ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..?

புதிய மாசு உமிழ்வு இந்தியாவில் கடந்த 1ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதனால் தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகின்ற ஒவ்வொரு நிறுவனமும் தங்களது கார்களை பிஎஸ்6-க்கு அப்டேட் செய்து வருகின்றன.

ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..?

பிஎஸ்6 வாகனங்களின் அறிமுகங்கள் ஒரு புறம் இருக்க புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக அப்டேட் செய்யப்படாத வாகனங்கள் இந்தியாவில் இருந்து விடை பெற்று வருகின்றன. இந்த வகையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அமியோ மற்றும் டிகுவான் மாடல்களை இந்தியாவில் சந்தைப்படுத்தி வருவதை நிறுத்தியுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..?

இதனால் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து இந்த இரு ஃபோக்ஸ்வேகன் கார்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. இதில் அமியோ மாடலை முதன்முதலாக கடந்த 2016ல் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..?

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த காரில் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்கனெக்ட், ஆட்டோ ஏசி சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ரெயின்-சென்ஸிங் வைபர்கள் மற்றும் ஸ்டாடிக் கார்னரிங் லைட்ஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..?

இவற்றுடன் இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், சீட்-பெல்ட்டை நினைவூட்டும் வசதி, ஐசோஃபிக்ஸ், ஹை-ஸ்பீடு அலார்ட்ஸ் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் நிலையாக வழங்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..?

இதன் பெட்ரோல் வேரியண்ட்டில் பொருத்தப்பட்டுள்ள 1.0 லிட்டர் எம்பிஐ என்ஜின் அதிகப்பட்சமாக 79 பிஎச்பி பவர் மற்றும் 95 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தவல்லது. இதனுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..?

இந்த பெட்ரோல் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு ஃபோக்ஸ்வேகனின் போலோ மாடலில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டீசல் வேரியண்ட்டில் உள்ள 1.5 லிட்டர் டிடிஐ டீசல் என்ஜின் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் 109 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கவல்லது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..?

டிகுவான் மாடலை 2017ல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டுவந்தது. டீசல் வேரியண்ட்டில் மட்டுமே இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த எஸ்யூவி ரக காரில் எல்இடி ஹெட்லைட்ஸ், டிஆர்எல்கள் மற்றும் அகலமான முன்புற க்ரில் உடன் உள்ள ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றை பெற்றிருந்தது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..?

உட்புறத்தில் கருப்பு நிறத்தில் டேஸ்போர்ட்டை கொண்டுள்ள இந்த காரில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பிற்கு இந்த கார் 6 காற்றுப்பைகள், ஏபிஎஸ், இஎஸ்சி, ஏஎஸ்ஆர், இடிஎல் மற்றும் டிஸ்க் ப்ரேக்குகளை அனைத்து சக்கரங்களிலும் கொண்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..?

இவற்றுடன் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலில் பனோராமிக் சன்ரூஃப், லெதர் வடிவமைக்கப்பட்ட கேபின், 3 நிலைகளில் ஏசி போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டிடிஐ என்ஜினை இந்நிறுவனம் பொருத்தி வருகிறது. 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 147 பிஎச்பி பவரையும், 330 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..?

ஐந்து இருக்கை வெர்சனான டிகுவான் எஸ்யூவியின் 7 இருக்கை வெர்சனாக டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலை சமீபத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. பிஎஸ்6 தரத்தில் இந்த புதிய காரில் பொருத்தப்பட்டிருந்த 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் 188 பிஎச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..?

ஏற்கனவே கூறியதுபோல் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படாததால் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த இரு மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியுள்ளது. இந்திய போக்குவரத்தில் ஏற்படும் காற்று மாசுவை குறைக்கும் விதமாக அரசாங்கள் புதிய மாசு உமிழ்வு விதியை அமலுக்கு கொண்டுவந்துள்ளது.

Most Read Articles
English summary
Volkswagen Ameo & Tiguan Models Discontinued In India — Here's Why
Story first published: Monday, April 6, 2020, 21:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X