Just In
- 27 min ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 1 hr ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 2 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 2 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்... 50% ரசிகர்களை அனுமதிக்க திட்டம் போடும் பிசிசிஐ!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Finance
சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுக விபரம்!
புதிய வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை வலுப்பெற துவங்கி இருக்கிறது. இதனால், சாதாரண வகை எலெக்ட்ரிக் கார் முதல் சொகுசு கார் மார்க்கெட் வரை எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் வாகன நிறுவனங்கள் அதிக முனைப்பு காட்டி வருகின்றன.

அந்த வகையில், சொகுசு கார் மார்க்கெட்டிலும் மின்சார கார்கள் முக்கியத்துவம் பெற துவங்கிவிட்டன. அண்மையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இக்யூசி எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த நிலையில், ஆடி, ஜாகுவார் மற்றும் வால்வோ கார் நிறுவனங்களும் தங்களது சொகுசு எலெக்ட்ரிக் கார் மாடல்களை களமிறக்க ஆயத்தமாகி வருகின்றன.

அந்த வகையில், வால்வோ கார் நிறுவனம் தனது எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் புதிய எக்ஸ்சி40 ரீசார்ஜ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக டீம் பிஎச்பி தள செய்தி தெரிவிக்கிறது.

புதிய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவியில் இரண்டு 150kW எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புற மற்றும் பின்புற ஆக்சில்களில் தலா ஒரு மின் மோட்டார் வீதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மின் மோட்டார்களும் இணைந்து அதிகபட்சமாக 402 பிஎச்பி பவரையும், 659 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. இந்த காரில் 78kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்ற முடியும்.

வால்வோ எக்ஸ்சி40 காருக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில், வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் மாடல் சொகுசு எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இது மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி காரைவிட விலை குறைவான தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் மத்தியிலும் ஆவல் எழுந்துள்ளது. வால்வோ நிறுவனத்தின் ரீசார்ஜ் என்ற மின்சார கார்களுக்கான பிராண்டில் வரும் முதல் எலெக்ட்ரிக் கார் எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.