Just In
- 1 hr ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விரியாத ஏர் பேக்... ஒரு உசுரே போயிருச்சு... 45,000 கார்களை அவசர அவசரமாக அழைக்கும் பிரபல நிறுவனம்...
45 ஆயிரம் கார்களை பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் உடனடியாக வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

உலக புகழ்வாய்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களில் வோல்வோ நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் இந்தியாவின் ஜாம்பவான் நிறுவனம் டாடா மோட்டார்ஸைப் போல இலகு ரகம் முதல் கன ரகம் வரையிலான அனைத்து விதமான வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றது.

அதாவது, கார், பேருந்து மற்றும் டிரக் என பன்முக வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. எனவே, இந்த நிறுவனத்திற்கென தனித்துவமான ரசிகப் பட்டாளம் உலகெங்களிலும் காணப்படுகின்றது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் குறிப்பிட்ட தயாரிப்பு பற்றி எதிர்மறையான தகவல் ஒன்று இணையத்தில் கசிய தொடங்கியுள்ளது.

இந்த நிறுவனத்தின் பிரபல கார் மாடல் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தின் மூலமே உற்பத்தியில் கோளாறு ஏற்பட்ட பாகத்தை பயன்படுத்தியிருப்பதை வோல்வோ உணர்ந்துள்ளது.

எனவே, கோளாறுடைய கருவியுடன் விற்பனைச் செய்யப்பட்ட சுமார் 54,000க்கும் அதிகமான கார்களை வோல்வோ நிறுவனம் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பின் அடிப்படையில் பழது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

பாதுகாப்பு அம்சங்களில் முக்கிய அம்சமாக இருக்கும் ஏர் பேக்கே பழுதுடைய பாகம் என கண்டறியப்பட்டுள்ளது. விபத்தின்போது இது சரியாக விரியாததன் காரணத்தினாலயே வோல்வோ காரை இயக்கிச் சென்ற மரணித்ததாகக் கூறப்படுகின்றது. எனவே, 2001 முதல் 2003 வரை தயாரிக்கப்பட்ட வோல்வோ எஸ்80 மற்றும் எஸ்60 ஆகிய மாடல் கார்களை அந்த நிறுவனம் திருப்பி அழைத்துள்ளது.

அமெரிக்காவில் விற்கப்பட்ட கார்களுக்கு இந்த அழைப்பு பொருந்தும். பிற நாடுகளுக்கு இந்த அழைப்பு பொருந்தது. இந்த சம்பவம் குறித்து வோல்வோ நிறுவனம் தகவல் வெளியிட மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவசர கால அடிப்படையில் முன்னதாக விற்கப்பட்ட கார்களை பழது நீக்கம் செய்வதற்காக உடனடியாக வருமாறு அழைத்திருக்கின்றது.

வோல்வோ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலக நாடுகளில் நல்ல வரவேற்பு நிலவினாலும் இந்தியாவில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களின் ஆதிக்கமே மிக முக்கியமான காரணம் ஆகும். இந்த ஆதிக்கத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக வோல்வோ விரைவில் அதன் கார்களை இந்தியாவிலேயே வைத்து அசெம்பிள் செய்ய இருக்கின்றது.

தற்போது, வோல்வோ நிறுவனம் எக்ஸ்சி60, எக்ஸ்சி90 மற்றும் எஸ்90 ஆகிய கார்களை பெங்களூரு அருகே உள்ள அதன் ஆலையில் வைத்து அசெம்பிள் செய்து விற்பனை செய்கின்றது. இந்நிலையில், விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் எக்ஸ்சி40, வி90 க்ராஸ் கன்ட்ரி மற்றும் எக்ஸ்சி90 எக்ஸ்சலென்ஸ் ப்ளக் இன் ஹைப்ரிட் ஆகிய மாடல்களையே இந்தியாவில் வைத்து அசெம்பிள் செய்ய வோல்வோ திட்டமிட்டிருக்கின்றது.