ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் கூபே எஸ்யூவி காரின் கடைசி டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

சர்வதேச அறிமுகத்திற்கு முன்னதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் நிவுஸ் கூபே எஸ்யூவி மாடலின் கடைசி டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் கூபே எஸ்யூவி காரின் கடைசி டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

எம்க்யூபி ஏ0 ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வருகின்ற புதிய ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் கூபே எஸ்யூவி மாடல் ஐரோப்பா மற்றும் பிரேசில் உள்பட சர்வதேச சந்தையில் அடுத்த மாத இறுதியில் டிஜிட்டல் முறையில் அறிமுகமாகவுள்ளது.

MOST READ: பருவமழை ஆரம்பமாக போது... மழைநீரால் ஏற்படும் வாகன பழுதுகளை தடுப்பது எப்படி...?

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் கூபே எஸ்யூவி காரின் கடைசி டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

இந்த நிலையில் தான் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த கூபே மாடலின் கடைசி டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் டி-க்ராஸ் மாடலுக்கு பிறகு இந்நிறுவனத்தின் இரண்டாவது காம்பெக்ட் எஸ்யூவி காராக வெளிவரும் புதிய நிவுஸ் மாடல் முழுக்க முழுக்க இளம் தலைமுறையினரையும், நகர்புற வாடிக்கையாளர்களையும் குறிவைத்து வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் கூபே எஸ்யூவி காரின் கடைசி டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

தற்போது வெளியாகியுள்ள இந்த கூபே மாடலின் கடைசி டீசர் படம், இதன் முந்தைய டீசர்களில் மறைக்கப்பட்டு இருந்த ஃபாக் விளக்குகள் மற்றும் பம்பரின் டிசைனை வெளிப்படுத்துகிறது. பிரேசிலில் தயாரிக்கப்பட்டு வருகின்ற இந்த எஸ்யூவி கார், ஏற்கனவே கூறியதுபோல் ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி ஏ0 ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் கூபே எஸ்யூவி காரின் கடைசி டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

ஃபோக்ஸ்வேகன் டி-கிராஸ், புதிய போலோ மற்றும் விர்டுஸ் செடான் கார்களுக்கும் இந்த புதிய ப்ளாட்ஃபாரம் அடிப்படையாக உள்ளதால் நிவுஸ் கூபே மாடல், புதிய தலைமுறை போலோ மாடலுடன் 2.56 மீட்டர் வீல்பேஸ் அளவை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த காரின் மொத்த 4.26 மீ நீளத்தில், பின்பக்கம் மட்டுமே 856மிமீ-ல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் கூபே எஸ்யூவி காரின் கடைசி டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

நிவுஸ் கூபே மாடலின் நீளம், பிரேசிலில் விற்பனை செய்யப்பட்டுவரும் டி-கிராஸ் மாடலை விட 60மிமீ அதிகமாகும். ஃபோக்ஸ்வேகனின் இந்த புதிய கூபே கார் 1,493மிமீ அகலத்தில் தோற்றத்தை கொண்டுள்ளது. 415 லிட்டர் கொள்ளளவில் இந்த கார் பூட் ஸ்பேஸ்-ஐ பெற்றுள்ளது. அதுவே டி-கிராஸ் மாடலின் பூட் 373 லிட்டர் மட்டுமே கொள்ளளவு கொண்டதாகும்.

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் கூபே எஸ்யூவி காரின் கடைசி டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

தற்போது கடைசி டீசர் படத்தை பெற்றுள்ள இந்த எஸ்யூவி மாடலில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 128 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் கூபே எஸ்யூவி காரின் கடைசி டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

இந்த ஆற்றலை இந்த என்ஜின் காரின் முன் சக்கரங்களுக்கு வழங்குவதற்கு 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 4-வீல் டிஸ்க் ப்ரேக் அமைப்புகளை பெற்றுள்ள இந்த கூபே மாடல் சஸ்பென்ஷன், ஸ்டேரிங் மற்றும் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோலிற்காக டைனாமிக் அட்ஜெஸ்ட்மெண்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் கூபே எஸ்யூவி காரின் கடைசி டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..?

உட்புறத்தில் 8.0 இன்ச்சில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் இந்த கார், ஃபோக்ஸ்வேகனின் புதிய மல்டிமீடியா மைய ஃபோக்ஸ்வேகன் ப்ளே என்ற தளத்தின் மூலமாக அறிமுகமாகவுள்ளது. இந்த இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மட்டுமின்றி அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், 10-இன்ச் ஆக்டிவ் இன்ஃபோ டிஜிட்டல் திரை பேனல், வளைவான ரூஃப்-ல் ரெயில்கள், எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்களையும் பெற்றுள்ளது.

Most Read Articles
English summary
Volkswagen Nivus Coupe SUV Final Teaser Out Before Unveil
Story first published: Friday, May 29, 2020, 0:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X