எமனாகவே இருந்தாலும் இந்த காரில் இருக்கும்போது உங்களை தொடகூட முடியாது! ஏன்னா இது அவ்ளோ பாதுகாப்பானது!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதல் மின்சார காரான ஐடி.3 பாதுகாப்பு ரேட்டிங்கில் அசாத்தியமான மதிப்பெண்ணைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

எமனாகவே இருந்தாலும் உங்களிடம் கேட்டுதான் உள்ளே வர முடியும்... இது மிக மிக பாதுகாப்பான மின்சார கார்...

உலக புகழ்வாய்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்களில் போக்ஸ்வேகன் நிறுவனமும் ஒன்று. ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், கடந்த 2019ம் ஆண்டு, அதன் முதல் மின்சார காரை இவ்வுலகில் அறிமுகம் செய்தது. 'ஐடி.3' (ID.3) எனும் பெயரில் அக்கார் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஓர் ஹேட்ச்பேக் ரக மின்சார காராகும்.

எமனாகவே இருந்தாலும் உங்களிடம் கேட்டுதான் உள்ளே வர முடியும்... இது மிக மிக பாதுகாப்பான மின்சார கார்...

கச்சிதமான உருவ அமைப்பைக் கொண்டிருக்கும் இக்காருக்கு உலக நாடுகளில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்நிலையில், இந்த வரவேற்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஐடி.3 மின்சார காரின் பாதுகாப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இக்கார், பாதுகாப்பு தரத்தில் ஐந்திற்கு 5 நட்சத்திரங்களைப் பெற்று அசத்தியிருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

எமனாகவே இருந்தாலும் உங்களிடம் கேட்டுதான் உள்ளே வர முடியும்... இது மிக மிக பாதுகாப்பான மின்சார கார்...

யூரோ என்சிஏபி நிகழ்த்திய மோதல் பரிசோதனையிலேயே இந்த அசாத்திய ரேட்டிங்கை ஃபேக்ஸ்வேகன் ஐடி.3 மின்சார கார் பெற்றிருக்கின்றது. எனவேதான், எமனாக இருந்தாலும் இக்காரில் பயணிக்கும்போது ஒற்றைப் பயணியைக்கூட நெருங்க முடியாது என கூறுகின்றோம்.

எமனாகவே இருந்தாலும் உங்களிடம் கேட்டுதான் உள்ளே வர முடியும்... இது மிக மிக பாதுகாப்பான மின்சார கார்...

ஃபோக்ஸ்வேகன் ஐடி.3 மின்சார கார் பெரியவர்களின் பாதுகாப்பு தரத்தில் 87 புள்ளிகளையும், குழந்தைகளின் பாதுகாப்பில் 89 புள்ளிகளையும் பெற்று அசத்தியுள்ளது. இதேபோன்று, பாதுகாப்பு வசதிக்காக வழங்கப்பட்டிருக்கும் கருவிகளின் தர மதிப்பீட்டில் இக்கார் 88 சதவீத புள்ளிகளைப் பெற்று, மோதல் பரிசோதனையை நடத்திய குழுவினரையேத் திகைக்கச் செய்துள்ளது.

எமனாகவே இருந்தாலும் உங்களிடம் கேட்டுதான் உள்ளே வர முடியும்... இது மிக மிக பாதுகாப்பான மின்சார கார்...

மேலும், அவசரகால தானியங்கி வசதகிகளுக்கான தர மதிப்பீட்டில் 71 சதவீதம் என்ற புள்ளிகளைப் பெற்று மேலும் அவர்களை அசர வைத்துள்ளது. இது காருக்குள் பயணிப்பவர்களை மட்டுமின்றி வெளிப்புற நபர்களையும் பாதுகாப்பதிலும் நற்மதிப்பெண்களைப் பெற்றிருக்கின்றது. இதற்கான வெளிப்பாடகவே இந்த 71 சதவீத மதிப்பீடு உள்ளது.

எமனாகவே இருந்தாலும் உங்களிடம் கேட்டுதான் உள்ளே வர முடியும்... இது மிக மிக பாதுகாப்பான மின்சார கார்...

இவ்வாறு அசாத்திய தர மதீப்பீட்டையே ஃபோக்ஸ்வேகனின் முதல் மின்சார கார் ஐடி.3 தற்போது பெற்றிருக்கின்றது. இதனால், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும், மின்சாரக் காரை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களும் பெரும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் உறைந்திருக்கின்றனர். மேலும், இக்காரால் ஃபோக்ஸ்வேகன் புதிய மகுடத்தைச் சூடியிருக்கின்றது என்றே கூறலாம்.

எமனாகவே இருந்தாலும் உங்களிடம் கேட்டுதான் உள்ளே வர முடியும்... இது மிக மிக பாதுகாப்பான மின்சார கார்...

குறிப்பாக, சிறிய கார் என்றாலும் பாதுகாப்பிற்கு சற்றும் சளைத்ததல்ல என்பதனை ஃபோக்ஸ்வேகன் ஐடி.3 நிரூபித்துள்ளது. அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் இதில் மிக சிறப்பாக செயல்பட்டிருப்பதாக மோதல் பரிசோதனைக் குழு தெரிவித்துள்ளது. இதற்கேற்ப, பாதுகாப்பு அம்சங்களான ஏர் பேக்குகள் மற்றும் பிற பாதுகாப்பு கருவிகள் மிகச் சிறப்பான பயன்பாட்டை வழங்கியிருக்கின்றன.

