அண்ணனுக்கு போட்டியாக அதி வேக காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரரின் தம்பி... இப்படியும் ஒரு போட்டியா?

கோஹ்லியின் சகோதரர், அவருக்கு போட்டியாக விலையுயர்ந்த மற்றும் அதி வேக ஓடும் திறன் கொண்ட சூப்பர் காரை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

அண்ணனுக்கு போட்டியாக அதி வேக காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரரின் தம்பி... இப்படியும் ஒரு போட்டியா?

கொரோனா வைரஸ் அச்சத்தால் நீண்ட நாட்கள் கழித்து இந்தியா தற்போதே லேசாக இயங்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரின் சகோதரர் விலையுயர்ந்த போர்ஷே பனமேரா டர்போ காரை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் மணிக்கு 306 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுகந்தது.

அண்ணனுக்கு போட்டியாக அதி வேக காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரரின் தம்பி... இப்படியும் ஒரு போட்டியா?

இந்த காரை வாங்கியது யாராக இருக்கும் என்று தானே யோசித்துக் கொண்டுள்ளீர்கள். அந்த நபர் வேறு யாருமில்லை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியின் சகோதரர் விகாஷ் கோலிதான் அவர்.

இவரே, இந்த விலையுயர்ந்த மற்றும் அதி திறன் கொண்ட லக்சூரி காரை தற்போது டெலிவரி பெற்றிருக்கின்றார்.

அண்ணனுக்கு போட்டியாக அதி வேக காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரரின் தம்பி... இப்படியும் ஒரு போட்டியா?

கிரிக்கெட் பிரபலமாக வலம் வந்துக் கொண்டிருக்கும் விராட் கோலி, விளையாட்டு மீது மட்டுமின்றி வாகனங்கள் மீதும் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருக்கின்றனர். இதற்கு அவரின் வாகன நிறுத்துமிடமே சான்று. ஆம், விராட் கோலியிடம் பல முன்னணி நிறுவனங்களின் சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

அண்ணனுக்கு போட்டியாக அதி வேக காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரரின் தம்பி... இப்படியும் ஒரு போட்டியா?

அந்தவகையில், பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக், ஆடி எஸ்5, ஆடி ஆர்எஸ்5, ஆடி ஆர்8, ஆடி க்யூ 8 உள்ளிட்ட பல விலையுயர்ந்த ஆடம்பர ரக கார்களை அவர் பயன்படுத்தி வருகின்றார். கோஹ்லியிடம் ஆடி கார்கள் அதிகம் பயன்பாட்டில் இருப்பதற்கு ஓர் காரணம் இருக்கின்றது.

அண்ணனுக்கு போட்டியாக அதி வேக காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரரின் தம்பி... இப்படியும் ஒரு போட்டியா?

வாகனங்கள் மீது அதீத ஆர்வத்தைக் கொண்டவராக இருப்பதன் காரணத்தினாலும், முக்கிய விளையாட்டு வீரர் என்பதாலும் ஆடி நிறுவனம் அவரை இந்தியாவிற்கான பிராண்ட் அம்பாசிடராக நியமித்துள்ளது. இதனாலயே கோஹ்லியிடத்தில் ஆடி நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள் பல பயன்பாட்டில் இருக்கின்றன.

அண்ணனுக்கு போட்டியாக அதி வேக காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரரின் தம்பி... இப்படியும் ஒரு போட்டியா?

ஆனால், இந்த கார்களுக்கெல்லாம் போட்டி கொடுக்கும் வகையில், விராட் கோஹ்லியின் சகோதரர் விகாஷ் கோஹ்லி மிக அதிக விலைக் கொண்ட மற்றும் அதி திறன் கொண்ட போர்ஷே பனமேரா காரை வாங்கியிருக்கின்றார்.

இந்த கார் இந்தியாவில் ரூ. 1.93 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைப்பது குறிப்பிடத்தகுந்து. இந்த அதீத விலைக்கேற்ப பல்வேறு லக்சூரி வசதிகளை தன்னுள் அடக்கியிருக்கின்றது போர்ஷே பனமேரா.

அண்ணனுக்கு போட்டியாக அதி வேக காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரரின் தம்பி... இப்படியும் ஒரு போட்டியா?

