இந்தியாவிற்கு வரும் புதிய புதிய வால்வோ கார்கள்!! எல்லாம் 2021ஆம் ஆண்டில்தான்...

அடுத்த 2021ஆம் ஆண்டிற்கான புதிய கார் மாடலின் டீசர் படத்தை வால்வோ இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவிற்கு வரும் புதிய புதிய வால்வோ கார்கள்!! எல்லாம் 2021ஆம் ஆண்டில்தான்...

வால்வோ நிறுவனம் இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் எஸ்60 செடான் ஃபேஸ்லிஃப்ட்டையும் மற்றும் எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்ற எலக்ட்ரிக் காரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இவற்றுடன் இந்த நிறுவனம் நிறுத்தி கொள்ள போவதில்லை.

இந்தியாவிற்கு வரும் புதிய புதிய வால்வோ கார்கள்!! எல்லாம் 2021ஆம் ஆண்டில்தான்...

இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே எஸ்60 ஃபேஸ்லிஃப்ட் காரின் டிஜிட்டல் ப்ரீமியரில் புதிய காரின் டீசரை வால்வோ வெளியிட்டுள்ளது. இந்த டீசர் படத்தில் காரின் பின்பக்க C-வடிவ டெயில்லேம்ப் மட்டும்தான் வால்வோ முத்திரையுடன் காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு வரும் புதிய புதிய வால்வோ கார்கள்!! எல்லாம் 2021ஆம் ஆண்டில்தான்...

இவற்றை வைத்து பார்த்து இந்த கார் வால்வோ எஸ்90 ஃபேஸ்லிஃப்ட் ஆக இருக்கலாம் என எண்ண தோன்றுகிறது. எஸ்90 ஃபேஸ்லிஃப்ட் சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் சில வெளிப்புற திருத்தியமைப்புகள் மற்றும் பின்புறத்தில் டி8 அனைத்து-சக்கர ரீசார்ஜ் முத்திரையுடன் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தியாவிற்கு வரும் புதிய புதிய வால்வோ கார்கள்!! எல்லாம் 2021ஆம் ஆண்டில்தான்...

இதனால் இது ப்ளக்-இன் ஹைப்ரீட் மாடலாக வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த தோற்றத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக சற்று மறுவேலை செய்யப்பட்ட பம்பர்கள், முன் & பின்புறத்தில் க்ரோம் ஸ்ட்ரிப் மற்றும் ரீடிசைனில் டெயில்லேம்ப்களை வால்வோ எஸ்90 கார் ஏற்றுள்ளது.

இந்தியாவிற்கு வரும் புதிய புதிய வால்வோ கார்கள்!! எல்லாம் 2021ஆம் ஆண்டில்தான்...

உட்புறத்தில் இந்த லக்சரி சலூன் ஹெட்-அப் திரை, அட்வான்ஸ்டு காற்று சுத்திகரிப்பான், மறு வடிவத்தில் ஓரிஃபோர்ஸ் க்ரிஸ்டல் கியர் க்னாப் மற்றும் பௌவர்ஸ் & வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றுடன் அப்கிரேட்-ஐ பெற்றிருக்கலாம்.

இந்தியாவிற்கு வரும் புதிய புதிய வால்வோ கார்கள்!! எல்லாம் 2021ஆம் ஆண்டில்தான்...

இவற்றுடன் பாதுகாப்பு அம்சங்களாக ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் சிஸ்டம், 360-கோண கேமிரா, க்ராஸ் ட்ராஃபிக் அசிஸ்ட் மற்றும் பாதையை விட்டு ஆஃப்-ரோட்டிற்கு கார் செல்வதை குறைக்கும் அமைப்பு போன்றவை வழங்கப்படவுள்ளன.

இந்தியாவிற்கு வரும் புதிய புதிய வால்வோ கார்கள்!! எல்லாம் 2021ஆம் ஆண்டில்தான்...

சர்வதேச சந்தையில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வால்வோ எஸ்90 காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 407 எச்பி மற்றும் 640 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் 87 எச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை எலக்ட்ரிக் மூலமாக பெற முடியும்.

இந்தியாவிற்கு வரும் புதிய புதிய வால்வோ கார்கள்!! எல்லாம் 2021ஆம் ஆண்டில்தான்...

ஆனால் இந்தியாவில் எஸ்90 ஃபேஸ்லிஃப்ட் கார் எத்தகைய என்ஜின் உடன் அறிமுகமாகவுள்ளது என்பது தெரியவில்லை. இந்தியாவில் விற்பனையில் உள்ள வால்வோ எஸ்90-இல் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்தியாவிற்கு வரும் புதிய புதிய வால்வோ கார்கள்!! எல்லாம் 2021ஆம் ஆண்டில்தான்...

8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 187 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் எஸ்90 ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரின் அறிமுகத்திற்கு பிறகு இரண்டாம் பாதியில் இருக்கலாம்.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo India teases new car for 2021; is it the S90 facelift
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X