உலகின் சிறந்த கார் கியா டெலுரைடு எஸ்யூவி... போட்டிகளை புறந்தள்ளி வெற்றி வாகை சூடியது!

இந்த ஆண்டிற்காக (2020) உலகின் சிறந்த காருக்கான விருதை கியா டெலுரைடு எஸ்யூவி வென்றிருக்கிறது. போட்டிகளை புறந்தள்ளி இந்த மதிப்புமிக்க விருதை பெற்றிருக்கிறது.

உலகின் சிறந்த கார் கியா டெலுரைடு எஸ்யூவி... போட்டிகளை புறந்தள்ளி வெற்றி வாகை சூடியது!

சர்வதேச அளவில் அறிமுகமாகும் புதிய கார்களில் சிறந்ததை தேர்வு செய்து ஆண்டின் சிறந்த காருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் விற்பனைக்கு இந்த விருது மிகவும் பக்கபலமாக அமைவதுடன், எளிதாக பிரபலமடையும் வாய்ப்பு இருப்பதால், இந்த விருதை பெறுவது தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் பெருமையையும், வர்த்தக அளவில் பலனையும் தரும் விஷயமாக இருக்கிறது.

உலகின் சிறந்த கார் கியா டெலுரைடு எஸ்யூவி... போட்டிகளை புறந்தள்ளி வெற்றி வாகை சூடியது!

இந்த ஆண்டுக்கான விருதை பெறுவதற்கான முதல்கட்ட தேர்வு கடந்த ஆண்டு நியூயார்க் ஆட்டோ ஷோவில் துவங்கியது. சிறந்த கார் மாடலை தேர்வு செய்வதற்காக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் நிபுணர்கள் 86 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

உலகின் சிறந்த கார் கியா டெலுரைடு எஸ்யூவி... போட்டிகளை புறந்தள்ளி வெற்றி வாகை சூடியது!

இந்த ஆண்டு உலகின் சிறந்த காருக்கான முதல் நிலை பட்டியலில் 29 கார்கள் இடம்பிடித்தன. இதைத்தொடர்ந்து, பல்வேறு கட்டங்களாக விருதுக்கான கார் மாடலை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன.

உலகின் சிறந்த கார் கியா டெலுரைடு எஸ்யூவி... போட்டிகளை புறந்தள்ளி வெற்றி வாகை சூடியது!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பட்டியலில் இடம்பெற்ற 29 கார்களையும் நடுவர்கள் அனைவரும் டெஸ்ட் டிரைவ் செய்து மதிப்பீடுகளை அளித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் உலகின் சிறந்த காருக்கான டாப் 3 மாடல்களை தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது.

உலகின் சிறந்த கார் கியா டெலுரைடு எஸ்யூவி... போட்டிகளை புறந்தள்ளி வெற்றி வாகை சூடியது!

இதைத்தொடர்ந்து, தற்போது இறுதியாக வெற்றி பெற்ற மாடல்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனத்தின் டெலுரைடு எஸ்யூவி இந்த ஆண்டின் சிறந்த கார் விருதை வென்று அசத்தி இருக்கிறது.

உலகின் சிறந்த கார் கியா டெலுரைடு எஸ்யூவி... போட்டிகளை புறந்தள்ளி வெற்றி வாகை சூடியது!

டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கு இணையான ரகத்தை சேர்ந்த இந்த Full Size எஸ்யூவி மாடலுக்கு அதிகபட்ச புள்ளிகள் கிடைத்தது. மிடுக்கான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின், வசதிகள், பாதுகாப்பு, ஓட்டுதல் தரம் என அனைத்திலும் சிறப்பானதாக அதிக புள்ளிகளை பெற்று இந்த ஆண்டின் உலகின் சிறந்த கார் பட்டத்தை வென்று வாகை சூடியுள்ளது கியா டெலுரைடு.

உலகின் சிறந்த கார் கியா டெலுரைடு எஸ்யூவி... போட்டிகளை புறந்தள்ளி வெற்றி வாகை சூடியது!

கியா டெலுரைடு எஸ்யூவியில் கியா பாரம்பரியத்தை காட்டும் புலிமூக்கு வடிவிலான க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், ஆரஞ்ச் வண்ண பகலல்நேர விளக்குகள், செங்குத்து வாக்கிலான எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.

உலகின் சிறந்த கார் கியா டெலுரைடு எஸ்யூவி... போட்டிகளை புறந்தள்ளி வெற்றி வாகை சூடியது!

கியா டெலுரைடு எஸ்யூவியில் 3.8 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 285 பிஎச்பி பவரையும், 355 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

உலகின் சிறந்த கார் கியா டெலுரைடு எஸ்யூவி... போட்டிகளை புறந்தள்ளி வெற்றி வாகை சூடியது!

கியா டெலுரைடு எஸ்யூவி விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு இணையான ரகத்தில் வந்தாலும், இவற்றைவிட பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.

உலகின் சிறந்த கார் கியா டெலுரைடு எஸ்யூவி... போட்டிகளை புறந்தள்ளி வெற்றி வாகை சூடியது!

கியா சோல் காருக்கும் விருது

சிறந்த நகர்ப்புற பயன்பாட்டுக்கான கார் வகையில், கியா சோல் எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டின் உலகின் சிறந்த கார் மாடலாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 8 போட்டியாளர்கள் பங்கு கொண்ட இந்த வகையில், கியா சோல் எலெக்ட்ரிக் கார் அதிக புள்ளிகளை பெற்று விருதை வென்றுள்ளது.

Most Read Articles
English summary
Kia Telluride has won the '2020 World Car of the Year' award. This is the first time the South Koran carmaker has won the prestigious award. The luxury SUV beat the Mazda 3 and Mazda CX-30 in the final round to take the top honours.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X