புதிய மிட்சைஸ் எஸ்யூவியை இந்தியாவில் பார்வைக்கு கொண்டு வந்தது ஃபோக்ஸ்வேகன்!

கியா செல்டோஸ் காருக்கு போட்டியான ரகத்தில் புதிய எஸ்யூவி மாடல் கான்செப்ட்டை ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய எஸ்யூவி குறித்த முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய மிட்சைஸ் எஸ்யூவியை இந்தியாவில் பார்வைக்கு கொண்டு வந்தது ஃபோக்ஸ்வேகன்!

உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பிரபலமான ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வுகளுக்கு முன்னதாக, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்வது வழக்கம். ஃபோக்ஸ்வேகன் குரூப் நைட் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியானது இந்திய ஆட்டோ எக்ஸ்போ துவங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக நேற்று மாலை டெல்லியில் நடந்தது.

புதிய மிட்சைஸ் எஸ்யூவியை இந்தியாவில் பார்வைக்கு கொண்டு வந்தது ஃபோக்ஸ்வேகன்!

இந்த நிகழ்ச்சியில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கீழ் செயல்படும் அனைத்து கார் பிராண்டுகளின் புதிய மாடல்கள் காட்சிப்படுத்தப்படும். அதேபோன்று, நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்தியாவிற்கான புதிய மாடல்களை ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா, லம்போர்கினி, ஆடி என பல்வேறு பிராண்டுகளிலும் வெளியிடப்பட்டது.

புதிய மிட்சைஸ் எஸ்யூவியை இந்தியாவில் பார்வைக்கு கொண்டு வந்தது ஃபோக்ஸ்வேகன்!

இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் மிக முக்கியமாக டைகுன் கான்செப்ட் என்ற மிட்சைஸ் எஸ்யூவியும் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய மாடலானது கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

புதிய மிட்சைஸ் எஸ்யூவியை இந்தியாவில் பார்வைக்கு கொண்டு வந்தது ஃபோக்ஸ்வேகன்!

இது தயாரிப்பு நிலைக்கு உகந்த மாடலாக தெரிந்தாலும், இதனை கான்செப்ட் மாடலாக ஃபோக்ஸ்வேகன் குறிப்பிடுகிறது. அதாவது, மேலும் சில சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.

புதிய மிட்சைஸ் எஸ்யூவியை இந்தியாவில் பார்வைக்கு கொண்டு வந்தது ஃபோக்ஸ்வேகன்!

ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற புதிய பிளாட்ஃபார்மில் இந்த புதிய மிட்சைஸ் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், வெளிநாடுகளில் உள்ள மாடலைவிட அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் கூடுதல் வீல் பேஸ் நீளம் கொண்டதாக இருக்கும்.

புதிய மிட்சைஸ் எஸ்யூவியை இந்தியாவில் பார்வைக்கு கொண்டு வந்தது ஃபோக்ஸ்வேகன்!

ஃபோக்ஸ்வேகன் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் இந்த கார் மிக வசீகரமான தோற்றத்தை பெற்றிருக்கிறது. இந்த காரில் எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி லைட் பார் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய மிட்சைஸ் எஸ்யூவியை இந்தியாவில் பார்வைக்கு கொண்டு வந்தது ஃபோக்ஸ்வேகன்!

இந்த காரின் உட்புறம் மிகச் சிறப்பானதாக இருக்கும். அத்துடன், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் போன்ற நவீன தொழில்நுட்ப அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.

புதிய மிட்சைஸ் எஸ்யூவியை இந்தியாவில் பார்வைக்கு கொண்டு வந்தது ஃபோக்ஸ்வேகன்!

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 130 எச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும். டீசல் மாடல் வருவது சந்தேகம்தான். அதற்கு பதிலாக சிஎன்ஜியில் இயங்கும் மாடலை கொண்டு வருவதற்கான திட்டத்தை ஃபோக்ஸ்வேகன் வைத்துள்ளது.

Most Read Articles
English summary
German car maker, Volkswagen has unveiled its first mid size SUV segment in India called as Taigun concept.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X