பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் அறிமுகமானது 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்...

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இன்று (ஜூன் 24) 2021 அர்டியோன் மற்றும் முற்றிலும் புதிய அர்டியோன் ஷூட்டிங் ப்ரேக் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரு புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் அறிமுகமானது 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்...

முந்தைய வெர்சன் உடன் ஒப்பிடும்போது சில காஸ்மெட்டிக் மாற்றங்களை ஏற்றுள்ளதால் 2021 அர்டியோன் மாடல் மிகவும் ஸ்டைலிஷ் ஆகவும் டைனாமிக் ஆகவும் காட்சியளிக்கிறது.

பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் அறிமுகமானது 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்...

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த 2021 மாடலுடன் புதிய ஷூட்டிங் ப்ரேக் மாடலிலும் வெளிப்படையான மற்றும் புதுமையான டிசைன் அமைப்பை கொண்டு வந்துள்ளது. இதில் புதியதாக தொடர்ச்சியான லைட் ஸ்ட்ரிப் உடன் காரின் முன்புற பகுதியும் அடங்கும்.

பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் அறிமுகமானது 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்...

இது மட்டுமின்றி முன்புறத்தில் ஸ்ட்ரைக்கிங் க்ரோம் பார்கள் மற்றும் கீழ்புறத்தில் புதிய ஏர் இண்டேக்குகள் போன்ற தனித்துவமான டிசைன் அமைப்புகளிலும் இந்த 2021 மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் அறிமுகமானது 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்...

ரேடியேட்டர் க்ரில், நீளமான மற்றும் அகலமான பொனெட் உள்ளிட்டவை எத்தனை கார்களுக்கு இடையில் இருந்தாலும் இந்த இரு அர்டியோன் வெர்சன்களை தனியாக காட்டும். இவற்றுடன் முன் மற்றும் பின்புறத்தில் எல்இடி தரத்திலான விளக்குகளையும் இவை கொண்டுள்ளன.

பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் அறிமுகமானது 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்...

இவற்றில் 2021 அர்டியோன் மாடலானது கூபே வடிவிலான பின் பகுதியையும், அர்டியோன் ஷூட்டிங் ப்ரேக் மாடலானது ஹேட்ச்பேக் வெர்சனிலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் மாடல் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.

பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் அறிமுகமானது 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்...

இந்நிறுவனம் அர்டியோன் மாடலை 2017ல் சிசி மாடலுக்கு மாற்றாக சர்வதேச சந்தைக்கு கொண்டு வந்து இருந்தது. ஆனால் அந்த மாடலை போலவே அர்டியோனுக்கும் வாடிக்கையாளர்களிடையே பெரிய வரவேற்பு எழாதது நிச்சயம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். இதுவே தற்போது இதனை ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் விற்பனைக்கு கொண்டுவர ஒரே காரணமாகும்.

பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் அறிமுகமானது 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்...

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த இரு புதிய மாடல்களுடன் அர்டியோன் இஹைப்ரீட் என்ஜினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் 2021 அர்டியோன் மற்றும் அர்டியோன் ஷூட்டிங் ப்ரேக் கார்களை வாடிக்கையாளர்கள் ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டிலும் வாங்க முடியும்.

Most Read Articles
English summary
Volkswagen Arteon midlife facelift revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X