ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி கார்களின் புதிய எஞ்சின் தேர்வுகள் விபரம்!

கடுமையான மாசு உமிழ்வு விதிகள் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஃபோக்ஸ்வேகன் குழுமம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. தனது கீழ் செயல்படும் ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி, போர்ஷே கார்களில் ஆற்றல் வாய்ந்த பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளை வழங்க உள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி கார்களின் புதிய எஞ்சின் தேர்வுகள் விபரம்!

கடந்த ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, அனைத்து கார் நிறுவனங்களும் எஞ்சின் தேர்வுகளில் பல மாற்றங்களை செய்துள்ளன. இந்த கடுமையான மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பான மாற்றங்கள் அல்லது புதிய எஞ்சின் தேர்வுகளை தங்களது கார் மாடல்களில் அறிமுகம் செய்து வருகின்றன.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி கார்களின் புதிய எஞ்சின் தேர்வுகள் விபரம்!

அந்த வகையில், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் இந்தியாவில் செயல்படும் ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி உள்ளிட்ட நிறுவனங்களின் கார்களில் டீசல் எஞ்சின் தேர்வுகள் முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும், புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி கார்களின் புதிய எஞ்சின் தேர்வுகள் விபரம்!

அந்த வகையில், ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி உள்ளிட்ட நிறுவனங்களின் கார்களில் இடம்பெற இருக்கும் புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் குறித்த விபரங்கள் டீம் பிஎச்பி தளத்தில் வெளியாகி இருக்கின்றன.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி கார்களின் புதிய எஞ்சின் தேர்வுகள் விபரம்!

அதன்படி, ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் ஆகிய கார்களின் ஆரம்ப ரக மாடல்களில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 114 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி கார்களின் புதிய எஞ்சின் தேர்வுகள் விபரம்!

அடுத்து, மிட்சைஸ் செடான் மற்றும் எஸ்யூவி கார்களில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 147 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி கார்களின் புதிய எஞ்சின் தேர்வுகள் விபரம்!

அடுத்து ஸ்கோடா கோடியாக், ஆக்டேவியா உள்ளிட்ட உயர்வகை மாடல்களில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 188 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இதனுடன், 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி கார்களின் புதிய எஞ்சின் தேர்வுகள் விபரம்!

சொகுசு கார் மார்க்கெட்டில் முன்னணியில் உள்ள ஆடி கார் நிறுவனத்தின் மாடல்களில் ஆரம்ப, நடுத்தர வகை மாடல்களில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படும். இதுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் 249 பிஎச்பி பவரை வெளிபப்டுத்தும்.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி கார்களின் புதிய எஞ்சின் தேர்வுகள் விபரம்!

போர்ஷே கேயென், கேயென் கூபே உள்ளிட்ட உயர்வகை சொகுசு கார்களில் 340 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் இணைக்கப்பட்டு இருக்கும்.

Most Read Articles

English summary
According to report, Volkswagen Group will offer only petrol engines in India and here is the full details in Tamil.
Story first published: Monday, August 17, 2020, 10:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X