யூஸ்டு கார் சந்தையில் விராட் கோஹ்லியின் சூப்பர் கார்! இதை விற்க அவருக்கு எப்படிதான் மனசு வந்ததோ!

விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த கார் ஒன்று பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ந்து பார்க்கலாம்.

விற்பனைக்கு வந்த விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த சூப்பர்... எவ்ளோ விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த கார் ஒன்று செகண்ட் ஹேண்ட் சந்தையில் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்டிருப்பதைப் போலவே அதிக ஆர்வத்தை வாகனங்கள் மீதும் கொண்டிருக்கின்றார். குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இவர் ஓர் மிகப்பெரிய கார் பிரியர் ஆவார்.

விற்பனைக்கு வந்த விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த சூப்பர்... எவ்ளோ விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

எனவேதான் இவரிடத்தில் பல விலையுயர்ந்த கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவரின் கார் நிறுத்துமிடத்தில் ஒவ்வொரு வருடமும் புதிய கார் இணைவதும், அதில் இருந்து சில கார்கள் வெளியேறுவதும் ஓர் வாடிக்கையான விஷயமாகவே உள்ளது. அந்தவகையில், கடந்த காலங்களில் விராட் பயன்படுத்தி வந்த லம்போர்கினி கல்லர்டோ ஸ்பைடர் காரே தற்போது பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

விற்பனைக்கு வந்த விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த சூப்பர்... எவ்ளோ விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

இந்த காரை விராட் கடந்த 2015ம் ஆண்டு வாங்கியதாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து சில காலங்கள் பயன்பாட்டிற்கு பின்னர் அக்காரை விற்றிருக்கின்றார். தற்போது அந்த காரே மீண்டும் பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. அதாவது, கோஹ்லி பயன்படுத்திய காரின் தற்போதைய உரிமையாளரும் அக்காரை விற்பனைச் செய்ய முடிவு செய்திருக்கின்றார்.

விற்பனைக்கு வந்த விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த சூப்பர்... எவ்ளோ விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

இதன்படி, மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவை மையமாகக் கொண்டு இயங்கும் செர்டியூட் கார்ஸ் எனும் நிறுவனத்தின் மூலம் அக்கார் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் விலைப் பற்றிய தகவலை வெளியிட அந்நிறுவனம் மறுத்திவிட்டது. அதேசமயம், இக்கார் இந்தியாவில் விற்பனைக்கு கிடைத்தபோது 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வந்தது.

விற்பனைக்கு வந்த விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த சூப்பர்... எவ்ளோ விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு பதிலாக உருஸ் எனும் அதி திறன் வாய்ந்த காரை இத்தாலி நாட்டு நிறுவனமான லம்போர்கினி தற்போது விற்பனைச் செய்து வருகின்றது. அதேசமயம், இந்நிறுவனம் இந்தியாவில் களமிறக்கிய சூப்பர் ஃபாஸ்ட் கார்களில் கல்லர்டோவும் ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

விற்பனைக்கு வந்த விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த சூப்பர்... எவ்ளோ விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

எனவேதான் விராட் இக்காரை வாங்கி ஓரிரு வருடங்கள் வரை பயன்படுத்தி வந்ததார். சில நாட்களுக்கு இக்காரே அவரின் விருப்பமான காராக இருந்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பல நேரங்களில் லம்போர்கினி கல்லர்டோ காரிலேயே அவர் அதிகம் வலம் வந்திருக்கின்றார். அவ்வாறு, ஆஸ்திரேலியா நாட்டு வீரரும், ஆர்சிபி அணியைச் சேர்ந்தவருமான சீன் அப்பாட் உடன் விராட் வலம் வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போதும் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

விற்பனைக்கு வந்த விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த சூப்பர்... எவ்ளோ விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

இரண்டாவது முறையாவாக விற்பனைக்கு வந்திருக்கும் லம்போர்கினி கல்லர்டோ நல்ல தரத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. இது நமது தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி பதிவெண்ணில் காணப்படுகின்றது. இதன் ஓடோ மீட்டர் பற்றிய தகவலும் வெளியிடப்படவில்லை. இக்கார் 2013ம் மாடலாக இருந்தாலும் பார்ப்பதற்கு தற்போதும் புது பொலிவுடன் காட்சியளிக்கின்றது.

விற்பனைக்கு வந்த விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த சூப்பர்... எவ்ளோ விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

லம்போர்கினி கல்லர்டோ கார் சர்வதேச சந்தையில் எல்பி560-4 எனும் பெயரில் உச்சரிக்கப்பட்டு வருகின்றது. இதில், 5.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் வி10 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 560 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். அதாவது, 0த்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 4 விநாடிகளியே எட்டுமளவிற்கு திறன் கொண்ட எஞ்ஜின் இதுவாகும்.

விற்பனைக்கு வந்த விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த சூப்பர்... எவ்ளோ விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

விராட் கோஹ்லியிடும் இதுபோன்று பல்வேறு அதிதிறன் வாய்ந்த கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக, ஆடி நிறுவனத்தின் சூப்பர் கார்கள் பல உள்ளன. இதுமட்டுமின்றி பென்ட்லீ, லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் உள்ளிட்ட பல்வேறு கார்கள் இருக்கின்றன. தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் லம்போர்கினி கல்லர்டோ கார் பற்றி முழுமையாக அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

விற்பனைக்கு வந்த விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த சூப்பர்... எவ்ளோ விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

விராட் கோஹ்லியின் இந்த கார் விற்பனைப் பற்றிய தகவல் வெளியாகிய உடன், அவரின் ரசிகர்கள் பெரும்பாலானோர், விராட்டிற்கு என்ன அவ்வளவு கஷடம் வந்துவிட்டது. அவரது விலையுயர்ந்த காரை விற்பனைச் செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளார் என எண்ணி வருகின்றனர். ஆனால், விராட்டைப் பொருத்த வரை இது ஓர் வழக்கமான நிகழ்வாகும். ஆம், அவர் தன்னிடத்தில் இருக்கும் காரின் அப்டேடட் வெர்ஷன் விற்பனைக்கு வருமானால் உடனே மாறும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றார். எனவேதான் இக்காரை கடந்த வருடங்களில் விற்பனைச் செய்திருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Virat Kohli’s Lamborghini Gallardo Spyder Supercar For Sale. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X