ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

போக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு போட்டியாக வர இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 4 புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. அதில், ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதால் பெரும் ஆவல் எழுந்துள்ளது. முன்பதிவும் ஏற்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி கார் மாடலானது முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.. ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் விலையில் இந்த புதிய எஸ்யூவி நிலை நிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் நவீன டிசைன் அம்சங்கள் மற்றும் கட்டமைப்புக் கொள்கையின் கீழ் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெரிய அளவிலான முகப்பு க்ரில் அமைப்பு, எல்இடி பகல்வேளை விளக்குகள், இரட்டை வண்ணக் கலவை, மறைவான புகைப்போக்கி குழல்கள் ஆகியவை இந்த எஸ்யூவியின் முக்கிய டிசைன் அம்சங்களாக உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி 4.23 மீட்டர் நீளமும், 2.59 மீட்டர் வீல் பேஸ் நீளமும் பெற்றிருக்கிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவியுடன் ஒப்பிடும்போது, இந்த கார் சற்றே குறைவான நீள, அகலத்தை பெற்றிருக்கிறது. எனினும் பல பிரிமீயம் அம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், வியன்னா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், கீ லெஸ் என்ட்ரி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், அலாய் வீல்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகிய பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படாது என்று தெரிகிறது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

இந்த காரில் இருக்கும் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த கார் மணிக்கு 205 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கும்.

Most Read Articles
English summary
Volkswagen has unveiled the T-Roc at the Auto Expo 2020. It will be launched in India within one month.
Story first published: Wednesday, February 5, 2020, 22:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X