கோவை உள்ளிட்ட நகரங்களில் யூஸ்டு கார் விற்பனையை துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!

கோவை உள்ளிட்ட 5 நகரங்களில் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையை துவங்கி இருக்கிறது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம். கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் யூஸ்டு கார் விற்பனையை துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!

இந்தியாவில் புதிய கார்களுக்கு இணையாக பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனையும் சரிக்கு சமமான வர்த்தகத்தை பதிவு செய்து வருகிறது. எனவே, பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் உள்ள வர்த்தகத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு முன்னணி கார் நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

இந்தியாவில் யூஸ்டு கார் விற்பனையை துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!

அந்த வகையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையில் இறங்கி உள்ளது. அதுவும் அனைத்து கார் நிறுவனங்களின் பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் பிரிவை துவங்கி இருக்கிறது.

இந்தியாவில் யூஸ்டு கார் விற்பனையை துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மல்டி பிராண்டு யூஸ்டு கார் விற்பனைப் பிரிவின் ஷோரூம்கள் Das Welt Auto Excellence Centres என்ற பெயரில் செயல்படும். முதல்கட்டமாக கோவை, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி மற்றும் திருச்சூர் ஆகிய 5 நகரங்களில் இந்த பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் யூஸ்டு கார் விற்பனையை துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!

எந்தவொரு நிறுவனத்தின் காரையும் வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்குமான தளமாக தஸ் வெல்ட் ஆட்டோ நிறுவனம் செயல்படும். மேலும், முறையாக பரிசோதிக்கப்பட்டு, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்தியாவில் யூஸ்டு கார் விற்பனையை துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!

மேலும், தஸ் வெல்ட் ஆட்டோ மூலமாக விற்பனை செய்யப்படும் கார்களுக்கு பரிசோதனை சான்றும் வழங்கப்படுவதுடன், அதிக வெளிப்படைத் தன்மையுடன் இந்த பிரிவு செயல்பட உள்ளது.

இந்தியாவில் யூஸ்டு கார் விற்பனையை துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!

ஃபோக்ஸ்வேகன் தஸ் வெல்ட் ஆட்டோ மூலமாக பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் சிறப்பு கடன் திட்டங்களை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அதேபோன்று, கூடுதல் ஆக்சஸெரீகள், கார் மதிப்பீடு செய்து தரும் பணிகளும் இங்கு மேற்கொள்ளப்படும்.

இந்தியாவில் யூஸ்டு கார் விற்பனையை துவங்கியது ஃபோக்ஸ்வேகன்!

பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு மிக சவாலான அளவில் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய இருப்பதாகவும் ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் காப்பீடு, கூடுதல் வாரண்டி உள்ளிட்டவையும் செய்து தரப்படும் என்று ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

Most Read Articles

English summary
Volkswagen Passenger Cars have launched pre-owned car sales business in India.
Story first published: Saturday, September 26, 2020, 13:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X