அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதல் வால்வோ கார், எஸ்60 செடான்!! இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்

அடுத்த டிசம்பர் மாதத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட வால்வோ எஸ்60 செடான் காரின் இந்திய வருகை மேலும் தள்ளிப்போகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதல் வால்வோ கார், எஸ்60 செடான்!! இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்

வால்வோ கார் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை எஸ்60 செடான் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த கடந்த சில மாதங்களாக முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதல் வால்வோ கார், எஸ்60 செடான்!! இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்

இருப்பினும் இந்த வருட துவக்கத்தில் நாடு முழுவதும் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் அதன் புதிய அறிமுகத்திற்கு தடையாக அமைந்தன. இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக இந்தியாவில் அறிமுகமாக இருந்த எஸ்60-இன் வருகை அடுத்த வருட முதல் பாதிக்கு தள்ளிப்போகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதல் வால்வோ கார், எஸ்60 செடான்!! இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்

கடைசியாக மூன்றாம் தலைமுறை வால்வோ எஸ்60 கார் கடந்த 2018ஆம் ஆண்டின் மத்தியில் சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதில் இருந்து உலக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் இந்த செடான் மாடலின் 2021 வெர்சன் உலகளவில் வருகிற நவம்பர் 27ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதல் வால்வோ கார், எஸ்60 செடான்!! இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்

இதில் வழங்கப்படவுள்ள 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி-இல் இருந்து 390 பிஎச்பி வரையிலான ஆற்றல்களை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனால் ஒவ்வொரு நாட்டு சந்தைக்கும் ஏற்ற விதத்தில் ஒவ்வொரு விதமான ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த என்ஜின் வழங்கப்படவுள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதல் வால்வோ கார், எஸ்60 செடான்!! இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்

இந்தியாவிலும் இதே பெட்ரோல் என்ஜின் உடன் தான் வால்வோ எஸ்60 விற்பனையை துவங்கவுள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான வால்வோ இரண்டாம் தலைமுறை எஸ்60 செடான் காரை 2011ல் இருந்து 2019 வரையில் சுமார் 9 வருடங்களாக விற்பனை செய்தது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதல் வால்வோ கார், எஸ்60 செடான்!! இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்

ஐரோப்பிய என்சிஏபி மோதல் சோதனையில் முழு ஐந்து மதிப்பெண்களையும் இந்த வால்வோ தயாரிப்பு ஒவ்வொரு வருடத்திலும் வெளிப்புறத்தில் குறிப்பிடத்தக்க டிசைன் அப்கிரேட்களை பெற்றுவருகிறது. அமெரிக்காவில் உள்ள வால்வோவின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் வால்வோ காரான எஸ்60 செடானின் ஆரம்ப விலை அங்கு ரூ.32.68 லட்சம் என்ற அளவில் உள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதல் வால்வோ கார், எஸ்60 செடான்!! இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்

இந்தியாவில் அறிமுகமான பிறகு இந்த வால்வோ கார் ஆடி ஏ4, பிஎம்டபிள்யூ 3-சீரிஸ், மெர்சிடிஸ் சி-கிளாஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்இ உள்ளிட்டவற்றின் போட்டியினை எதிர்கொள்ளவுள்ளது. எஸ்60 செடான் மட்டுமின்றி எக்ஸ்சி40 ரீசார்ஜ் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி காரையும் அடுத்த ஆண்டில் இந்திய சந்தைக்கு கொண்டுவர வால்வோ நிறுவனம் தயாராகி வருகிறது.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
New Gen Volvo S60 Launching in India Before March 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X