எக்ஸ்சி40 பெட்ரோல் எஸ்யூவி காரின் ஷோரூம் விலையை குறைத்தது வால்வோ... இனி இதுதான் இதன் ஆரம்ப விலை...

வால்வோ இந்தியா நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் புதிய எக்ஸ்சி40 மாடலின் எக்ஸ்ஷோரூம் விலையை கணிசமாக குறைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எக்ஸ்சி40 பெட்ரோல் எஸ்யூவி காரின் ஷோரூம் விலையை குறைத்தது வால்வோ... இனி இதுதான் இதன் ஆரம்ப விலை...

வால்வோ நிறுவனம் புத்தம் புதிய எக்ஸ்சி40 டி4 ஆர்-டிசைன் பெட்ரோல் மாடலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.39.90 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்திருந்தது. இந்த நிலையில் தான் தற்போது இந்த விலை ரூ.3 லட்சம்வரையில் குறைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்சி40 பெட்ரோல் எஸ்யூவி காரின் ஷோரூம் விலையை குறைத்தது வால்வோ... இனி இதுதான் இதன் ஆரம்ப விலை...

சுதந்திர தினத்தை முன்னிட்டு விலை குறைப்பை பெற்றுள்ள எக்ஸ்சி40 மாடல் பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் மிக சிறிய வால்வோ காராகும். இந்த விலை குறைப்பினால் எக்ஸ்சி40 டி4 ஆர்-டிசைன் பெட்ரோல் கார் இனி ரூ.36.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலேயே விற்பனைக்கு கிடைக்கும்.

எக்ஸ்சி40 பெட்ரோல் எஸ்யூவி காரின் ஷோரூம் விலையை குறைத்தது வால்வோ... இனி இதுதான் இதன் ஆரம்ப விலை...

இந்த விலை குறைப்புடன் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆக்ஸஸரீகளையும் எக்ஸ்சி40 காரை வாங்குபோதே வால்வோ நிறுவனம் வழங்கி வருகிறது. காரின் தோற்றத்தை பற்றி கூற வேண்டுமென்றால், எக்ஸ்சி40 டி4 ஆர்-டிசைன் மிகவும் ஸ்போர்ட்டியான எஸ்யூவி ரக காராகும்.

எக்ஸ்சி40 பெட்ரோல் எஸ்யூவி காரின் ஷோரூம் விலையை குறைத்தது வால்வோ... இனி இதுதான் இதன் ஆரம்ப விலை...

வெளிப்புறத்தில் நேர்த்தியான டெயில்லேம்ப் டிசைன், இரு டோன்களில் பெயிண்ட் அமைப்பு, பெரிய சக்கர ஆர்ச்கள், டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் எலக்ட்ரானிக் டெயில்கேட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. க்ரிஸ்டல் வெள்ளை பேர்ல், வெடிக்கும் ப்ளூ, க்ளாசியர் சில்வர், ஓனிக்ஸ் க்ரே மற்றும் இணைக்கப்பட்ட சிவப்பு என்ற ஆறு விதமான நிறங்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

எக்ஸ்சி40 பெட்ரோல் எஸ்யூவி காரின் ஷோரூம் விலையை குறைத்தது வால்வோ... இனி இதுதான் இதன் ஆரம்ப விலை...

கருப்பு நிற லெதர் மற்றும் சிவப்பு நிற ஹைலைட்களுடன் வடிவமைக்கப்பட்ட புதிய எக்ஸ்சி40 காரின் உட்புற கேபினில் இரு-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், 12.3 இன்ச்சில் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடியதாக 9.0 இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் போன்ற வசதிகள் உள்ளன.

எக்ஸ்சி40 பெட்ரோல் எஸ்யூவி காரின் ஷோரூம் விலையை குறைத்தது வால்வோ... இனி இதுதான் இதன் ஆரம்ப விலை...

இவற்றுடன் பயணிகளின் பாதுகாப்பிற்கு ரேடாரை சார்ந்த ஆக்டிவ் பாதுகாப்பு, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பாதை குறைத்தல், ஆஃப்-ரோட்டிற்கான பாதுகாப்பு, ரோல் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், தூர எச்சரிக்கை, முன் மற்றும் பின்பக்க பார்க்கிங் அசிஸ்ட், உலோகத்தாலான உடல் கூண்டு உள்பட 7 காற்றுப்பைகளும் வழங்கப்படுகின்றன.

எக்ஸ்சி40 பெட்ரோல் எஸ்யூவி காரின் ஷோரூம் விலையை குறைத்தது வால்வோ... இனி இதுதான் இதன் ஆரம்ப விலை...

இதன் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.0 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 8-ஸ்பீடு கியர்ட்ரானிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. சந்தையில் வால்வோ எக்ஸ்சி40-க்கு விற்பனை போட்டியினை அளிக்கும் வகையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்1, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ மற்றும் ஆடி க்யூ3 உள்ளிட்டவை உள்ளன.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo XC40 T4 R-Design Petrol Prices Slashed In India: Here Are The New Prices
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X