ஃபோக்ஸ்வேகனின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி... இந்தியாவில் விற்பனைக்கு வருமா..?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரின் முதல் படத்தையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோக்ஸ்வேகனின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி... இந்தியாவில் விற்பனைக்கு வருமா..?

டிகுவான் எஸ்யூவிக்கு கீழே நிலைநிறுத்தப்படவுள்ள இந்த புதிய தயாரிப்பை இந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட அட்லாஸ் க்ராஸ் ஸ்போர்ட் காரை தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கொண்டு வருகிறது.

ஃபோக்ஸ்வேகனின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி... இந்தியாவில் விற்பனைக்கு வருமா..?

இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரை பற்றிய முக்கிய விபரங்களை இந்நிறுவனம் அடுத்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த காரின் முதல் படம் வெளியிடுவது குறித்து அமெரிக்க ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் சிஇஒ ஸ்காட் கீக் கூறுகையில், ஃபோக்ஸ்வேகன் குடும்பத்தில் விரைவில் இணையவுள்ள புதிய உறுப்பினரின் முதல் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது.

ஃபோக்ஸ்வேகனின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி... இந்தியாவில் விற்பனைக்கு வருமா..?

பெரிய பெரிய சந்தோஷங்கள் மிகவும் சிறிய அளவிலான தொகுப்புகளில் இருந்துதான் வருகின்றன. இதனை ஃபோக்ஸ்வேகனின் அடையாளமாக திகழும் பீட்டில், கோல்ஃப் மற்றும் ஜெட்டா கார்களின் விஷயத்தில் பார்த்திருப்போம். இதற்கு இந்த புதிய தயாரிப்பும் எந்த வகையிலும் விதிவிலக்கல்ல என கூறினார்.

ஃபோக்ஸ்வேகனின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி... இந்தியாவில் விற்பனைக்கு வருமா..?

மற்றப்படி தற்போது வெளியிடப்பட்டுள்ள படம் காரை பற்றி பெரியளவில் எந்த விபரத்தையும் வெளியிடவில்லை. இதில் காட்டப்பட்டுள்ள காரின் நிழலை வைத்து பார்க்கும்போது டி-க்ராஸ் மாடல்களில் இருந்து வித்தியாசமாக வடிவமைக்கப்படவுள்ள இந்த காரில் ஹெட்லைட்கள் எல்இடி தரத்தில் வழங்கப்பட்டிருப்பது மட்டும்தான் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகனின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி... இந்தியாவில் விற்பனைக்கு வருமா..?

டெரெக் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் வெளிவருவதால் இதன் பெயர் டெரெக் எஸ்யூவி என சூட்டப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அர்ஜெண்டினாவில் உள்ள நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெரெக் திட்டத்திற்காக ஃபோக்ஸ்வேகன் க்ரூப் கிட்டத்தட்ட 650 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.

ஃபோக்ஸ்வேகனின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி... இந்தியாவில் விற்பனைக்கு வருமா..?

இந்த திட்டத்தின் நோக்கம், எம்க்யூபி ப்ளாட்ஃபாரத்தையும் புதிய பெயிண்ட் அமைப்பையும் உலக முழுவதும் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதாகும். சீனாவில் தாறு என்ற பெயரில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கொண்டு செல்லப்பட இருந்தாலும், இதன் சீன வெர்சன் அர்ஜெண்டினா வெர்சனை காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

ஃபோக்ஸ்வேகனின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி... இந்தியாவில் விற்பனைக்கு வருமா..?

இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி வட அமெரிக்காவில் உள்ள இந்த ஜெர்மன் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிப்பை துவங்கவுள்ளது. அதன்பின் இந்தியா போன்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ள நாடுகளுக்கு விற்பனைக்காக இந்த கார் கொண்டு செல்லப்படவுள்ளது.

Most Read Articles
English summary
Volkswagen teases upcoming compact SUV, to be placed just under Tiguan
Story first published: Thursday, September 10, 2020, 2:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X