டெஸ்லாவின் எந்த மின்சார கார் முதலில் இந்தியா வரும்? - எல்லோர் மனதிலும் எழுந்த கேள்விக்கான பதில்!

டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் இந்திய வருகை குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், எந்த கார் மாடலை டெஸ்லா முதலில் கொண்டு வரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெஸ்லாவின் எந்த மின்சார கார் முதலில் இந்தியாவில் அறிமுகமாகும்?

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தில் அதிசிறந்து விளங்குகிறது. பல ஆராய்ச்சி நிலையில் இருக்கும் நிலையில், தொழில்நுட்ப அளவில் அதிசிறந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களை களமிறக்கி அசத்தி வருகிறது. அத்துடன், உலக அளவில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் மீது தனி மதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெஸ்லாவின் எந்த மின்சார கார் முதலில் இந்தியாவில் அறிமுகமாகும்?

இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்து காத்துக் கிடக்கின்றனர். டெஸ்லா ஸ்டீயரிங்கை சுவைத்து பார்க்க இந்தியர்களின் கைகளும், கண்களும் பரபரத்து வருகின்றன.

டெஸ்லாவின் எந்த மின்சார கார் முதலில் இந்தியாவில் அறிமுகமாகும்?

இந்த நிலையில், ட்விட்டரில் டெஸ்லா கார்கள் இந்திய அறிமுகம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். அடுத்த ஆண்டு நிச்சயமாக இந்தியாவில் களமிறங்க உள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார். இது இந்தியாவில் உள்ள டெஸ்லா பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மட்டற்ற மகிழ்ச்சியையும், ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது.

டெஸ்லாவின் எந்த மின்சார கார் முதலில் இந்தியாவில் அறிமுகமாகும்?

இதையடுத்து, டெஸ்லா நிறுவனம் எந்த மாடலை முதலில் கொண்டு வரும் என்ற கேள்வியும் எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. தற்போது மாடல் எஸ், மாடல் 3, மாடல் எக்ஸ் மற்றும் மாடல் ஒய் என நான்கு மின்சார கார் மாடல்களை டெஸ்லா விற்பனை செய்து வருகிறது. இதில், டெஸ்லாவின் மாடல் 3 கார்தான் இந்தியாவில் முதலில் வருவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன.

டெஸ்லாவின் எந்த மின்சார கார் முதலில் இந்தியாவில் அறிமுகமாகும்?

கடந்த2016ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் விலை குறைவான மின்சார கார் மாடலாக டெஸ்லா மாடல் 3 கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போதே, இந்தியா உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு ஏற்கப்பட்டது. 2017ம் ஆண்டு ஜூலையில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

டெஸ்லாவின் எந்த மின்சார கார் முதலில் இந்தியாவில் அறிமுகமாகும்?

இந்த காரை பல இந்திய பிரபலங்களும் அடித்துப்பிடித்து முன்பதிவு செய்தனர். ஆனால், முன்பதிவு லட்சக்கணக்கில் சென்றதால், உற்பத்தி திறனை அதிகரித்து ஒவ்வொரு நாடுகளுக்கும் இந்த காரை டெலிவிரி கொடுக்கும் பணிகளை டெஸ்லா செய்து வருகிறது. அந்த வகையில், அடுத்த ஆண்டு டெஸ்லா மாடல் 3 மின்சார கார்தான் அந்நிறுவனத்தின் முதல் மாடலாக இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லாவின் எந்த மின்சார கார் முதலில் இந்தியாவில் அறிமுகமாகும்?

டெஸ்லா மாடல் 3 மின்சார கார் பல்வேறு பேட்டரி மற்றும் மின் மோட்டார்கள் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. இந்த கார் 400 முதல் 650 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் மாடல்களில் கிடைக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 3.5 வினாடிகளில் எட்டிவிடும் திறன் வாய்ந்தது.

டெஸ்லாவின் எந்த மின்சார கார் முதலில் இந்தியாவில் அறிமுகமாகும்?

இந்த காரில் பெரிய தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. காரின் பேட்டரி, மின் மோட்டார் மற்றும் சாதனங்களின் இயக்கம், பழுது உள்ளிட்ட தகவல்களை இதன் மூலமாக தெரிந்துகொள்ள இயலும். அதேசமயத்தில் வழக்கம்போல் பொழுதுபோக்கு விஷயங்களையும் பெற முடியும்.

டெஸ்லாவின் எந்த மின்சார கார் முதலில் இந்தியாவில் அறிமுகமாகும்?

அமெரிக்காவில் இந்த கார் துவக்கத்தில் 25,000 டாலர் (அப்போதைய இந்திய மதிப்பில் ரூ.22 லட்சம்) என்ற மிக குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த கார் 4 வேரியண்ட்டுகளில் 36,200 டாலர் முதல் 56,190 டாலர் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரூ.70 லட்சம் மதிப்பில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla Inc, will be making its India debut sometime next year in the country. Their entry-level Model 3 electric-car could be the first model for India.
Story first published: Saturday, October 3, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X