கொரோனாவால் வாகன டீலர்களுக்கு பெரும் இழப்பு... உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை!

கொரோனாவால் பல்வேறு வகையிலும் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக வாகன டீலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பல வாகன டீலர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் வாகன டீலர்களுக்கு பெரும் இழப்பு... உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை!

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை சொல்லி மாளாது. தினசரி கூலித் தொழிலாளர்கள், ஏழைகள் வருவாய் இல்லாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகி இருக்கும் நிலையில், மறுபுறத்தில் தொழில் நிறுவனங்களை நடத்துவோரும், வர்த்தக ஸ்பானங்களும் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. அதில், வேலைபார்க்கும் ஊழியர்களின் எதிர்காலம் நிச்சயத்தன்மை இல்லாத நிலைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் வாகன டீலர்களுக்கு பெரும் இழப்பு... உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை!

கொரோனாவால் வாகனத் துறைக்கும் தினசரி பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றன. கார் நிறுவனங்கள் ஆலைகளை இழுத்து மூடியுள்ளதால், தினசரி ரூ.2,500 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனாவால் வாகன டீலர்களுக்கு பெரும் இழப்பு... உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை!

இந்த நிலையில், வாகன டீலர்களின் நிலைமைதான் படுமோசமாகி உள்ளது. பல டீலர்களில் பிஎஸ்4 வாகனங்கள் இருப்பில் தேங்கி இருப்பதால், அதனை காலக்கெடுவுக்குள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காலக்கெடு நீடித்தாலும், இருப்பில் இருக்கும் 10 சதவீத பிஎஸ்4 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய முடியும்.

கொரோனாவால் வாகன டீலர்களுக்கு பெரும் இழப்பு... உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை!

அதுவும், ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டு அடுத்த 10 நாட்களுக்குள் விற்பனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், 7 லட்சம் இருசக்கர வாகனங்கள் மற்றும் 20,000 நான்கு சக்கர வாகனங்கள் இருப்பில் இருப்பதால், பல ஆயிரம் கோடி இழப்பை சந்திக்கும் நிலையில் வாகன டீலர்களும், வாகன உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன.

கொரோனாவால் வாகன டீலர்களுக்கு பெரும் இழப்பு... உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை!

அடுத்து, கடந்த 15ந் தேதி முதல் டீலர்கள் மூடப்பட்டு இருப்பதால், விற்பனை இல்லாமல் பல கோடி ரூபாய் முடக்கம் ஏற்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு சம்பளம், வாடகை, மின்சார கட்டணம் என போன்ற செலவீனங்களை ஏற்க வேண்டி இருப்பதால் இக்கட்டான சூழலில் இருப்பதாக டீலர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனாவால் வாகன டீலர்களுக்கு பெரும் இழப்பு... உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை!

மேற்கு பிராந்தியத்தை சேர்ந்த வாகன டீலர் குழுமத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"எங்களுக்கு 12 டீலர்களும், 15 ஒர்க்ஷாப்புகளும் உள்ளன. இந்த மாதம் மட்டும் ரூ.8.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு இருப்பதால், ரூ.12 கோடி வரை மொத்தமாக இழப்பு இருக்கும் என்று மதிப்பிட்டு இருக்கிறோம். இது மிகவும் கவலை அளிக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் வாகன டீலர்களுக்கு பெரும் இழப்பு... உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை!

டீலர்கள் மீண்டு வருவதற்கு மத்திய அரசு சில சலுகைகளை அளிக்க வேண்டும் என்று டீலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். வாகனங்களை உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து பெறுவதற்கு கடன் வாங்கியிருக்கும் டீலர்களுக்கு வட்டியை தாமதமாக செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் கால அவகாசத்தை மேலும் நீடித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Source: NDTV Auto

Most Read Articles
English summary
According to reports, Vehicle dealers are facing huge loss across India due to corona lockdown.
Story first published: Monday, March 30, 2020, 18:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X