பிசினஸை பொருட்படுத்தாமல் வால்வோ துணிந்து வெளியிட்ட அறிவிப்பு... உலகமே பாராட்டுது!

வாடிக்கையாளர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருதி, புதிய வால்வோ கார்களில் வேக வரம்பு அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் விற்பனைக்கு செல்ல இருக்கும் புதிய வால்வோ கார்கள் இனி குறைக்கப்பட்ட வேக வரம்புடன்தான் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வால்வோ கார்களின் வேக வரம்பு தடாலடியாக குறைப்பு!

உயர்வகை சொகுசு கார்களில் அதிக செயல்திறன் மிக்க எஞ்சின்கள் வழங்கப்படுவதால், அதிக விபத்துக்களுக்கும் வழிகோலுகின்றன. என்னதான் மேம்பட்ட அளவிலான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டாலும், ஓட்டுனர்களின் தவறுகள் காரணமாக, கோர விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இதுதொடர்பான புள்ளிவிபரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன.

புதிய வால்வோ கார்களின் வேக வரம்பு தடாலடியாக குறைப்பு!

இந்த நிலையில், உலகிலேயே அதிக பாதுகாப்பு வசதிகள் நிரம்பிய கார்களை தயாரிக்கும் நிறுவனமாக கருதப்படும் வால்வோ, தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பயணிகளின் நலன் கருதி தற்போது தடாலடியான முடிவு ஒன்றை அறிவித்துள்ளது.

புதிய வால்வோ கார்களின் வேக வரம்பு தடாலடியாக குறைப்பு!

அதாவது, உலக அளவில் விற்பனைக்கு செல்லும் தனது அனைத்து வகை புதிய கார்களின் வேக வரம்பை அதிரடியாக குறைப்பதாக தெரிவித்துள்ளது.அதிவேகத்தால் விபத்துக்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தனது கார்களின் மூலமாக ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையை பூஜ்யமாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தவும் வால்வோ ஆர்வம் காட்டி வருகிறது.

புதிய வால்வோ கார்களின் வேக வரம்பு தடாலடியாக குறைப்பு!

தற்போது வால்வோ கார்கள் மணிக்கு 190 கிமீ வேகம் முதல் 250 கிமீ வேகம் வரை செல்வதற்கான திறனுடன் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், தனது கார்களின் வேக வரம்பை மணிக்கு 180 கிமீ வேகம் என்ற அளவில் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வால்வோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய வால்வோ கார்களின் வேக வரம்பு தடாலடியாக குறைப்பு!

உலக அளவில் விற்பனைக்கு செல்லும் அனைத்து வகை வால்வோ கார்களும் இனி 180 கிமீ டாப் ஸ்பீடு கொண்டதாகவே செல்லும். இதுதவிர்த்து, மற்றொரு வசதியையும் இதனுடன் சேர்த்து வால்வோ கார் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

புதிய வால்வோ கார்களின் வேக வரம்பு தடாலடியாக குறைப்பு!

அதாவது, புதிய வால்வோ கார்களில் 'Care Key' என்ற தொழில்நுட்ப வழங்கப்படும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, காரின் வேக வரம்பை மேலும் குறைத்து நிர்ணயித்துக் கொள்ள முடியும்.

புதிய வால்வோ கார்களின் வேக வரம்பு தடாலடியாக குறைப்பு!

அனுபவமில்லாமல் கார் ஓட்டுபவர்கள் மற்றும் பிள்ளைகளிடம் காரை கொடுக்கும் நிலை ஏற்படும்போது, அதன் உரிமையாளர் குறிப்பிட்ட வேகத்தை தாண்டாத வகையில் வேக வரம்பை மேலும் குறைத்து நிர்ணயித்துக் கொள்ள முடியும்.

புதிய வால்வோ கார்களின் வேக வரம்பு தடாலடியாக குறைப்பு!

இந்த தடாலடி அறிவிப்பு ஒருபுறம் வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், உரிமையாளர்கள் மற்றும் சாலையில் செல்வோரின் பாதுகாப்பை அதிகரிக்க வால்வோவின் இந்த புதிய முடிவு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிவேகத்தை விரும்பும் வாடிக்கையாளர்கள் பிற நிறுவன கார்களின் பக்கம் கவனத்தை திருப்பினால், வர்த்தகம் பாதிக்கப்படும். ஆனால், அதனை பொருட்படுத்தாமல் வால்வோ இந்த அதிரடி அறிவிப்பை வெியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo Cars have decided to impose 180 kph speed limit on all new cars to curb dangers of speeding.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X