சிட்டி மாடலுடன் புதிய தலைமுறை சிட்டி மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ராபிட் காரின் தற்போதைய மாடலை புதிய தலைமுறை கார் விற்பனைக்கு வந்த பின்பு ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக ஸ்கோடா நிறுவனம் மாற்றலாம்.

இந்த நிலையில் தான் இந்நிறுவனத்தின் இந்திய சந்தைக்கான விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் ஜாக் ஹோலிஸ் ஏஎன்பி செடான் மாடலின் டிசைனை பற்றி ஒரே வார்த்தையில் முற்றிலும் அருமை என கூறியுள்ளார்.

MOST READ: பருவமழை தொடங்க போகுது... மழை நீரில் இருந்து வாகனங்களை பாதுகாக்க எளிமையான வழி என்னென்ன..?

முற்றிலும் அருமை... ஸ்கோடாவின் புதிய செடான் காரை பற்றி ரெண்டே வார்த்தையில் கூறிய இயக்குனர்...

எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வரும் ஸ்கோடாவின் இந்த இரண்டாவது மாடலை பற்றி ஜாக் ஹோலிஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறுகையில், இந்த இரண்டாவது தயாரிப்பு மிட்-சைஸ் செடான் ஆகும். நான் இந்த காரை பார்த்தேன். இது முற்றிலும் அருமையானதாக உள்ளது. இந்தியாவில் செடான் கார்களுக்கு ஏற்பட்டு வரும் சரிவை இந்த புதிய மாடல் தடுத்து நிறுத்தும் என நினைக்கிறேன்.

முற்றிலும் அருமை... ஸ்கோடாவின் புதிய செடான் காரை பற்றி ரெண்டே வார்த்தையில் கூறிய இயக்குனர்...

நாங்கள் இந்த செடான் மாடலை 2021ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளோம் என கூறினார். ஸ்கோடா நிறுவனம் புதிய ஏஎன்பி மாடலில் தற்போதைய ராபிட் மாடலின் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போசார்ஜ்டு 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன் புதிய செடான் கார் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எவொ டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வையும் பெறலாம். இதில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் ராபிட் மாடலில் அதிகப்பட்சமாக 110 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

முற்றிலும் அருமை... ஸ்கோடாவின் புதிய செடான் காரை பற்றி ரெண்டே வார்த்தையில் கூறிய இயக்குனர்...

ஆனால் இந்த என்ஜின் மட்டும் ஏஎன்பி மாடலில் வழங்கப்பட்டால் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ட்யூனிங் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை 1.5 லிட்டர் எவோ என்ஜினும் புதிய ஏஎன்பி செடான் காரில் வழங்கப்பட்டால் நிச்சயம் இது ஸ்கோடாவின் மிக தைரியமான நகர்த்தல் ஆகும்.

முற்றிலும் அருமை... ஸ்கோடாவின் புதிய செடான் காரை பற்றி ரெண்டே வார்த்தையில் கூறிய இயக்குனர்...

இந்த என்ஜின் 130 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படலாம். இந்த இரு என்ஜின் தேர்வுகளுடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் வழங்கப்படலாம். தொழிற்நுட்பங்களில் தரத்தில் ஸ்கோடாவின் புதிய ஏஎன்பி மாடல் ப்ரீமியமாக விளங்கும் என தகவல்கள் கூறுகின்றன.

முற்றிலும் அருமை... ஸ்கோடாவின் புதிய செடான் காரை பற்றி ரெண்டே வார்த்தையில் கூறிய இயக்குனர்...

இந்த வகையில் இந்த செடான் காரில் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லேம்ப்கள், விர்டுயுவல் காக்பிட் கஸ்டமைஸபிள் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 8-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் வசதிகள், ஆறு காற்றுப்பைகள், 360-டிகிரி கேமிரா, எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.

முற்றிலும் அருமை... ஸ்கோடாவின் புதிய செடான் காரை பற்றி ரெண்டே வார்த்தையில் கூறிய இயக்குனர்...

2021 ஏஎன்பி மாடலின் விலையை ஸ்கோடா நிறுவனம் எக்ஸ்ஷோரூமில் ரூ.9.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையில் நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்கோடா ரேபிட் மாடலின் மேட் கான்செப்ட் இந்த வருடத்தில் அறிமுகம் செய்ய தயாரிப்பு நிறுவனத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Zac Hollis: Skoda ANB sedan looks “absolutely fantastic”, arriving in 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X