2021 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய அசத்தலான டீசர் புகைப்படம் வெளியீடு..!

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், 2021 டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புதிய டீசர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் இனி காண்போம்.

2021 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய அசத்தலான டீசர் புகைப்படம் வெளியீடு..!

இந்த டீசர் புகைப்படத்தின் மூலம் பார்க்கும்போது இந்நிறுவனத்தில் இருந்து விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த எஸ்யூவி மாடல், அறுகோண க்ரில் மற்றும் ட்வின்-பேட் எல்இடி ஹெட்லேம்ப்களுடன் ரீ-டிசைனில் முன்புற ஃபேஸியாவை கொண்டிருப்பது தெரிய வருகிறது.

2021 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய அசத்தலான டீசர் புகைப்படம் வெளியீடு..!

இதேபோல் முன்புற பம்பர் மற்றும் ஏர்டேமிலும் வேலைகள் நடந்துள்ளன. இதன் பக்கவாட்டு கண்ணாடிகளில் டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளன. முன்னதாக கடந்த ஜனவரி மாத்தில் இந்த புதிய மாடலின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது.

MOST READ: ஊரடங்கு உத்தரவை சீர்குலைத்த நீதிபதியின் மனைவி.. என்ன செய்தார் என தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க...

2021 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய அசத்தலான டீசர் புகைப்படம் வெளியீடு..!

இதில் காரின் க்ரில் மற்றும் பம்பரில் க்ரோம் பூசப்பட்டு இருந்தது. அதேபோல் ஜன்னல்கள் மற்றும் கருப்பு அலாய் சக்கரங்களிலும் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் க்ரோம் ட்ரிம்மை கொண்டிருந்தது. இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டிகுவான் மாடலிற்கு மாற்றாக புதிய டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலை கடந்த மாதத்தில் அறிமுகம் செய்திருந்தது.

2021 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய அசத்தலான டீசர் புகைப்படம் வெளியீடு..!

டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 4,200 ஆர்பிஎம்-ல் 187 பிஎச்பி பவரையும், 1,500- 4,100 ஆர்பிஎம்-ல் 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி வருகிறது.

MOST READ: டைகுன் காரின் அடிப்படையில் உருவாகும் ஃபோக்ஸ்வேகனின் புதிய நிவுஸ் எஸ்யூவி-கூபே மாடல்...

2021 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய அசத்தலான டீசர் புகைப்படம் வெளியீடு..!

இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆற்றலை காரின் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும். இருப்பினும் இதன் என்ஜின் தேர்வுகளில் இருந்து 2.0 லிட்டர் டீசல் என்ஜின் சமீபத்தில் நீக்கப்பட்டது.

2021 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய அசத்தலான டீசர் புகைப்படம் வெளியீடு..!

இந்த டீசல் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படாததால் இந்த விற்பனை நீக்கம் நடவடிக்கையை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மேற்கொண்டது. இந்த 2.0 லிட்டர் டீசல் என்ற ஒரே ஒரு என்ஜின் தேர்வில் மட்டும் கடந்த 2017ல் முதன்முறையாக டிகுவான் மாடல், ஐந்து இருக்கை வெர்சன் காராக அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

MOST READ: அதிர வைக்கும் சம்பவம்... காருக்கு உள்ளேயே வாழும் 2 பேர்... எவ்வளவு நாள்னு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க

2021 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய அசத்தலான டீசர் புகைப்படம் வெளியீடு..!

புதிய மாசு உமிழ்வு விதி மட்டுமில்லாமல் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் டிகுவான் மாடலை பெட்ரோல் வேரியண்ட்டில் வாங்குவதற்கு தான் விரும்புகின்றனர். பழைய டிகுவான் மாடலை விட அதிக நீளம் கொண்டதாக சந்தைக்கு வந்த டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.33.12 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2021 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய அசத்தலான டீசர் புகைப்படம் வெளியீடு..!

இந்த விலை அதன் முந்தைய தலைமுறை டிகுவான் மாடலை விட வெறும் ரூ.3-4 லட்சம் மட்டுமே அதிகமாகும். டீசர் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருப்பதால் புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகத்தை அடுத்த ஆண்டு துவக்கத்தில் காணலாம். டிகுவான் மாடலுக்கு சந்தையில் போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர், ஹோண்டா சிஆர்-வி மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உள்ளிட்ட கார்கள் உள்ளன.

Most Read Articles

English summary
Volkswagen Tiguan facelift teaser out
Story first published: Friday, April 17, 2020, 17:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X