இதுதான் உலகின் வேகமான சுசுகி ஜிம்னி கார்... இதன் என்ஜின் ஆற்றலை நிச்சயம் நீங்கள் அறிய வேண்டும்...

உலகின் வேகமான ஜிம்னி மாடலாக வழக்கமான சுசுகி ஜிம்னி கார் ஆற்றல்மிக்கதாக கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலினை இந்த செய்தியில் பார்ப்போம்.

இதுதான் உலகின் வேகமான சுசுகி ஜிம்னி கார்... இதன் என்ஜின் ஆற்றலை நிச்சயம் நீங்கள் அறிய வேண்டும்...

ஜப்பானை சேர்ந்த சுசுகி நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்பு மாடலாக விளங்கும் ஜிம்னி, வலுவான கட்டமைப்பு மற்றும் சிறப்பான ஆஃப்-ரோடு திறனால் வெளிநாட்டு சந்தைகளில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியா சந்தைக்கு விரைவில் வருகை தரவுள்ள இந்த காரை வெளிநாட்டினர் தங்களது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் கஸ்டமைஸ்ட் செய்து வருகின்றனர்.

இதுதான் உலகின் வேகமான சுசுகி ஜிம்னி கார்... இதன் என்ஜின் ஆற்றலை நிச்சயம் நீங்கள் அறிய வேண்டும்...

இதில் பெரும்பாலான கஸ்டமைஸ்ட்கள் காஸ்மெட்டிக் மாற்றங்களாகவே இருந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட ஒரு ஜிம்னி கார் மட்டும் ஆற்றல்மிக்கதாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த கஸ்டமைஸ்ட் மாடல் தான் உலகின் வேகமான ஜிம்னி காராக உருவெடுத்துள்ளது.

இதுதான் உலகின் வேகமான சுசுகி ஜிம்னி கார்... இதன் என்ஜின் ஆற்றலை நிச்சயம் நீங்கள் அறிய வேண்டும்...

இந்த மாடிஃபைட் ஜிம்னி மாடலை ஆட்டோப்ளஸ் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனத்தை சேர்ந்த கார்லோஸ் கோனோ என்பவர் வேகமான ஜிம்னியாக மாற்றியமைத்துள்ளார். ஆட்டோப்ளஸ் நிறுவனம் நான்காம் தலைமுறை ஜிம்னி மாடல்களில் கஸ்டமைஸ்ட் மாற்றங்களை கொண்டுவரும் நிலையில் தற்போது வேகமான ஜிம்னி மாடலாக மாற்றப்பட்டுள்ள கார் கார்லோஸ் கோனா சொந்தமாக வைத்திருக்கும் இரண்டாவது ஜிம்னி மாடலாகும்.

MOST READ: விதி மீறினால் கொரோனா நோயாளியுடன் ஒரு நாள் டூர்.. புள்ளிங்கோ இளைஞர்களை சிதறவிட்ட திருப்பூர் போலீஸ்..

இதுதான் உலகின் வேகமான சுசுகி ஜிம்னி கார்... இதன் என்ஜின் ஆற்றலை நிச்சயம் நீங்கள் அறிய வேண்டும்...

இந்த கஸ்டமைஸ்ட் ஜிம்னி மாடலின் முக்கிய சிறப்பம்சமே அதன் அடியில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் தான். ஏனெனில் இதன் என்ஜின் அமைப்பில் ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த எஃப்-பெர்ஃபார்மன்ஸ் கேரேஜ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டர்போ-கிட் பொருத்தப்பட்டுள்ளது. இதுவே என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றலில் கவனித்தக்க வகையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

MOST READ: தாய்லாந்து காவல் பணியில் இணைந்த டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... ஒரு காரோட விலை இவ்வளவா..?

இதுதான் உலகின் வேகமான சுசுகி ஜிம்னி கார்... இதன் என்ஜின் ஆற்றலை நிச்சயம் நீங்கள் அறிய வேண்டும்...

கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட ஜிம்னியின் என்ஜினை அதிகப்பட்சமாக 200 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் மாற்றியுள்ள இந்த டர்போ-கிட்டில், கஸ்டம் ஃப்யூல் இன்ஜெக்டர் மற்றும் புதிய இசியூ உள்ளிட்டவை அடங்கும். இதனுடன் இந்த காரில் ஏற்படுத்தப்பட்டுள்ள கஸ்டமைஸ்ட் மாற்றங்கள் நிற்கவில்லை.

இதுதான் உலகின் வேகமான சுசுகி ஜிம்னி கார்... இதன் என்ஜின் ஆற்றலை நிச்சயம் நீங்கள் அறிய வேண்டும்...

மாறாக, வேஸ்ட்கேட்டிற்கு அடியில் வால்வு, ஆட்டோப்ளஸ் நிறுவனத்தின் எக்ஸாஸ்ட் சிஸ்டம், ப்ரேக் ரோடார்ஸ் மற்றும் பேட்ஸ், ஆர்எஸ்ஆர் தாழ்வான ஸ்ப்ரிங்ஸ், 18-இன்ச் வோல்க் ரேஸிங் குழிவான அலாய் சக்கரங்கள் மற்றும் ரெகாரோ பக்கெட் இருக்கைகள் என தொடர்ந்தே உள்ளது.

MOST READ: ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!

இதுதான் உலகின் வேகமான சுசுகி ஜிம்னி கார்... இதன் என்ஜின் ஆற்றலை நிச்சயம் நீங்கள் அறிய வேண்டும்...

இத்தகைய மாற்றங்களால் சிறப்பான வெப்ப உமிழ்வுடன் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் இரட்டிப்பாகி உள்ளது. இந்த என்ஜினின் இயக்கத்திற்கு ரேஸ்-கிரேட் 300V என்ஜின் ஆயில் நிரப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் சுசுகியின் ஜிம்னி மாடல் சந்தையில் 50 ஆண்டு கால பயணத்தை சமீபத்தில் நிறைவு செய்துள்ளது. இதுகுறித்த தகவலினை நமது தளத்தில் பதிவிட்டுள்ளோம். அதனை காண கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

பிரபலமான சுசுகி ஜிம்னி காருக்கு வயது 50... இந்த காரில் அப்படி என்ன தான் உள்ளது..?

பட்ஜெட் விலையில் ஆஃப்-ரோடிற்கு ஏற்ற வாகனமாக விளங்கும் இந்த கார் இந்திய சந்தைக்கு 5-கதவு வெர்சனாக வரவுள்ளது. இதில் 1.5 லிட்டர் கே-சீரிஸ் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மாருதி சியாஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 102 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. ட்ரான்ஸ்மிஷனிற்கு இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

Image Courtesy: Auto Focus/YouTube

Most Read Articles

English summary
This Modified Suzuki Jimny Produces 200hp Of Maximum Power
Story first published: Saturday, April 25, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X