எமனாகவே இருந்தாலும் உங்களிடம் கேட்டுதான் உள்ளே வர முடியும்... இது மிக மிக பாதுகாப்பான மின்சார கார்...

குறிப்பாக, முன்பக்கத்தின் மையப்பகுதியில் இடம் பெற்றிருக்கும் ஏர் பேக்குகள் முன்னிருக்கை பயணிகளின் தலைக்கு மிகவும் அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் உள்ளது. இக்கார்குறித்து யூரோ என்சிஏபி வெளியிட்டுள்ள தகவலின்படி, 'ஃபோக்ஸ்வேகன் ஐடி.3 நல்ல திடமான கட்டமைப்பைப் பெற்றிருப்பது' தெரியவந்துள்ளது.

எமனாகவே இருந்தாலும் உங்களிடம் கேட்டுதான் உள்ளே வர முடியும்... இது மிக மிக பாதுகாப்பான மின்சார கார்...

மேலும், ஃபோக்ஸ்வேகன் ஐடி.3 கார், பயணிகளுக்கு மட்டுமின்றி பாதசாரிகளின் பாதுகாப்பிலும் மிகச் சிறந்த வாகனம் என்பதும் யூரோ என்சிஏபி ஆய்வில் தெரிய வந்திருக்கின்றது. அதாவது, காரில் வழங்கப்பட்டிருக்கும் தானியங்கி வசதிகள் கார் விபத்தைச் சந்திப்பதற்கு முன்னதாகவே, தேவையான அனைத்து நடவடிக்கையிலும் களமிறங்குவதால் பயணி மற்றும் பாதசாரிகளுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பான சூழலை வழங்குகின்றது.

எமனாகவே இருந்தாலும் உங்களிடம் கேட்டுதான் உள்ளே வர முடியும்... இது மிக மிக பாதுகாப்பான மின்சார கார்...

இந்த வசதிக்காக, ஃபோக்ஸ்வேகன் மிக அதி திறன் கொண்ட உயர் தர சென்சார்களைப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறுகின்றது. இதுவே, மிக சிறப்பான கட்டுப்பாட்டை ஃபோக்ஸ்வேகன் ஐடி.3 மின்சார காருக்கு வழங்குகின்றது. இந்த கட்டுப்பாட்டுக் கருவிகளைத் தாண்டியும் விபத்து ஏற்படுமேயானால், அப்போதும் போதிய பாதுகாப்பை வழங்கக்கூடிய வசதிகள் காருக்கு வழங்கப்பட்டுள்ளன.

எமனாகவே இருந்தாலும் உங்களிடம் கேட்டுதான் உள்ளே வர முடியும்... இது மிக மிக பாதுகாப்பான மின்சார கார்...

அதில், முதன்மையான அம்சம் ஏர் பேக்குகள். இத்துடன் ஏஇபி மற்றும் பன்-மோதல் பிரேக்கிங் வசதி உள்ளிட்டவையும் இதில் அடங்கும். இந்த பிரேக்கிங் தொழில்நுட்பங்களே விபத்திற்கு பின் உதவும் திறனைக் கொண்டிருக்கின்றன. மோதலால் எத்தனை முறை பல்டியடித்தாலும் இந்த தொழில்நுட்பம் இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எமனாகவே இருந்தாலும் உங்களிடம் கேட்டுதான் உள்ளே வர முடியும்... இது மிக மிக பாதுகாப்பான மின்சார கார்...

இதுபோன்று பல்வேறு சிறப்பு வசதிகள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. தலையின் பாதுகாப்பிற்கு சிறப்பு ஏற் பேக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர், ஐசோஃபிக்ஸ் இருக்கைகள், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், டிராஃபிக் ஜாம் அசிஸ்ட், டிராவல் அசிஸ்ட், பார்க் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் சென்சார் மற்றும் டிராஃபிக் அலர்ட் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் அதில் அடங்கும்.

எமனாகவே இருந்தாலும் உங்களிடம் கேட்டுதான் உள்ளே வர முடியும்... இது மிக மிக பாதுகாப்பான மின்சார கார்...

ஐடி.3 மின்சார காரின் முதல் எடிசன் மாடல்கள் மிக சமீபத்திலேயே இங்கிலாந்து நாட்டு சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஃபோக்ஸ்வேகன் ஈடுபட்டு வருகின்றது. இக்கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கான எந்தவொரு அறிகுறியும் தற்போது வரை தென்படவில்லை.

எமனாகவே இருந்தாலும் உங்களிடம் கேட்டுதான் உள்ளே வர முடியும்... இது மிக மிக பாதுகாப்பான மின்சார கார்...

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான எதிர்காலம் நல்ல முறையில் காணப்படுவதால், அடுத்து வருடங்களில் இக்காரின் அறிமுகம் பற்றிய தகவலை எதிர்பார்க்கலாம். ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

Most Read Articles

English summary
Volkswagen First EV ID.3 Scores 5 Star Rating In Euro NCAP. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X