அசத்தும் அம்சங்ளுடன் விரைவில் அறிமுகமாகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார்!

அதிக சிறப்பம்சங்கள் மற்றும் புதிய எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

அசத்தும் அம்சங்ளுடன் விரைவில் அறிமுகமாகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மிக உயரிய வகை சொகுசு செடான் கார் மாடல் பஸாத். மிக நேர்த்தியான டிசைன், அதிக இடவசதி, சொசுகு அம்சங்களுடன் தனி வாடிக்கையாளர் வட்டத்தை இந்த கார் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், பஸாத் கார் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அசத்தும் அம்சங்ளுடன் விரைவில் அறிமுகமாகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார்!

புதிய எஞ்சின் தேர்வு அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த புதிய பஸாத் கார் அடையாளங்கள் மறைக்கப்பட்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

அசத்தும் அம்சங்ளுடன் விரைவில் அறிமுகமாகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார்!

இந்த நிலையில், இந்த புதிய மாடல் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளத்தின் செய்தி தெரிவிக்கிறது. அதாவது, பண்டிகை காலத்தையொட்டி, இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசத்தும் அம்சங்ளுடன் விரைவில் அறிமுகமாகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார்!

புதுப்பொலிவுடன் வரும் இந்த புதிய பஸாத் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஃபோக்ஸ்வேகன் ஆல்ஸ்பேஸ் மற்றும் ஸ்கோடா சூப்பர்ப் கார்களில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின்தான் இந்த காரிலும் கொடுக்கப்பட இருக்கிறது.

அசத்தும் அம்சங்ளுடன் விரைவில் அறிமுகமாகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார்!

இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் 190 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். பழைய பிஎஸ்-4 மாடலில் வழங்கப்பட்ட 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சினைவிட இந்த எஞ்சின் கூடுதலாக 16 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.அதே நேரம் இது பெட்ரோல் எஞ்சின் டார்க் திறன் பழைய டீசல் மாடலைவிட 30 என்எம் வரை குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

அசத்தும் அம்சங்ளுடன் விரைவில் அறிமுகமாகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார்!

புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரை போட்டியாளர்களிடம் இருந்து அதிக மதிப்பை பெறும் வகையில் பல்வேறு சிறப்புகளை பெற்றிருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்புடன் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. புதிய 17 அங்குல அலாய் வீல்கள் மற்றும் மறுவடிவமைப்பு பெற்ற புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் காரின் புறத்தோற்றத்தை வசீகரமாக காட்டுகிறது.

அசத்தும் அம்சங்ளுடன் விரைவில் அறிமுகமாகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார்!

புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரின் உட்புறத்தில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கும். தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இ-சிம் கார்டுடன் நேரடி இணைய வசதியை அளிக்கும் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

அசத்தும் அம்சங்ளுடன் விரைவில் அறிமுகமாகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார்!

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, பனோரமிக் சன்ரூஃப், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் இருக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல் என ஏராளமான சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களை இந்த கார் பெற்றிருக்கும்.

அசத்தும் அம்சங்ளுடன் விரைவில் அறிமுகமாகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார்!

இந்த காரில் முன்புற மோதல் குறித்த எச்சரிக்கை தொழில்நுட்பம், ஆட்டோனாமஸ் எமெர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், பாதசாரிகள் சாலையின் குறுக்கே வருவது குறித்த எச்சரிக்கை வசதி, தடம் மாறும்போது எச்சரிக்கும் தொழில்நுட்பங்களுடன் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட மாடலாகவும் வர இருக்கிறது.

அசத்தும் அம்சங்ளுடன் விரைவில் அறிமுகமாகிறது புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார்!

புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் ரூ.30 லட்சத்தையொட்டிய விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் டொயோட்டா கேம்ரி உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Volkswagen is gearing up to launch the refreshed Passat luxury sedan in the Indian market. The upcoming German sedan will feature a host of new design changes inside and out along with a new powertrain as well.
Story first published: Wednesday, July 22, 2020, 11:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X