தற்போதைய மாடர்ன் கார்கள் கூட விற்பனையானது இல்லை... சுமார் ரூ.23 கோடியில் விற்கபட்டுள்ள 1966 ஃபெராரி

உலகின் விலையுயர்ந்த ஃபெராரியின் 1966 மாடல் கார் ஒன்று மிகவும் அதிக விலையில் இணையம் மூலமாக விற்பனை செய்யப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்போதைய மாடர்ன் கார்கள் கூட விற்பனையானது இல்லை... சுமார் ரூ.23 கோடியில் விற்கபட்டுள்ள 1966 ஃபெராரி

சீனாவின் வுகான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அதனால் அதை பற்றி நான் கூற வேண்டியதில்லை. உலகளவில் பொருளாதாரம் மிக பெரிய அளவில் சரிவை சந்திந்து வருகிறது.

தற்போதைய மாடர்ன் கார்கள் கூட விற்பனையானது இல்லை... சுமார் ரூ.23 கோடியில் விற்கபட்டுள்ள 1966 ஃபெராரி

இதற்கு ஆட்டோமொபைல் துறை மட்டும் என்ன விதிவிலக்கா. இருப்பினும் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது விற்பனை மாடல்களை இணையம் மூலம் சந்தைப்படுத்தி வருவதுபோல் இணைய மூலம் அவ்வப்போது நடைபெறும் பழைய கார்களை ஏலம் விடுவதும் ஒருபுறம் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.

தற்போதைய மாடர்ன் கார்கள் கூட விற்பனையானது இல்லை... சுமார் ரூ.23 கோடியில் விற்கபட்டுள்ள 1966 ஃபெராரி

இதில் தான் தற்போது, முன்பு இதுவரை இல்லாத அளவில் 1966 ஃபெராரி 275 ஜிடிபி லாங்க் நோஸ் கார் ஒன்று மிக அதிக விலையில் இணையம் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபெராரி கார் சுமார் 3.08 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 23.04 கோடியாகும்.

தற்போதைய மாடர்ன் கார்கள் கூட விற்பனையானது இல்லை... சுமார் ரூ.23 கோடியில் விற்கபட்டுள்ள 1966 ஃபெராரி

இவ்வளவு அதிகமான விலையில் எந்த காரும் இதற்கு முன்பு இணையத்தில் விற்பனையானது இல்லை. இந்த வகையில் முன்னதாக இந்த இடத்தில் இருந்த 2003 ஃபெராரி என்ஸொ-வை இந்த 1966ஆம் ஆண்டை சேர்ந்த ஃபெராரி கார் தோற்கடித்துள்ளது. அந்த 2003 மாடல் ரூ.19.75 லட்சம் விலையில் விற்பனையாகி இருந்தது.

தற்போதைய மாடர்ன் கார்கள் கூட விற்பனையானது இல்லை... சுமார் ரூ.23 கோடியில் விற்கபட்டுள்ள 1966 ஃபெராரி

இந்த ஏலத்தை கூடிங் & கம்பெனி கடந்த வாரத்தில் நடத்தி முடித்துள்ளது. 2003ஆம் ஆண்டை சேர்ந்த ஃபெராரி காரும் முன்று மாதங்களுக்கு முன்பு தான் ஆர்எம் சோதெபி என்ற கார்களை ஏலம் விடும் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மூன்று மாதங்களில் அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மாடர்ன் கார்கள் கூட விற்பனையானது இல்லை... சுமார் ரூ.23 கோடியில் விற்கபட்டுள்ள 1966 ஃபெராரி

இத்தகைய ஏலம் விற்பனையால் மேற்கூறப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பெரிய அளவில் இலாபம் தான் என்றாலும், சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக கார்களை பாதுகாத்து வைத்திருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இத்தனை வருடங்களுக்கு பிறகும் பியான்கோ நிறத்தில் ஜொலிக்கும் இந்த 1966 ஃபெராரி காரின் உட்புறம் பழுப்பு நிற லெதரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மாடர்ன் கார்கள் கூட விற்பனையானது இல்லை... சுமார் ரூ.23 கோடியில் விற்கபட்டுள்ள 1966 ஃபெராரி

இந்த அதிகப்படியான விலைக்கு முக்கிய காரணம் 1966ல் வெறும் இரு ஃபெராரி 275 ஜிடிபி லாங்க் நோஸ் கார்கள் மட்டும் தான் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அதில் ஒன்று தான் இது. அதேபோல் ஃபெராரியின் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட டார்க் க்யூப் ட்ரைவ்ஷிஃப்ட் மற்றும் 6-கார்புரேட்டர் இண்டேக் தேர்வை கொண்ட 40 உதாரண கார்களில் இதுவும் ஒன்று.

Most Read Articles

மேலும்... #ஃபெராரி #ferrari
English summary
1966 Ferrari becomes most expensive car to be sold at online auction Fetches over Rs 23 crore (1966 Ferrari 275 GTB Long Nose)
Story first published: Friday, August 14, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X