விகாஷ் விராட் தற்போது பெற்றிருப்பது இரண்டாம் தலைமுறை போர்ஷே பனமேரா ஆகும். இது, அதன் முந்தைய மாடலைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்ட எஞ்ஜினைப் பெற்றிருக்கின்றது. இதுமட்டுமின்றி சேஸிஸ், டிசைன் மற்றும் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பல அடுக்கு மாற்றங்களைப் பெற்றிருக்கின்றது. இந்த அப்கிரேஷனால் போர்ஷே பனமேரா லக்சூரி அம்சத்தின் மறு உருவமாக மாறியிருக்கிறது.

அண்ணனுக்கு போட்டியாக அதி வேக காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரரின் தம்பி... இப்படியும் ஒரு போட்டியா?

இதேபோன்று, காரின் உட்பகுதியிலும் பல்வேறு மாற்றங்களை வாரி வழங்கியிருக்கிறது போர்ஷே. குறிப்பாக, காரில் ஏறியவுடன் டிரைவர் மற்றும் பயணிகளை வரவேற்கும் வகையில் ஒலிக்கும் வாழ்த்து குரல், அதன் பயணிகளை குஷிப்படுத்தும் வகையில் உள்ளது. இதுமட்டுமின்றி புதிய திரை, தொட்டால் இயங்கக்கூடிய கருவிகள் உள்ளிட்டவையும் இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றன.

அண்ணனுக்கு போட்டியாக அதி வேக காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரரின் தம்பி... இப்படியும் ஒரு போட்டியா?

இதேமாதிரியான அம்சங்கள் போர்ஷே 918 ஸ்பைடர் காரிலும் இடம்பெற்றிருக்கின்றது. இந்த கார் தற்போது நான்கு டூர் மாடலில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

சரி, இந்த கார் அதி வேகமா ஓடும் திறனைக் கொண்டது கூறினீர்களே அது உண்மை தானா என்ற கேள்வி தற்போது உங்கள் மத்தியில் எழும்பியிருக்கலாம். ஆம், இந்த கார் வெறும் 3.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தைத் தொட்டுவிடும்.

அண்ணனுக்கு போட்டியாக அதி வேக காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரரின் தம்பி... இப்படியும் ஒரு போட்டியா?

இந்த அதீத திறனை வெளிப்படுத்த போர்ஷே பனமேரா காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 550 எச்பி பவரை 5,750 ஆர்எம்மில், 770 என்எம் டார்க்கை 4,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இது, முந்தைய தலைமுறை பனமேராவைக் காட்டிலும் 30 எச்பி அதிகமாகும். என்எம் டார்க்கும் 70 வரை உயர்ந்துள்ளது.

அண்ணனுக்கு போட்டியாக அதி வேக காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரரின் தம்பி... இப்படியும் ஒரு போட்டியா?

இத்தகைய உயர் திறனினாலயே இந்த கார் மணிக்கு 306 கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது. இது, ஜெட் விமானங்களுக்கே தரையில் இயங்கும்போது சவால் விடும் வேகம் ஆகும். இந்த காரைதான் தற்போது விராட் கோஹ்லியின் சகோதரர், விகாஷ் கோஹ்லி பெற்றிருக்கின்றார்.

அண்ணனுக்கு போட்டியாக அதி வேக காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரரின் தம்பி... இப்படியும் ஒரு போட்டியா?

இந்த கார் அவருக்கு டெலிவரி வழங்கப்பட்டபோது அதிக பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே ஒப்படைக்கப்பட்டது. அதாவது, கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கிருமி நாசினி செய்யப்பட்டதை அடுத்தே மிகவும் பாதுகாப்பான முறையில் அக்கார் விகாஷ் கோஹ்லியிடம் வழங்கப்பட்டிருக்கின்றது.

அண்ணனுக்கு போட்டியாக அதி வேக காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரரின் தம்பி... இப்படியும் ஒரு போட்டியா?

தற்போது நாடு முழுவதும் கொரோனா அச்சம் நிலவி வருவதால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் இதுமாதிரியான நடவடிக்கையைதான் புதிய வாகனங்களை விற்பனைச் செய்யும்போது மேற்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி, வாகனங்களை சர்வீஸ் செய்யும்போது இடைவெளி கடைபிடித்து (நேரடி தொடர்பில்லாமல்) பழுது நீக்கம் செய்து வழங்குகின்றனர்.

Most Read Articles
 
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Virat Kohli's Brother Gets Delivery Of Porsche Panamera Turbo. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X