நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்! டாக்ஸி டிரைவர்கள் ஹேப்பி

மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்திய திட்டத்தை தமிழக அரசு தற்போது நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்.. டாக்ஸி ஓட்டுநர்கள் ஹேப்பி அண்ணாச்சி..!

நாடு முழுவதும் நிலவும் மிகப்பெரிய சிக்கல்களில் முக்கியமான ஒன்றாக வாகன புகையால் உருவாகும் மாசு இருக்கின்றது. இதனைக் கட்டுபடுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக, மாசு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கும் எரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கின்ற முயற்சிகள் அண்மைக் காலங்களாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்.. டாக்ஸி ஓட்டுநர்கள் ஹேப்பி அண்ணாச்சி..!

அவை சுற்றுப்புறச் சூழலுக்கு துளியளவும் தீங்கு விளைவிக்காது. மின்வாகன விற்பனையை ஊக்குவித்து வரும் அரசு, மறுபுறம் குறைந்த மாசினை வெளிப்படுத்தும் சிஎன்ஜி, எல்பிஜி மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு ஆதரவளித்து வருகின்றது. இவை தற்போது விற்பனையில் இருக்கும் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும் மிகக் குறைந்தளவு மாசையே உமிழும்.

நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்.. டாக்ஸி ஓட்டுநர்கள் ஹேப்பி அண்ணாச்சி..!

ஆகையால், பெட்ரோல் பங்குகளுக்கு இணையான சிஎன்ஜி மற்றும் எல்பிஜி மையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதேபோன்று, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அதகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுமட்டுமின்றி, தற்போது நடைமுறையில் இருக்கும் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்தை அப்கிரேட் செய்து பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக உயர்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்.. டாக்ஸி ஓட்டுநர்கள் ஹேப்பி அண்ணாச்சி..!

இத்திட்டம் வருகின்ற ஏப்ரலம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கின்றது. இவ்வாறு, எரிபொருள் வாகனங்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத போரை அரசு தொடுத்து வருகின்றது. அதேசமயம், பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு ஆப்பு வைக்கின்ற வகையிலான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகின்றது.

நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்.. டாக்ஸி ஓட்டுநர்கள் ஹேப்பி அண்ணாச்சி..!

அந்தவகையில், பழைய வாகனங்களை அதாவது பத்து ஆண்டுகளுக்கும் அதிகமான வயதுடைய பழைய வாகனங்களை, தரச்சான்றை (எஃப்சி) வைத்து பயன்பாட்டில் இருந்து நீக்கும் முயற்சிகள் களமிறங்கியுள்ளது.

நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்.. டாக்ஸி ஓட்டுநர்கள் ஹேப்பி அண்ணாச்சி..!

இதற்காக, மோட்டார் வாகன சட்டத்தில் ஒரு சில சீர்த்திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. தொடர்ந்து, பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் வாகனங்களின் பதிவை ரத்து செய்து, அதை ஸ்கிராப் செய்யவும் அரசு திட்டமிட்டு வருகின்றது. இதற்கான முயற்சிகள் அதிதீவிரமாகவே செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் சீர்திருத்தத்தை தமிழக அரசு தற்போதே நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.

நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்.. டாக்ஸி ஓட்டுநர்கள் ஹேப்பி அண்ணாச்சி..!

ஆகையால், வணிக ரீதியாக இயங்கும் வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை எஃப்சி (தரச்சான்று) வாங்க வேண்டுமென்று இருந்த நடைமுறை, தற்போது இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வாங்கினாலே போதும் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், வணிக ரீதியாக இயங்கும் எட்டு வயதுடைய வாகனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். 8 ஆண்டுகளைக் கடந்த வாகனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை எஃப்சி சான்று பெற வேண்டும்.

நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்.. டாக்ஸி ஓட்டுநர்கள் ஹேப்பி அண்ணாச்சி..!

இதற்கான அறிவிப்பை தமிழக அரசு கடந்த பிப்ரவரி 13ம் தேதி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, இந்த மாற்றத்தை வாஹன் இணையதளத்தில் மாற்றும்படி என்ஐசிக்கு மாநில போக்குவரத்து ஆணையர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்.. டாக்ஸி ஓட்டுநர்கள் ஹேப்பி அண்ணாச்சி..!

அரசின் இந்த நடவடிக்கை வாடகை வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், வாகனத்துறை வல்லுநர்கள் இது காலம் தாழ்ந்த நடவடிக்கை எடுக்கும் என்றும், கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்.. டாக்ஸி ஓட்டுநர்கள் ஹேப்பி அண்ணாச்சி..!

பொதுவாக தமிழகத்தில் உள்ள சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் குறைந்தது ஆண்டு ஒன்றிற்கு 75கிமீட்டர்கள் முதல் 1 லட்சம் கிமீ வரை பயணிக்கின்றன.

இந்த சூழ்நிலையில் தரச்சான்றை இரண்டாண்டிற்கு ஒரு முறையென மாற்றும்போது வாகன உரிமைதாரர்கள் அலட்சியப்போக்குடன் வாகனங்களை பராமரிப்பார்கள். இது விபத்து போன்ற பின்விளைவுகளை அதிகரிக்கும் என தெரிவித்தனர்.

நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்.. டாக்ஸி ஓட்டுநர்கள் ஹேப்பி அண்ணாச்சி..!

ஆனால், ஒவ்வொரு ஆண்டும் எஃப்சி செய்வதால் கிடைக்கும் லாபத்தில் சரிபாதி எஃப்சி செய்வதற்கே செலவாகிவிடுகின்றது. ஆகையால், தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த சீர்திருத்தம் வாடகை வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்.. டாக்ஸி ஓட்டுநர்கள் ஹேப்பி அண்ணாச்சி..!

தமிழக நடைமுறைப்படுத்தியிருக்கும் இத்திட்டத்தை மற்ற அனைத்து மாநலங்களும் எப்போதோ நிறைவேற்றிவிட்டன. ஆனால், தமிழக அரசோ தற்போது இந்த மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கின்றன. ஆகையால், இத்திட்டத்தை கடைசியாக நடைமுறைக்கு கொண்டு வந்த மாநிலம் தமிழகம் என கூறப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Vehicle Fitness Certificate Renewal Rule Changed In TamilNadu. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X