பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி காரின் டெலிவிரி துவங்கியது...

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் டி-ராக் எஸ்யூவி காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணியினை துவங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி காரின் டெலிவிரி துவங்கியது...

டி-ராக் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகமானது. இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.19.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது துவங்கியுள்ள இதன் டெலிவிரி பணிகள் எப்போதோ ஆரம்பமாக வேண்டியது.

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி காரின் டெலிவிரி துவங்கியது...

ஆனால் அதற்குள்ளாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகவே, தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதுகுறித்த படத்தினை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதன்படி பார்க்கும்போது இரு வெவ்வேறான வாடிக்கையாளர்கள் காரை டெலிவிரி செய்துள்ளனர்.

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி காரின் டெலிவிரி துவங்கியது...

முன்னதாக தயாரிப்பு நிறுவனம் ஏஆர்ஏஐ சான்றிதழை பெறாததால் டி-ராக் எஸ்யூவி காரின் டெலிவிரி பணிகள் ஆகஸ்ட் மாதம் வரையில் ஆரம்பமாகாது என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த சோதனைக்கு தயாரிப்பு நிறுவனம் சில கிமீ தூரம் வரையில் காரை இயக்க வேண்டியுள்ளது.

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி காரின் டெலிவிரி துவங்கியது...

ஊரடங்கினால் இந்த சோதனை இன்னும் நிறைவு பெறவில்லை. சிபியூ முறையில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள இந்த எஸ்யூவி காரில் ஒரே ஒரு 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 5000 ஆர்பிஎம்-ல் 148 பிஎச்பி பவரையும், 1500 ஆர்பிஎம்-ல் 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி காரின் டெலிவிரி துவங்கியது...

இதன் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 0-விலிருந்து 100 kmph என்ற வேகத்தை வெறும் 8.4 வினாடிகளில் அடைந்துவிடக்கூடிய இந்த எஸ்யூவி காரின் அதிகப்பட்ச வேகம் 205 kmph ஆகும்.

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி காரின் டெலிவிரி துவங்கியது...

சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டி-ராக் எஸ்யூவி மாடலை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஒருவேளை இது நடந்தால் டி-ராக் மாடலின் அசெம்பிள் பணிகள் இந்நிறுவனத்தின் அவ்ரங்காபாத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படும்.

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி காரின் டெலிவிரி துவங்கியது...

இது நிச்சயம் காரின் எக்ஸ்ஷோரூம் விலையை குறைக்கும். பல காரணங்களால் தடைப்பட்டு கொண்டிருந்த இதன் டெலிவிரி பணிகள் ஒருவழியாக துவங்கியுள்ளன. இந்த செய்தி டெலிவிரிக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரிய சந்தோஷத்தை வரவழைக்கும் என்பது உறுதி.

Most Read Articles
English summary
Volkswagen T Roc Delivered
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X