இந்தியாவில் அடுத்ததாக விற்பனைக்கு வரவுள்ள முக்கிய 5 கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் கியா கேரன்ஸ் வரையில்...!

புதிய வருடத்தின் துவக்கத்தில் தான் பெரும்பான்மையானோர் புதிய காரை வாங்க விரும்புகின்றனர். புதிய வருடத்தில் புத்துணர்ச்சியாக புதிய வாகனத்துடன் அடியெடுத்து வைக்க யாருக்குதான் பிடிக்காமல் இருக்கும். இதனாலேயே ஆண்டு முடிவிலோ அல்லது புதிய ஆண்டின் துவக்கத்திலோ கார்களை அறிமுகப்படுத்த தயாரிப்பு நிறுவனங்கள் முயலுகின்றன.

அடுத்ததாக விற்பனைக்கு வரவுள்ள முக்கிய 5 கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் கியா கேரன்ஸ் வரையில்...!

ஒரு சில வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விரும்பமான காருக்காக நீண்ட காலம் காத்திருக்கலாம். அவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில், அடுத்ததாக இந்திய சந்தையில் அறிமுகமாக காத்திருக்கும் முக்கிய ஐந்து கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அடுத்ததாக விற்பனைக்கு வரவுள்ள முக்கிய 5 கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் கியா கேரன்ஸ் வரையில்...!

ஸ்கோடா ஸ்லாவியா

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா பிராண்டில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அடுத்ததாக வெளிவரவுள்ள செடான் கார், ஸ்லாவியா ஆகும். இந்தியாவில் இருந்தப்படி உலகளவில் வெளியீடு செய்யப்பட்ட ஸ்லாவியா இந்திய வாடிக்கையாளர்களின் இரசனைக்கும், இந்திய சாலைகளுக்கும் ஏற்ப எம்க்யூபி-ஏ0 இன் (இந்தியா) ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக விற்பனைக்கு வரவுள்ள முக்கிய 5 கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் கியா கேரன்ஸ் வரையில்...!

குஷாக் எஸ்யூவியை வடிவமைக்க பயன்படுத்தப்பட்ட இதே இயக்குத்தளத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்லாவியா, அதன் பிரிவிலேயே அளவில் பெரிய செடான் காராக விளங்கவுள்ளது. ஸ்கோடா குஷாக்கில் வழங்கப்படும் அதே 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லி டிஎஸ்ஐ என்ஜின் தேர்வுகளுடன் ஸ்லாவியா செடான் மாடலின் இந்திய அறிமுகத்தை வருகிற ஏப்ரல் மாதத்திற்குள்ளாக எதிர்பார்க்கிறோம்.

அடுத்ததாக விற்பனைக்கு வரவுள்ள முக்கிய 5 கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் கியா கேரன்ஸ் வரையில்...!

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ

பொதுவாக ஒரு காரின் புதிய தலைமுறை வெர்சன் நீண்ட வருடங்களுக்கு பிறகு அறிமுகமாக இருந்தால் எதிர்பார்ப்பு எழவே செய்யும். இத்தகைய எதிர்பார்ப்பு புதிய ஸ்கார்பியோவின் மீது எழ ஆரம்பித்துள்ளது. ஏனெனில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு இந்தியர்களின் ஃபேவரட்டான ஸ்கார்பியோ தற்காலத்திற்கு ஏற்ப முற்றிலுமாக அப்டேட் செய்யப்பட உள்ளது.

அடுத்ததாக விற்பனைக்கு வரவுள்ள முக்கிய 5 கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் கியா கேரன்ஸ் வரையில்...!

புதிய ஸ்கார்பியோவை மஹிந்திரா நிறுவனம் நடப்பு நிதியாண்டிற்குள் சந்தையில் அறிமுகப்படுத்தும் என கூறப்படுகிறது. எக்ஸ்யூவி700 மாடலுடன் புதிய ஸ்கார்பியோ மறைப்புகளுடன் பலமுறை சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்யூவி700 கடந்த சில மாதங்களுக்கு முன்பே விற்பனைக்கு வந்துவிட்டதால், புதிய ஸ்கார்பியோவின் அறிமுகத்தையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.

