அதி நவீன இணைப்பு வசதியை இலவசமாக வழங்கும் பிரபல கார் நிறுவனம்... நிஜமாவா சொல்றீங்க? இதனால் என்ன பயன்?

பிரபல கார் நிறுவனம் இணைப்பு வசதியைக் குறிப்பிட்ட கார்களுக்ககு இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அதி நவீன இணைப்பு வசதியை இலவசமாக வழங்கும் பிரபல கார் நிறுவனம்... நிஜமாவா சொல்றீங்க? இதனால் என்ன பயன்?

உலக புகழ்வாய்ந்த கார் நிறுவனங்களில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனமே, தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சேவை வழங்கும் விதமாக புதிய அதி நவீன இணைப்பு வசதியை இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது, சிம் கார்டை சார்ந்து இயங்கும் அம்சமாகும்.

அதி நவீன இணைப்பு வசதியை இலவசமாக வழங்கும் பிரபல கார் நிறுவனம்... நிஜமாவா சொல்றீங்க? இதனால் என்ன பயன்?

இந்த அம்சத்தின் மூலம், காரை பாதுகாப்பது மற்றும் வாகனம் பற்றி பல்வேறு முக்கியமான தகவல்களை செல்போன் வாயிலாகவே அதன் உரிமையாளரால் பெற முடியும். இது பாதுகாப்பான மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதியாகும். இந்த வசதியையே குறிப்பிட்ட சில கார்களுக்கு மட்டும் ஃபோக்ஸ்வேகன் இலவசமாக வழங்க இருக்கின்றது.

அதி நவீன இணைப்பு வசதியை இலவசமாக வழங்கும் பிரபல கார் நிறுவனம்... நிஜமாவா சொல்றீங்க? இதனால் என்ன பயன்?

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ மற்றும் வென்டோ ஹைலைன் பிளஸ் ஆகிய உயர் ரக மாடல்களுக்கு மட்டுமே இலவச இணைப்பு வசதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசதியை 3 வருடங்களுக்கு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என கூறியுள்ளது.

அதி நவீன இணைப்பு வசதியை இலவசமாக வழங்கும் பிரபல கார் நிறுவனம்... நிஜமாவா சொல்றீங்க? இதனால் என்ன பயன்?

அதவாது, புதிய போலோ ஜிடி டிஎஸ்ஐ மற்றும் வென்டோ ஹைலைன் பிளஸ் ஆகிய கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 3 வருடங்களுக்கு இலவச இணைப்பு வசதி சந்தா வழங்கப்பட உள்ளது. இத்துடன், 3 வருடங்கள் வாரண்டியும் இலவசமாக வழங்கப்பட இருக்கின்றது.

அதி நவீன இணைப்பு வசதியை இலவசமாக வழங்கும் பிரபல கார் நிறுவனம்... நிஜமாவா சொல்றீங்க? இதனால் என்ன பயன்?

போக்ஸ்வேகனின் 'மை ஃபோக்ஸ்வேகன்' இணைப்பு வசதி மூலம் அவசர அழைப்பு, வாகனத்தை டோவ் செய்யப்படும் அலர்ட், ஜியோ-ஃபென்சிங், ரியல் டைம் இருப்பிட தகவல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உடனடியாகப் பெற முடியும் இத்துடன் மேலும் பல வசதிகளை போலோ ஜிடி டிஎஸ்ஐ மற்றும் வென்டோ ஹைலைன் பிளஸ் ஆகிய கார்களின் உரிமையாளரால் பெற முடியும்.

அதி நவீன இணைப்பு வசதியை இலவசமாக வழங்கும் பிரபல கார் நிறுவனம்... நிஜமாவா சொல்றீங்க? இதனால் என்ன பயன்?

எப்படி இந்த வசதி இயங்குகின்றது?

செல்போனுக்கான சிம் கார்டைப் போல ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கான பிரத்யேக சிம் கார்டு வழங்கப்படும். இதனைக் கொண்டே காரையும், செல்போனையும் இணையம் வாயிலாக இணைக்கப்படுகின்றது. இதனை சிறப்பு டாங்கிள் (dongle) பயன்படுத்தப்படுகின்றது. இது இணைக்கப்பட்ட காரை 'மை ஃபோக்ஸ்வேகன்' எனும் ஆப்பைக் கொண்டு கன்ட்ரோல் செய்ய முடியும்.

அதி நவீன இணைப்பு வசதியை இலவசமாக வழங்கும் பிரபல கார் நிறுவனம்... நிஜமாவா சொல்றீங்க? இதனால் என்ன பயன்?

இந்த செல்போன் செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து தரவிறக்கும் செய்து கொள்ளலாம். அவ்வாறு, செயலி தரவிறக்கம் செய்யப்பட்ட பின்னர் ஒரு சில செயல்களை மேற்கொள்வதன் மூலம் கார் மற்றும் செல்போனை இணைக்க முடியும். இதன் பின்னரே மேற்கூறிய கார்குறித்த சிறப்பு தகவல்களை நம்மால் செல்போன் வாயிலாக பெற முடியும்.

அதி நவீன இணைப்பு வசதியை இலவசமாக வழங்கும் பிரபல கார் நிறுவனம்... நிஜமாவா சொல்றீங்க? இதனால் என்ன பயன்?

அதுதவிர, காரின் வேகம், பிரேக்கின் செயல்பாடு, கூலண்ட் வெப்பநிலை, ஆக்சலரேஷன் மற்றும் ஆர்பிஎம் ஆகியவற்றையும் நம்மால் கண்கானிக்க முடியும். இத்துடன், அவசர உதவிகளையும் பெற முடியும். இத்தகைய சிறப்பு வசதிகளையே ஃபோக்ஸ்வேகன் 3 ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்க இருக்கின்றது. இந்த இலவச காலத்திற்கு பின்னர் இச்சேவைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

அதி நவீன இணைப்பு வசதியை இலவசமாக வழங்கும் பிரபல கார் நிறுவனம்... நிஜமாவா சொல்றீங்க? இதனால் என்ன பயன்?

தற்போது இந்தியாவில் விழாக்காலம் பூண்டிருப்பதால் சிறப்பு இரு நிற திட்டங்களை ஃபோக்ஸ்வேகன் அறிவித்து வருகின்றது. அந்தவகையில், இலவச இணைப்பு வசதியை அது அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக போலோ மற்றும் வெண்டோ கார்களில் ட்யூவல் டோன் நிற தேர்வை அது அறிமுகப்படுத்தியது.

அதி நவீன இணைப்பு வசதியை இலவசமாக வழங்கும் பிரபல கார் நிறுவனம்... நிஜமாவா சொல்றீங்க? இதனால் என்ன பயன்?

இந்த இரு நிற தேர்வைக் கூடுதல் விலை ஏற்றமின்றி ஃபோக்ஸ்வேகன் விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், ரூ. 9.19 லட்சம் என்ற ஆரம்ப விலையிலேயே போலோ கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. போலோ சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் காரின் விலை இதுவாகும். இதேபோன்று, வென்டோ போலோ காரின் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தேர்விற்கு ரூ. 11.49 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles

English summary
Volkswagen Annonced Connect Tech Free For Polo, Vento Top Variants. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X