ஏப்ரல் 1ல் அமலுக்கு வரும் புதிய மாசு உமிழ்வு விதி... அப்படியானால் பிஎஸ்-4 தர வாகனங்களின் நிலை என்ன?

மிக விரைவில் புதிய மாசு உமிழ்வு பிஎஸ்-6 தரம் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ள நிலையில் விற்கப்படாத பிஎஸ்-4 வாகனங்களின் நிலை என்னவாகும் என்கிற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழும்பிய வண்ணம் இருக்கின்றது. இதுகுறித்த தகவலை மிக விரிவாக கீழே காணலாம்.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாசு உமிழ்வு விதி... அப்படியானால் பிஎஸ்-4 தர வாகனங்களின் நிலை என்ன?

சுற்றுப்புறச் சூழலைக் கருத்தில் கொண்டு புதிய மாசு உமிழ்வு பிஎஸ்-6 அறிமுகம் செய்யப்பட்டது. இது பிஎஸ்-4 தர வகானங்களைக் காட்டிலும் மிக குறைவான மாசையே வெளிப்படுத்தும். ஆகையால், பிஎஸ்-6 தரம் கொண்ட வாகனங்கள் இயற்கைக்கு நண்பனாக விளங்கும் என நம்பப்படுகின்றது.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாசு உமிழ்வு விதி... அப்படியானால் பிஎஸ்-4 தர வாகனங்களின் நிலை என்ன?

இதனடிப்படையில், வாகன உற்பத்தி நிறுவனங்கள் விரைவில் அதன் தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக அப்கிரேட் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.

இதற்கான காலக்கெடு மார்ச் 31 வரை கொடுக்கப்பட்டது. ஆகையால், ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து பிஎஸ்-6 தரத்திற்கு குறைந்த எந்தவொரு வாகனங்களையும் விற்பனைச் செய்ய முடியாது. மேலும், பதிவும் செய்ய முடியாது.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாசு உமிழ்வு விதி... அப்படியானால் பிஎஸ்-4 தர வாகனங்களின் நிலை என்ன?

இது வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே, வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் பிரபல தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்தில் அறிமுகம் செய்ய ஆரம்பித்துவிட்டன. சில பிஎஸ்-6 தயாரிப்புகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகின்றது.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாசு உமிழ்வு விதி... அப்படியானால் பிஎஸ்-4 தர வாகனங்களின் நிலை என்ன?

இருப்பினும், முந்தைய தினங்களில் தயாரிக்கப்பட்ட பல பிஎஸ்-4 வாகனங்கள் இன்றளவும் விற்பனையாகாமல் நிலுவையில் இருக்கின்றன. ஆனால், காலக்கெடு முடிவதற்கோ முழுமையாக இரு வாரங்கள்கூட இல்லை. இதனால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் செய்வதறியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாசு உமிழ்வு விதி... அப்படியானால் பிஎஸ்-4 தர வாகனங்களின் நிலை என்ன?

இதேபோன்று நெருக்கடியான நிலையை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசு வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.

அதாவது, கடந்த 2017ம் ஆண்டு பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதி அறிமுகம் செய்தபோது இதேமாதிரியான பல இன்னல்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சந்தித்தன.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாசு உமிழ்வு விதி... அப்படியானால் பிஎஸ்-4 தர வாகனங்களின் நிலை என்ன?

இதைத்தொடர்ந்து, தற்போது 2020ம் ஆண்டில் மீண்டும் அதேமாதிரியான இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது.

இந்தநிலையில் விற்பனையாகாத பிஎஸ்-4 வாகனங்களை உற்பத்தி நிறுவனங்கள் என்ன செய்யும் என்ற எண்ணம் நம்மில் பலரிடையே தோன்ற ஆரம்பித்திருக்கின்றது.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாசு உமிழ்வு விதி... அப்படியானால் பிஎஸ்-4 தர வாகனங்களின் நிலை என்ன?

இதுகுறித்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம், அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதில், 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து பிஎஸ்-4 வாகனங்களை விற்பனையோ அல்லது பதிவோ செய்வதற்கு தடை விதிப்பதாக கூறியிருந்தது.

இதனால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் பிஎஸ்-4 வாகனங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு பிஎஸ்-6 வாகன தயாரிப்பிற்கு கட்டாய தள்ளுதளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாசு உமிழ்வு விதி... அப்படியானால் பிஎஸ்-4 தர வாகனங்களின் நிலை என்ன?

நாட்டின் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், விற்பனையாகாத பிஎஸ்-4 வாகனங்களின் நிலைகுறித்து அரசு தரப்பில் எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை. ஆகையால், அவற்றின்நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாசு உமிழ்வு விதி... அப்படியானால் பிஎஸ்-4 தர வாகனங்களின் நிலை என்ன?

ஆகையால், விற்பனையாக வாகனங்கள் ஸ்கிராப் செய்வதைத் தவிர உற்பத்தி நிறுவனங்களுக்கு வேறெந்த வழியுமே இல்லாத நிலை உருவாகியிருக்கின்றது. இதனால் உற்பத்தி நிறுவனங்கள் பெருத்த இழைப்பைச் சந்திக்க நேரிடும் என அஞ்சப்படுகின்றது.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாசு உமிழ்வு விதி... அப்படியானால் பிஎஸ்-4 தர வாகனங்களின் நிலை என்ன?

அதேசமயம், பிஎஸ்-4 வாகனங்களை விற்பனைச் செய்ய டீலர்கள் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவில் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர். இருப்பினும், ஒரு சில காரணங்களால் வாகன விற்பனை சூடிபிடிக்காமல் கடும் மந்த நிலையையேச் சந்தித்து வருகின்றன.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாசு உமிழ்வு விதி... அப்படியானால் பிஎஸ்-4 தர வாகனங்களின் நிலை என்ன?

இந்த மந்த நிலை கடந்த 2019ம் ஆண்டில் இருந்தே இந்தியாவில் நிலவி வருகின்றது. இதற்கிடையில், அதாவது வருடத்தின் இறுதியில் பண்டிகைத் தினங்களை சற்றே மந்தநிலை மாறி, வாகன விற்பனை லேசாக சூடுபிடித்தது. ஆனால், அதுவும் நீண்ட நாட்களுக்கு தாக்குபிடிக்கவில்லை.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாசு உமிழ்வு விதி... அப்படியானால் பிஎஸ்-4 தர வாகனங்களின் நிலை என்ன?

கொரோனா என்ற கொடிய மிருகம் (வைரஸ்) உலகும் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இதனால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் பழைய மந்த நிலையையேத் தற்போது சந்திக்க ஆரம்பித்திருக்கின்றன. இதனால், பல நாடுகள் பொருளாதார மந்தநிலையில் சிக்க ஆரம்பித்திருக்கின்றது.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாசு உமிழ்வு விதி... அப்படியானால் பிஎஸ்-4 தர வாகனங்களின் நிலை என்ன?

இந்த நிலையைக் கருத்தில் கொண்டு காலக்கெடுவில் சற்றே தளர்வு வழங்குமாறு வாகன உற்பத்தி நிறுவனங்களின் சங்கம் (SIAM) உச்சநீதிமன்றத்தில் மனு வழங்கியிருக்கின்றது.

இந்த மனுவை அவசர கால வழக்காக விசாரிக்கவும் அது கோரிக்கை விடுத்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What Will Happen Unsold BS-IV Vehicles After March 31 In India: Here Are The Complete Details. Read In Tamil.
Story first published: Thursday, March 19, 2020, 17:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X