அடுத்ததாக விற்பனைக்கு வரவுள்ள முக்கிய 5 கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் கியா கேரன்ஸ் வரையில்...!

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்

பிஎம்டபிள்யூ பிராண்டில் இருந்து புதிய முழு-எலக்ட்ரிக் காராக ஐஎக்ஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் டாப் எக்ஸ்ட்ரைவ் 50 வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ள 105.2 kWh பேட்டரி தொகுப்பு சுமார் 611கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது. அதாவது, இந்த பேட்டரியினை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 611கிமீ தொலைவிற்கு பயணிக்கலாமாம்.

அடுத்ததாக விற்பனைக்கு வரவுள்ள முக்கிய 5 கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் கியா கேரன்ஸ் வரையில்...!

கம்பீரமான எஸ்யூவி ரக தோற்றத்தை கொண்டிருப்பினும், இந்த எலக்ட்ரிக் கார் 0-வில் 100kmph வேகத்தை வெறும் 4.6 வினாடிகளில் எட்டிவிடக்கூடியதாக உள்ளது. 515.6 பிஎச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டாரை பெற்றுவரும் ஐஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரினை வருகிற டிசம்பர் 13ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது.

அடுத்ததாக விற்பனைக்கு வரவுள்ள முக்கிய 5 கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் கியா கேரன்ஸ் வரையில்...!

சிட்ரோன் சி3

சி5 ஏர்க்ராஸ் காரின் மூலம் இந்திய சந்தையில் நுழைந்த, பிரெஞ்ச் கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் அதன் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காராக சி3 என்ற பெயர் கொண்ட மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. தற்போதைக்கு சிசி21 என்கிற குறியீட்டு பெயருடன் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டுவரும் சி3-யின் மூலம் போட்டி மிகுந்ததாக காணப்படும் இந்திய காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவில் சிட்ரோன் தனக்கென்று ஓர் இடத்தை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக விற்பனைக்கு வரவுள்ள முக்கிய 5 கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் கியா கேரன்ஸ் வரையில்...!

ஏனெனில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை மற்ற போட்டி மாடல்கள் அனைத்திற்கும் சவாலாக ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் முதல் காராக நெகிழ்வு-எரிபொருளை ஏற்கக்கூடிய என்ஜின் தேர்வை பெற்றுவரும் சிட்ரோன் சி3 மாடலின் அறிமுகத்தை அடுத்த 2022 ஜனவரியில் எதிர்பார்க்கிறோம்.

அடுத்ததாக விற்பனைக்கு வரவுள்ள முக்கிய 5 கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் கியா கேரன்ஸ் வரையில்...!

கியா கேரன்ஸ்

பிரபலமான மாருதி சுஸுகி எர்டிகா, மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்.எல்.6 உள்ளிட்டவற்றிற்கு விற்பனையில் போட்டியாக கியா கொண்டுவரும் 7-இருக்கை எம்பிவி கார் தான் கேரன்ஸ் ஆகும். கியா கார்னிவல் சொகுசு எம்பிவி காரை போல் அல்லாமல், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ள இந்த புதிய கியா எம்பிவி காரின் விலையை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சங்கள் வரையில் எதிர்பார்க்கிறோம்.

அடுத்ததாக விற்பனைக்கு வரவுள்ள முக்கிய 5 கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் கியா கேரன்ஸ் வரையில்...!

இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்ட புதிய கியா லோகோ உடன் உருவாக்கப்படும் கேரன்ஸ், கியாவின் மற்றொரு வெற்றிக்கரமான மாடலாக விளங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுகத்தை 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles
English summary
Top-10 Upcoming Cars In India
Story first published: Wednesday, December 8, 2021, 2:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X